சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்
Updated on : 12 February 2026

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான திரைப்படம் “வித் லவ் (With Love)”. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், அனஸ்வரா ராஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.



 



இன்றைய இளைஞர்களின் உணர்வுகள், உறவுகள் மற்றும் காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம், வெளியீட்டிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்களும் படத்தின் நவீன கதை சொல்லல் மற்றும் நடிப்பை பாராட்டியுள்ளனர்.



 



தற்போது அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படக்குழு பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் வரவேற்பிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.



 



பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது..,



மகேஷ் ஐயாவோட பல படங்களாக இந்தப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும், இது நல்ல படம் - ன்னு நீங்கள் நம்பினால், அதை முழு மனதோடு தூக்கிக்கொண்டு போய் ஒரு வெற்றிப் படமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய பெரிய நன்றிகள். இப்படத்தில் தயாரிப்பாளராக சௌந்தர்யா மேம் எங்களுக்கு கிடைத்தது, ஒரு பெரிய வரம்னு தான் நினைக்கிறோம். உண்மையிலேயே, நான் நீண்ட நாளா மனசுக்குள்ள வைத்திருந்த ஆசை – ரஜினி சாரை நேரில் சந்திக்கணும்ன்னு. அதை மகேஷ் ஐயாவிடம் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். சௌந்தர்யா மேடமிடம் சொன்னேன்.  அது இப்படத்தில் நடந்தது மகிழ்ச்சி.



 



ரஜினி சாரை பார்க்கும் போது வைரமுத்து சார் போல எப்படியாவது ஒரு கவிதை சொல்லி, சாரை இம்ப்ரெஸ் பண்ணணும்னு நினைச்சேன். உண்மையிலேயே அந்த கவிதை அவருக்கு ரொம்ப பிடிச்சது. என்னோட வாழ்நாள் கனவு நிறைவேறிச்சு.



 



இந்த படத்தில் ஒர்க் பண்ணிய ஒவ்வொருத்தருக்கும் நான் மனசார நன்றி சொல்லணும். மதன் – அடுத்த படம் இன்னும் கவனமா பண்ணணும். அபி – இது உன்னோட முதல் படம். அது ஜெயிக்கணும்னு நானும் ஷான் ஐயாவும் அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம். அது இப்போ நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. அனஸ்வராவுக்கு வாழ்த்துக்கள் ,  கடைசியாக, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் பெரிய நன்றி.



 



நடிகர் சரவணன் பேசியதாவது..,



இந்த படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன். அதே மாதிரி மகேஷ் சார், மேலும் இந்த படத்தின் முழு குழுவுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.இந்த படத்தில் என்னோட கேரக்டர் உண்மையிலேயே ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனாலும் அந்த சின்ன கேரக்டரையும் அழகாக எழுதி, அதைப் பாராட்டி, நிறைய ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் மனசார எழுதியிருந்தார்கள்.  என்னைப் பாராட்டிய எல்லாருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லக் கடன்பட்டிருக்கிறேன். இந்த படம் இன்னும் நல்ல படியாக, இன்னும் அதிக மக்களைச் சேரும் வகையில் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்  தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.



 



நடிகை ஆனந்தி பேசியதாவது..



நான் இந்த படத்தைப் பற்றி பேசும்போது, ஒரு நடிகராக இல்லாமல், ஒரு ஆடியன்ஸாக பேசணும்னு ஆசைப்படுறேன். நேத்து நைட்டுதான் இந்த படம் பார்த்தேன். ஒரு நல்ல படத்தில் நானும் ஒருத்தராக இருப்பது மகிழ்ச்சி.



 



இன்றைய தலைமுறை பற்றி ஒரு தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது அதை மாற்றி வேறு பார்வையில் இப்படம் நம்மிடம் காட்டுகிறது.



 



இந்த படம் அந்த Human Nature-ஐ ரொம்ப அழகாக, ரொம்ப மென்மையாக சொல்லுகிறது. “There are no bad people.But we all do bad things sometimes.”



 



அது நம்ம எல்லாருக்கும் நடந்திருக்கலாம்.ஆனா அதே சமயம், நம்மளுக்குள்ள வளர வாய்ப்பு இருக்கிறது அப்படிங்கிற கருத்து இந்த படத்துல ரொம்ப அழகா ஒரு காதல் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் ஒரு பங்காக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.



 



நடிகை காவ்யா பேசியதாவது..,



ஒரு புதுமுகமாக என்னை என் பெயர் சொல்லி பாராட்டிய அனைவருக்கும் நன்றி. என் கதாப்பாத்திரத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் படக்குழுவுக்கு என் நன்றி.



 



நடிகர் சச்சின் பேசியதாவது..,,



இப்படத்தில் பங்கு கொண்டது மிக மகிழ்ச்சி. இந்த மொத்தக்குழுவுக்கும் என் நன்றி. அபி மற்றும் அனஸ்வராவுக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.



 



நடிகை அனஸ்வரா பேசியதாவது..,



இந்த படம் ரொம்ப ரொம்ப அன்போட உருவக்கிய படம். அந்த அன்பை ஆடியன்ஸ் அப்படியே ஏற்றுக்கிட்டது தான் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம்.



 



“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக மதனுக்கு மனப்பூர்வமான நன்றி. அபியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். அபியுடன் உள்ள கெமிஸ்ட்ரியை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்கள் ரசித்தது ரொம்ப மகிழ்ச்சி.  சௌந்தர்யா மேடம், மகேஷ் அண்ணா, காவ்யா மற்றும் முழு நடிகர்–தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி.



 



இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரை  சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது. எங்கள் படத்தை இவ்வளவு அன்போட ஏற்றுக்கொண்ட  எல்லாருக்கும் நன்றி.



 



இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,



இந்தப்படத்துக்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. அபியை முதல் படம் செய்ய கஷ்டபட்ட காலத்திலிருந்து பார்க்கிறேன். அவனுடைய உழைப்பு 200 சதவீதம் இருந்தாலும் நீங்கள் அவனுக்கு  முழு ஆதரவு தந்திருக்கிறீர்கள் நன்றி. அபி மிக அழகான மனது கொண்டவர் அவர் மாற மாட்டார் என நம்புகிறேன். எனது கூட்டாளி மோகன்ராஜனுடன் தொடர்ந்து படங்கள் செய்கிறேன் அவருக்கு என் நன்றி.



 



இயக்குநர் மதன் இந்தக்கதை சொன்ன போதே இது வெற்றிப்படம் என்பது தெரியும், கதை சொல்லும் போது தடுமாறினாலும் படத்தில் மிக அழகாக அதை நிறைவு செய்துவிட்டார். அனஸ்வரா கேரக்டரை எழுதிய விதமும், அதை எடுத்த விதமும் அத்தனை அழகாக இருந்தது. அனஸ்வராவுக்கு படத்தில் நான் கை தட்டினேன் அவர் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்.



 



தயாரிப்பாளர் மகேஷ் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.  அவரைப் பார்த்தால் என் பையன் தான் ஞாபகம் வரும். குழந்தை மனது கொண்டவர். கண்டிப்பாக இன்னும் 3 படங்கள் ஹிட் தந்துவிடுவார். எங்களுக்கு முழு ஆதரவு தந்ததற்காக நன்றி. சௌந்தர்யா மேம், அவர் மிகத்தெளிவான சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய திட்டமிடல் இருக்கும். அவர் இன்னும் நிறைய சாதிப்பார் அதைக் காண ஆவலாக இருக்கிறேன்.



 



படத்தில் உழைத்த அத்தனை நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடிய மக்களுக்கு நன்றி.



 



இயக்குநர் மதன் பேசியதாவது..,



எல்லாருமே“இந்த படம் கண்டிப்பா ஒரு வெற்றி படம்” என சொன்னார்கள். அதே போல  படம் வெற்றியடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.மகேஷ் சார், சௌந்தர்யா மேடம்,  இருவருக்கும் பெரிய நன்றி.   அதே மாதிரி சரவணன் சார் டீம் உட்பட, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். தூக்கமில்லாமல் இப்படத்திற்காக உழைத்த என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி.  படத்தை கொண்டாடிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.



 





 



தயாரிப்பாளர் மகேஷ் பேசியதாவது..,



“நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.”நீங்கள் எல்லாரும் இல்லாம இந்த டீமும் இல்லை. அதனால ரொம்ப சந்தோஷம். பிரஸ் ஷோ முடிந்த பிறகு,நீங்கள் தந்த பாராட்டுக்களில் இருந்து தான் இந்த படம் உண்மையிலேயே take off ஆனது. இப்படத்தை மக்கள் மனதளவில் நெருக்கமாக கொண்டாடுகிறார்கள்.  



 



மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி  எனக்கு தெரியும். இந்தக் கதை சொல்லும்போதே, “இந்த படம் ஹிட்” எனத் தோன்றியது. அவன் கண்டிப்பாக அனஸ்வரா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். அனஸ்வரா நடிப்பை பார்த்த பிறகு அவர் எவ்வளவு பெரிய பலம் என்று புரிந்தது. அபி எனக்கு சொந்த  தம்பி. அபியை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப் பையன் மாதிரி பார்த்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஷான் தான் என் மூன்று படத்திற்கும் இசையமைப்பாளர். இதில் அனீஷா கேரக்டருக்கு அவரின் இசை அற்புதமாக இருந்தது. எங்கள் சின்ன டீமை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர்ஸ்டாருக்கு நன்றி.



 



சௌந்தர்யா அக்காவுடனான உறவு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அவர் எனக்கு எப்போதும் அக்கா தான். எங்களால் முடியாத பல விஷயங்களை ஒரு போன் கால்லஅவங்க முடிச்சு கொடுத்து விடுவார்கள்.அக்கா – ஒரு பெரிய சப்போர்ட். எங்கள் டீமின்தூண். அவருடன் இன்னும் நிறைய படம் செய்வேன். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெரிய நன்றி.



 



தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த்  பேசியதாவது..,



“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது”ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து தான் படத்தை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் சென்று விட்டார்.



 



“படம் முடிந்ததும், வீட்டிற்கு சென்றபோது அப்பா–அம்மா இருவரும் என்னை கட்டிப்பிடித்து சிரித்தார்கள். அப்போது தான் ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன்.  16–18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும், இந்த படத்தின் மூலமாக தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இது தான் முதல் சக்சஸ் மீட்.



 



“அபி எனக்கு ஒரு பேபி பிரதர். அந்த மனதிலிருந்து வரும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இங்கே நீண்ட காலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கையுடன் கூறினார். அனஸ்வராவை  எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள் என்று கேட்கத் தோன்றியது. இந்த படத்தில் அவர் மிக அழகாக நடித்துள்ளார். குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் அமைதியும், மழையை பார்த்து அவர்  சிரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தருணம்”



 



இயக்குநர் மதன் கதை சொன்னபோதே இது வெற்றி படம் என்ற நம்பிக்கை வந்தது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளும், இறுதியில் நான்கு கதாபாத்திரங்களும் ஒரே ஷாட்டில் சந்திக்கும் காட்சியும் முழுமையான டைர்கடர்ஸ் டச். அவரது  அடுத்த படத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.



 



இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு போட்டது பத்து நிமிடத்தில் உருவான இசை என்பது நம்ப முடியாத மாயை. அந்த மேஜிக் அவரால் மட்டுமே முடியும்.  பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், பிரஷாந்த் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்டஸை தாண்டி, மக்கள் தங்கள் படமாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” அனைவருக்கும் நன்றி.



 



நடிகர் அபிஷன் ஜீவிந்த் பேசியதாவது..,



“ரஜினி  சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும், அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது. இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்ப சொன்னது… அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது,”



 



நீங்கள்  படத்தை அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். நல்ல ரிவ்யூஸ், நல்ல வார்த்தைகள் – அதுதான் இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.



 



“என்னை ஹீரோவாக நம்பி இந்த இடத்துல நிற்க வைத்ததுக்கு மதனுக்கு ரொம்ப பெரிய நன்றி. உன்னை இந்த மேடையில்  பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்த பயணம் இன்னும் பெரியதாக இருக்கும் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குறித்து,“எப்போதும் எனக்கு கூடுதலாக வேலை செய்வார். ‘அபிக்காக இதை இன்னும் நல்லா பண்ணலாம்’ன்னு சொல்ற அந்த மனசு ரொம்ப ஸ்பெஷல். புகழை கூட அழகாக, ஈகோ இல்லாமல் கொடுக்கத் தெரிந்தவர், அவருக்கு நன்றி. பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், ஸ்ரேயாஸ், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும்  மனப்பூர்வமான நன்றி. அனஸ்வரா  எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப அழகாக ஒர்க் ஆனது. ஆடியன்ஸ் அதை ரொம்ப ரசிக்கிறார்கள். இந்த கூட்டணி அடுத்தும் தொடரும்.  காவியா, சச்சின், தேனி முருகன், சரவணன், ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.



 



தயாரிப்பாளர் மகேஷ் அண்ணா படம் ஹிட் ஆன பிறகும், ‘நான் எதாவது தவறு பண்ணினேனா ? ன்னு கேட்கும் அந்த மனசு எல்லாருக்கும் கிடைக்காது. அவர்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அது தான் இந்த உறவின் அழகு,” அவருக்கு என் நன்றிகள்.



 



சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு“‘சக்ஸஸ்  இப்படித்தான் இருக்குமா என்று  அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. மகேஷ் அண்ணா சௌந்தர்யா மேம் நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரிய படம் செய்கிறோம்.  இந்த படம் இன்றைக்கு மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த பயணத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா