சற்று முன்

அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |   

சினிமா செய்திகள்

‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!
Updated on : 05 November 2024

திறமையான கலைஞர்களை அரவணைத்து, அவர்களின் திறமைகளை  வெளிப்படுத்தும் வாய்ப்புகளை தமிழ் திரையுலகம் தவறாமல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் இருந்து வரும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளனர்.  இதில் நடிகை ரோஸ்மினும் விரைவில் இணையவுள்ளார். நடிகர் திலீப்பின் ‘பவி கேர் டேக்கர்’ திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பிற்காக மலையாள ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் ரோஸ்மின். 



 



அவர் இப்போது இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரோஸ்மின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



 



நடிகை ரோஸ்மின் தனது முதல் தமிழ் திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்டதாவது, "சில அனுபவங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. என்னுடைய கரியரில் முக்கியமான கட்டத்தில் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். கோலிவுட்டில் எனது பயணத்தைத் தொடங்கி வைக்கும்படியான இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா சாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாது நிறைய புது விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்" என்றார். 



 



கோலிவுட்டில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது, "நான் சினிமாவை நேசிப்பவள். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை உள்ளது. அது எனக்கு இன்ஸ்பிரேஷன்" என்றார். 



 



கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ள ரோஸ்மின் மாடலிங் துறையிலும் தடம் பதித்தார். அங்கிருந்து நடிப்புத் துறையில் நுழைந்தார்.



 



அவர் ஏற்கனவே 'மிஸ் மலபார் 2022' பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து மிஸ் குயின் கேரளா 2023 இல் முதல் இடம் மற்றும்  மிஸ் சவுத் இந்தியா 2023 இல் இரண்டாவது இடமும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா