சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

’மழை பிடிக்காத மனிதன்’ தலைப்பு கதைக்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது!
Updated on : 29 July 2024

ஒரு ஒளிப்பதிவாளர் தனது பார்வையை காட்சிகளாக மாற்றும் போது அந்த படைப்பின் காட்சிகள் யதார்த்தத்தை அடைகிறது. படத்தை இயக்கும் இயக்குநரே அதற்கு ஒளிப்பதிவு செய்யும்போது அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.



 



படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டபோது விஜய் மில்டன் பகிர்ந்து கொண்டதாவது, “தலைப்பு கதைக்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. படம் இன்னும் வெளியாகாததால் நிறைய விஷயங்களை என்னால் இப்போது பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இருக்கும் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும். அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு சிறப்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர். விஜய் ஆண்டனி எப்போதும் இயக்குநர்களின் நடிகர். இந்தப் படம் அவருக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை மெருகேற்றி உங்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார். 



 



இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், தாலி தனஞ்சயா, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார் மற்றும் விஜய் ஆண்டனி, கே.எல். பிரவீன் எடிட்டராகவும், கலை இயக்குநராக ஆறுசாமியும் பணியாற்றியுள்ளனர். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப், பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா