சற்று முன்

பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |    முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |    டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு   |    Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!   |    மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |   

சினிமா செய்திகள்

உதவி இயக்குநர்கள் படம் இயக்க வாய்ப்பளிக்கும் ஆரி!
Updated on : 01 July 2016

நெடுஞ்சாலை, மாயா போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆரி, உதவி இயக்குநர்கள் படம் இயக்க வாய்ப்பளிக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.



 



"ஆரிமுகம்" என பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் கிரியேட்டி ஹெட்டாக ஆரி பொறுப்பேற்றுள்ளார்.



 



இதுதொடர்பில் கூறிய நடிகர் ஆரி, "தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சினிமா இயக்கும் கனவுகளோடு ஏராளமான இளைஞர்கள் சென்னைக்கு படையெடுக்கின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகே அவர்களுக்கு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி இரண்டு, மூன்று படங்களில் இயக்கத்தைக் கற்றுக்கொண்டு, தான் இயக்குநராவதற்காக பெரிய போராட்டமே வாழ்க்கையோடு நடத்த வேண்டி உள்ளது.



 



அப்படி போராடும் உதவி இயக்குநர்களுக்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பை வழங்க உள்ளேன். அதற்காக ஆரிமுகம் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இந்த நிறுவனம் மூலம் நூறு ஆளுமைகளை சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளேன். அதில் சினிமாவின் அனைத்து துறையை சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளேன்.



 



பெரும்பாலான உதவி இயக்குநர்கள் தங்கள் கதையை ஒரு பத்து நிமிட குறும்படமாக எடுக்க பெரும் சிரமப்படுகின்றனர். அந்த பத்து அல்லது முப்பது நிமிட குறும்படத்தை எடுப்பதற்கான செலவையும் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும் எனது ஆரிமுகம் நிறுவனம் உதவும். மேலும், உதவி இயக்குநராக சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ள 1700 பேர் மட்டுமே இந்த நிறுவனத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர்.



 



இந்த 1700 பேரிலிருந்து ஒருவருக்கு முதலில் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா