சற்று முன்

பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |    முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |    டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு   |    Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!   |    மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |   

சினிமா செய்திகள்

பைசா இசையமைப்பாளரின் நம்பிக்கை!
Updated on : 01 July 2016

ஸ்ரீராம், ஆரா, நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் அப்துல் மஜீத் இயக்கியுள்ள "பைசா" திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.



 



இந்த படத்திற்கு ஜேம்ஸ் விக்டர் (ஜே.வி) இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.  லண்டனின் புகழ் பெற்ற ட்ரினிட்டி இசை கல்லூரியில் பயின்ற ஜேவி பியானோ இசையில் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



"என் நண்பர்களின் மூலம் அறிமுகமான இயக்குனர் அப்துல் மஜீத் தான் எனக்கு பைசா படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்று தந்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பைசா இசை ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் இருந்தாலும், கதைக்கேற்ப படத்தில் மூன்று பாடல்கள் தான் சேர்க்கப்பட்டுள்ளன.



 



அவற்றுள் 'பெண்ணே பெண்ணே' என்னும் நா முத்துக்குமாரின் வரிகளில் உருவாகிய பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு குப்பை அள்ளும் இளைஞனின் காதலை மிக எளிமையான முறையில் வெளிப்படுத்தும் உணர்வு தான் இந்த பாடலின் சிறப்பு.  காஞ்சனா 2 படத்தின் 'சில்லாட்ட, பில்லாட்ட' பாடலை பாடிய ஜெகதீஷ் மற்றும் ஹேமா அம்பிகா இந்த பாடலை பாடியுள்ளனர்.



 



பைசா படத்தின் பாடல்கள் யாவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவது போல், பைசா திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்" என்று இசையமைப்பாளர் ஜே வி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா