சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் அசத்தலான போஸ்டர் வெளியானது!
Updated on : 22 March 2025

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  “டாக்சிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”, வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி, உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உகாதி, குடி பட்வா, சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் நாளில் வெளியாகவுள்ளதால், இந்தியாவில் நான்கு நாட்கள் நீடிக்கும் விடுமுறை வார இறுதி மூலம் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு மார்ச் 20/21 ஆம் தேதி இஃப்தார் பண்டிகையும் வருவதால்,  ரசிகர்கள் கொண்டாட இது ஏதுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.



 



இந்தத் திரைப்படம் கன்னட சினிமாவுக்குப் புதிய உயரங்களைத் தரவுள்ள அதே சமயத்தில், உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. கன்னட மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் முதல் பெரிய இந்தியத் திரைப்படம் என்பதாலேயே ‘டாக்சிக்’ திரைப்படம், உலக நாடுகளை இணைக்கும் பாலமாக செயல்பட உள்ளது. இந்திய மற்றும் சர்வதேச சினிமாவின் திறமையான கலைஞர்கள் இப்படத்தில்  ஒருசேர பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது, இதன்மூலம் அனைத்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிக்க உள்ளது.



 



படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் விதமாக ஒரு அசத்தலான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், நெருப்பிலிருந்து எழும்பும் யாஷின் அதிரடியான தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இது சுவாரஸ்யமான கதைப் பின்னணியை விவரிக்கிறது. இந்தப் போஸ்டர், யாஷின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட டீசருக்கு பின்னர், ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.



 



இந்த மாபெரும் படைப்பை இயக்கும் இயக்குநர் கீது மோகந்தாஸ், சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ஆவார். சண்டேன்ஸ் திரைப்பட விழாவில், திரைப்படங்கள் உணர்ச்சி மிகுந்த கதை மாந்தர்களைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டதற்காக, பல்வேறு விருதுகளை வென்றுள்ளன.



 



வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations  நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம்,  2026 மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா