சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

இசைஞானி பாராட்டிய இசையமைப்பாளர் C.சத்யா
Updated on : 09 May 2015

கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா  ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலுக்கு  முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியக்களுக்கு இசையமைத்துள்ளார்.


எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு. நெடுஞ்சாலை,பொன்மாலை பொழுது, இவன் வேற மாதிரி,  கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா -  2 போன்ற ஹிட்  படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


இப்போது  அசுரகுலம், மானே தேனே பேயே, கிட்ணா மற்றும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அசுரகுலம் படத்தில் “ பொல்லாத பொம்பள” என்ற பாடலை நடிகர் தம்பி ராமைய்யாவை பாட வைத்திருக்கிறார்.


இதுவரை மெம்மையான பாடல்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த சத்யா காஞ்சனா - 2 படத்தில் இடம்பெற்று ஹிட்டான “ சில்லாட்ட பில்லாட்ட” பாடல் மூலம் தனக்கு  குத்து பாடல்களுக்கும் இசை அமைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.


கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை பார்த்த இளையராஜா, கார்த்திக் ராஜா இருவரும் படத்தின் Re recording ரொம்ம நல்லா இருக்கு என்று பாராட்டினார்கள்.


இசைஞானி இளையராஜா பாராட்டியது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் இன்னும் சிறப்பாக இசையமைக்க ஊக்கமாகவும் இருந்தது என்கிறார் சத்யா.


மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இசை ஆல்பம் ஒன்றையும்  உருவாக்க உள்ளார்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா