சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள 'சைலண்ட்' பட டிரெய்லர் வெளியீடு!
Updated on : 27 November 2024

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், தோ.சமயமுரளி திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது. 



 



உடை மற்றும் நடவடிக்கைகளில் பெண்ணாக தோற்றத்தை மாற்றிக்கொண்ட  ஒருவன் , தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம்  ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பதை பரபரப்பாக சொல்லும் திரைப்படம் தான் சைலன்ட். 



 



புதுமையான டிரெய்லர் இப்படத்தின் கதையின் மையத்தை வெளிப்படுத்துவதுடன், படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.



 



இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார். 



 



மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், தோ.சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 



 



இப்படத்திற்கு சேயோன் முரளி  ஒளிப்பதிவு செய்ய, சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையர் தோ.சமயமுரளி I.R.S இசையமைத்துள்ளார்.



 



“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படம் வரும் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 



 



SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.



 



“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. 



 



SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா