சற்று முன்

டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |   

சினிமா செய்திகள்

தென்னிந்திய பிலிம் பேர் விருது: தமிழில் விருது பெற்றவர்களின் பட்டியல்
Updated on : 20 June 2016

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தென்னிந்திய பிலிம் பேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது.



 



இதில், மணிகண்டன் இயக்கிய "காக்கா முட்டை" திரைப்படம், தமிழில் சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.



 



தனி ஒருவன் படத்திற்காக மோகன் ராஜா சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். மேலும், சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும் (நானும் ரவுடிதான்), சிறந்த நடிகருக்கான விருதை விக்ரமும் (ஐ) பெற்றனர்.



 



சிறப்பு ஜூரி விருது ஜெயம் ரவி (தனி ஒருவன்) மற்றும் ஜோதிகா (36 வயதினிலே) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



 



சிறந்த இசையமைப்பாளர் விருது, ஐ படத்திற்காக  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக நடிகர் விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் பெற்றார்.



 



தனி ஒருவன் படத்திற்காக அரவிந்த் சாமிக்கு சிறந்த துணை நடிகர் விருதும், தங்கமகன் படத்திற்காக ராதிகா சரத்குமாருக்கு சிறந்த துணை நடிகை விருதும் வழங்கப்பட்டது.



 



சிறந்த பாடலாசிரியர் விருதை மதன் கார்கி பெற, சிறந்த பின்னை பாடகருக்கான விருதை சித் ஸ்ரீராமும், சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை ஸ்வேதா மோகனும் பெற்றனர்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா