சற்று முன்
சினிமா செய்திகள்
ஜியோ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 24 முதல் ப்ளாக்பஸ்டர் 'எம்புரான்' ஸ்ட்ரீமாகிறது!
Updated on : 25 April 2025

மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “எம்புரான்” வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மோகன்லால் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகியுள்ளார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, ஜிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிகுட்டன், அனீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
கேரளாவின் அரசியல் களத்திலிருந்து ஸ்டீபன் நெடும்பள்ளி திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பம் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு மத்தியில், அவர் உலகமே தேடும் குரேஷி ஆப்ரஹாமாக எப்படி மாறினார் என்பதை இந்தப் படம் ஆராய்கிறது. லூசிஃபர் சம்பவங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுளின் சொந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவாகி வருகிறது, அதே நேரத்தில் மக்கள் நீண்ட காலமாக மறைந்துபோன தங்கள் தலைவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்டீபன் இப்போது எங்கே? அவர் தனது தாயகத்தைக் காப்பாற்றத் திரும்புவாரா? உண்மையில் குரேஷி ஆப்ரஹாம் யார்? இந்தக்கேள்விகளுக்கான பதில் தான் இப்படம்.
பரபரக்கும் சம்வங்கள், அதிரடி ஆக்சன், கண்ணைப்பறிக்கும் விஷுவல்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் இருக்க வைக்கும், ஆக்சன் திரில்லராக இப்படம் புது அனுபவம் தருகிறது.
ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பு கலைஞர் அகிலேஷ் மோகன், இசையமைப்பாளர் தீபக் தேவ் ஆகிய முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில், எம்புரான் திரைப்படம் ஏப்ரல் 24 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த பிரமாண்டமான சினிமா அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்.
சமீபத்திய செய்திகள்
ஓடிடி தளத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'டார்க் ஃபேஸ்’!
ஓடிடி தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்களில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் தொடர்கள் மொழிகளை கடந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) என்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் திகைக்க வைக்கும் திருப்பங்களுடனும், யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் காட்சிகளுடனும் உருவாகியுள்ளது.
The Chosen One நிறுவனம் சார்பில் அபு கரீம் இஸ்மாயில் தயாரித்துள்ள ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) இணையத் தொடரை அறிமுக இயக்குநர் சரண்பிரகாஷ் இயக்கியுள்ளார். சுமார் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள சரண்பிரகாஷ், 15-க்கும் மேற்பட்ட வீடியோ இசை ஆல்பங்களுக்கு இசையமைத்து இயக்கவும் செய்திருக்கிறார். இத்தொடர் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் சரண்பிரகாஷ், இயக்கி, இசையமைத்திருக்கிறார். பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மூத்த வழக்கறிஞராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், இதுவரை நடித்திராத பாணியில் நடித்திருக்கிறார். அவரது மகள் ஒய்.ஜி.மதுவந்தி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பெண்கள் விடுதியின் காப்பாளராக நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ராஜவேல், செளமியா, தயாரிப்பாளர் அபு கரீம் இஸ்மாயில், யெஸ்வந்த், சக்தி, சுனில் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், The Chosen One தயாரிப்பு நிறுவனம் மற்றும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) இணையத் தொடரின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் அறிமுக விழா ஏப்ரல் 24 ஆம் தேதி, சென்னை வாணி மஹாலில் நடைபெற்றது. இதில், இணைத் தொடர் குழுவினருடன் பிரபல இயக்குநர் லிங்குசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
‘டார்க் ஃபேஸ்’ இணையத் தொடர் குறித்து இயக்குநர் சரண்பிரகாஷ் பேசுகையில், “கற்பழிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்படுகிறார். அவர் கற்பழித்ததாக சொல்லப்படும் பெண் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ள, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து வாதாடும் மூத்த வழக்கறிஞர் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். இதனால், அவர் கொண்டாடப்படுகிறார். அவருக்கு பல விருதுகளும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு சில தினங்கள் முன்பு தனக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த வழக்கறிஞரை சந்திக்க வேண்டும், என்ற தனது கடைசி ஆசையை கைதி தெரிவிக்க, அவரது ஆசைப்படி மூத்த வழக்கறிஞர் அவரை சந்திக்கிறார். அப்போது கைதி கூறும் சில விசயங்களால், குற்றமற்ற ஒருவருக்கு தான் தண்டனை வாங்கிக் கொடுத்ததை உணரும் வழக்கறிஞர், காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பை தவிர்த்துவிட்டு, கைதியின் கண்ணோட்டத்தில் வழக்கை பார்க்கும் போது, கற்பழிப்பு வழக்கு மற்றும் தற்கொலைக்கு பின்னாள் மிகப்பெரிய சதித்திட்டமும், மர்மமும் நிறைந்திருப்பதை உணர்கிறார். அது என்ன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களை வழக்கறிஞர் எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை பரபரப்பாக சொல்வது தான் ‘டார்க் ஃபேஸ்’.
7 எப்பிசோட்களும் யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தவையாக இருக்கும். நான் சொன்ன விசயங்கள் தொடரின் கதைச்சுருக்கம் தான், ஆனால் திரைக்கதையில் யோசித்துப் பார்க்க முடியாத திருப்பங்களும், சஸ்பென்ஸும் இருக்கும்.” என்றார்.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், “டார்க் ஃபேஸ் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் லிங்குசாமி மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. வெப் சீரிஸ் என்பது ஐபில் கிரிக்கெட் மாதிரி. இந்திய அணியில் விளையாடுவோம் என்று நினைத்து கூட பார்க்காதவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது ஐபிஎல் கிரிக்கெட் தான். அதுபோல், வெப் சீரிஸ் மூலம் பல இளைஞர்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில், இயக்குநர் சரண்பிரகாஷும் ஒரு சிறப்பான வெப் சீரிஸ் எடுத்திருக்கிறார். நான் நடித்திருப்பதால் சொல்லவில்லை. இதில் நான் நடிக்க வேண்டும் என்பதற்காக அவர் என்னை அனுகியபோது, இது மிகவும் சிறிய பட்ஜெட் என்று சொன்னார். சரி அவர் சொல்லும் கதையை கேட்போம், என்று கதை கேட்டதும் பிரமித்து விட்டேன். அவர் சொன்ன பட்ஜெட் தான் சிறியது, ஆனால் அவர் சொன்ன கதை மிக பிரமாண்டமானதாக இருந்தது. 200 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் படங்களை பிரமாண்ட படங்கள் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். சப்ஜெக் தான் பிரமாண்டமாக இருக்க வேண்டும், மக்கள் மனதில் எந்த அளவுக்கு நிற்கிறதோ அது அது தான் பிரமாண்டாம். அந்த வகையில், இந்த கதை சோதனை முயற்சியான கதையாக இருந்தது.
நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்ப்பு பெற்று தூக்கு தண்டனை பெற்ற ஒருவர், கடைசி நேரத்தில் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பது தான் கதை. இந்த கதை காலம் காலமாக ஜெயிக்க கூடிய கதை. அப்படிப்பட்ட கதையில் எனக்கு மிக முக்கியமான வேடம் கொடுத்திருக்கிறார். மூத்த வழக்கறிஞர் வேடம். நான் தான் அந்த இளைஞருக்கு தூக்கு தண்டனை பெற்று கொடுக்கிறேன். பிறகு அவர் மீது இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவனை காப்பாற்றுவதற்காக போராடுவதும் நான் தான். இந்த வேடம் ரொம்ப இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன். படப்பிடிப்பு தொடங்கியதும் எனக்கு 80 மற்றும் 90-களில் நான் நடித்த காலக்கட்டங்கள் தான் நினைவுக்கு வந்தது. அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக, குறைந்த நாட்களில் படப்பிடிப்பை முடித்தார். தேவையில்லாத விசயங்களை எடுக்காமல், எது தேவையா அதை மிக தெளிவாக எடுத்திருக்கிறார். இதற்கு ஸ்பேஷல் நன்றி நம்ம கேமராமேனுக்கு சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு தேவையான டார்க் ஃபேஸை அவர் ரொம்ப அழகாக கொடுத்திருக்கிறார். அதேபோல் இயக்குநர் சரண்பிரகாஷ் மிக தெளிவாக இருந்தார். இது தான் எடுக்க வேண்டும், இதன் பிறகு இது தான் என்பதில் மிக தெளிவாக இருந்தார், அவருக்கு உறுதுணையாக இருந்த இணை இயக்குநர் குணாவின் பணியும் பாராட்டும்படி இருந்தது. உடன் நடித்த ராஜவேல், யெஷ்வந்த் என அனைவரும் ஒரு குழுவாக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் நடிகராகவும் தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவன் எப்படி காப்பாற்றப்படுகிறான், என்பதை 7 எப்பிசோட்களாக, மிக சுவாரஸ்யமாக சரண்பிரகாஷ் சொல்லியிருக்கிறார். இன்று நாட்டில் பல சம்பவங்கள் இதுபோல் நடப்பதால், நிச்சயம் இது ரசிகர்களை கவரும். முன்னணி ஓடிடி-யில் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கு பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், “அபு எனக்கு போன் செய்து இப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று சொன்னார், படமா, வெப் சீரிஸா என்று எதுவும் தெரியாது. பிறகு அவர் ஒரு போஸ்டர் அனுப்பினார், டார்க் ஃபேஸ் என்ற அந்த போஸ்டரில் ஒய்.ஜி.மகேந்திரன் சார் இருந்தார், உடனே ஒகே சொல்லி வந்து விட்டேன். இங்கு வந்த பிறகு தான் ‘பையா’ மற்றும் ‘வாரியர்’ படங்களில் என்னுடன் பணியாற்றியவர்கள் இந்த வெப் சீரிஸில் பணியாற்றியிருப்பது தெரிந்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது.
அபு நட்புக்காக உயிரையும் கொடுக்க கூடியவர். நான் சிங்கப்பூரில் இறங்கினேன் என்றால், திரும்ப சென்னைக்கு வரும் வரை எனக்கு எல்லாமுமாக அவர் உடன் இருப்பார். அந்த அளவுக்கு சிறந்த நண்பர். அவரை சண்டைக்கோழி படத்தில் நடிக்க வைத்தேன். அவர் தலையில் தேங்காய் உடைப்பது போல காட்சி எடுத்தோம். இன்று அவர் நான்கு பூஜைகளுக்கு தேங்காய் உடைத்து விட்டார். மகிழ்ச்சியாக இருக்கிறது, அபுவின் இந்த பயணம் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த முதல் நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்துவிட்டார், தக் லைப் படத்தைப் போல் மிக பிரமாண்டமாக செய்து விட்டார். இதில் நடித்திருக்கும் ராஜவேல், செளமியாவுக்கு வாழ்த்துகள். இயக்குநர் அருண்பிரகாஷ் வீடியோ ஆல்பங்கள் இயக்கியிருக்கிறார். இது தான் அவருக்கு முதல் வெப் சீரிஸ், இதில் அவர் வெற்றி பெற்று விரைவில் திரைப்படங்களும் இயக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.
ஒய்.ஜி.மகேந்திரன் சாருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதே வாணி மஹாலில் அவரது பல நாடகங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ரஜினி சார், கமல் சார், சிவாஜி சார் என ஜாம்பவான்களுடன் நடித்தாலும், பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும், கலை என்று வந்துவிட்டால் அவரிடம் இருக்கும் அந்த ஃபேஷன் வியக்க வைக்கிறது. இப்போதும் ‘மாநாடு’ உள்ளிட்ட பல படங்களில் அவர் சிறப்பாக நடித்து வியக்க வைக்கிறார். மிஷ்கின் உள்ளிட்ட தற்போதைய காலக்கட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார். நான் தான் அவரை மிஸ் பண்ணியிருக்கேன், நிச்சயம் விரைவில் அவர் என் படத்தில் நடிப்பார். இந்த வெப் சீரிஸ் சாரின் நடிப்பால் நிச்சயம் ரசிகர்களின் கனவத்தை ஈர்க்கும். தயாரிப்பாளர் அபுவை மீண்டும் வாழ்த்துகிறேன். அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஊடகங்கள் துணை நிற்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் தொடர்களுக்கு என்று வழக்கமாக இருக்கும் பாணியை தவிர்த்துவிட்டு திரைக்கதையில் பல புதிய யுக்திகளை கையாண்டிருந்தாலும், அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரியும்படி தொடரை இயக்கியிருக்கும் இயக்குநர் சரண்பிரகாஷ், இத்தொடர் வெளியீட்டுக்குப் பிறகு திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அதற்கான அறிவிப்பை ‘டார்க் ஃபேஸ்’ வெளியீட்டுக்குப் பிறகு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
7 எப்பிசோட்கள் கொண்ட ’டார்க் ஃபேஸ்’ (Dark Face) இணையத் தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டை தொடர்ந்து விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாக உள்ள நிலையில், அதன் பிறகு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
பொதுவாக ஈழத் தமிழர்கள் படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும் - சசிகுமார்
நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், '' எனக்கு இந்த மேடை மிக முக்கியமான மேடை. 'ஈசன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து..' எனும் பாடலை நாங்கள் எந்த படத்திற்காக எழுதினோமோ.. அந்தப் படத்தில் இருந்து அந்தப் பாடலை நீக்கி விட்டார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எனக்கு போன் செய்து, 'ஈசன் படத்தில் 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடல் இடம்பெறுகிறது. சசிகுமார் சாருக்கு அந்த பாடல் மிகவும் பிடித்து விட்டது' என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த தருணங்கள் இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் ஸ்டுடியோவில் சசிகுமாரிடம் என்னை அறிமுகப்படுத்திய பிறகு , 'அவர் பாடல் சிறப்பாக இருக்கிறது' என வாழ்த்தினார். அந்த வாழ்க்கை என்னால் மறக்க இயலாது. அந்தப் பாடல் எனக்கான அடையாளமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து யுவன் சார் ஸ்டுடியோவில் ஒருவர் என்னை சந்தித்து நான் பட தயாரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு வாய்ப்பு தருவேன் என்று வாக்குறுதி தந்தார். அவர்தான் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். அவர் தயாரித்த 'குட்நைட் ' படத்தில் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பையும் வழங்கினார். அவர் தயாரிப்பில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நானும் பணியாற்றியதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு நாயகன் சசிகுமார் என்று சொன்னவுடன் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தின் பாடல்களை எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதேபோல் இயக்குநர் அபிஷனும் கதையை சொன்னது போல் எடுத்திருக்கிறார். சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ஒரு படம் சிறப்பாக உருவாகும் போது தான் அதனை நாம் கொண்டாட முடியும். இந்தப் படத்தின் இயக்குநர் அபிஷன் சின்ன பையன் தான். இருந்தாலும் மிகப்பெரிய இயக்குநராக வருவார். சசிகுமார் இப்படத்தில் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மற்றொரு தயாரிப்பாளர் மகேஷ் ராஜும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மொட்டை மாடியில் ஒரு பாடலை பாடுவார். அந்தப் பாடல் யூடியூப்பில் பிரபலமானது. அந்த பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இவருடன் இணைந்து எப்போது நாம் பணியாற்றுவோம் என ஆவலுடன் காத்திருந்தேன். இயக்குநர் பொன் குமார் மூலம் '1947' எனும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினோம். 'குட்நைட்' படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படத்தில் உள்ள எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது. மிகவும் மகிழ்ச்சி. அவருடன் ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றும் அனுபவமே சிறப்பானது. அவருடைய பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
'குட்நைட் ', ' லவ்வர் ' ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வெளியாகிறது. ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள். இதற்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும். படம் வெளியாவதற்கு முன் படத்தைப் பற்றிய பேச்சு இருக்கிறது. படம் வெளியான பிறகும் இந்த பேச்சு நீடிக்கும். இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பணியாற்றி அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், '' குட்நைட் - லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எங்களின் மூன்றாவது படம். இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறோம். இந்த படமும் ஹிட் ஆகும் என நம்புகிறேன்.
சசிகுமாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்- நடிகர் என பிரபலமாக இருக்கும் அவர் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்ததற்கு நன்றி. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்து, அவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவோம் என நம்புகிறேன்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பொருத்தவரை இது ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர் அபி என்னை சந்தித்து கதையை சொல்லும்போது அவருக்கு 23 வயது தான். கதையை இடைவேளை வரை கேட்கும்போது அதிர்ச்சியாகி விட்டேன். முழு கதையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அந்தக் கதையை கேட்டதும் இயக்குநர் அபியை எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்திருந்தது. அந்தக் கதையில் அவர் சொன்ன விசயங்கள் ஜீவன் உள்ளதாக இருந்தது. அவர் கதையை எப்படி சொன்னாரோ... அதை அப்படியே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். நல்ல படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை நாங்கள் குடும்பமாக இணைந்து உருவாக்கினோம். மே மாதம் முதல் தேதி அன்று இப்படத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். ஆதரவு தாருங்கள்.
இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் அற்புதமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது பல காட்சிகளுடன் நம்மால் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். இதற்கு இவரின் இசை உதவி செய்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், நடிகைகளும் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'குட்நைட் ','லவ்வர்' என்ற இரண்டு படத்திற்கும் வெற்றியை வழங்கி இருக்கிறீர்கள். அதனைத் தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தையும் வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்'' என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், '' குட்நைட் - லவ்வர் ஆகிய இரண்டு படங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவால் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'யை உருவாக்க முடிந்தது. இதற்காக முதலில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் அபிஷன் கதையை சொல்லத் தொடங்கியதும் ஐந்தாவது நிமிடத்தில் ஒரு 'மொமென்ட்ஸ்' வரும். அதைக் கேட்டவுடன் இந்த படத்தை நிச்சயம் தயாரிக்கலாம் என்றேன். அந்தத் தருணத்தில் இந்த படம் எப்படி வரும் என்று நான் நினைத்திருந்தேனோ.. அதேபோல் இயக்குநர் அபிஷன் உருவாக்கி இருந்தார். இந்த வயதில் இவ்வளவு பெரிய கடின முயற்சியை நான் கண்டதில்லை. அவர் எதிர்காலத்தில் மிக சிறப்பான இயக்குநராக வருவார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும். திரை உலகில் அவருக்கு பேராதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
சசிகுமார் இல்லை என்றால் நாங்கள் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டோம். 16 வயதுடைய மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் இவரைத் தவிர வேறு யாரும் எங்களின் நினைவுக்கு வரவில்லை. இந்தக் கதையை புரிந்து கொண்டு கதையின் நாயகனாக நடிப்பதற்கு ஒரு துணிச்சல் தேவை. அதை மேற்கொண்டு எங்களுக்கு ஆதரவு அளித்த சசிகுமாருக்கு நன்றி.
மோகன் ராஜனின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சில கலைஞர்கள் இல்லை என்றால் படம் உருவாக்க வேண்டாம் என நினைப்பேன் . அத்தகைய கலைஞர்கள் தான் மோகன் ராஜன் - ஷான் ரோல்டன் - பரத் விக்ரமன். எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் அனைத்து படங்களிலும் இவர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். சில படங்களுக்கு இசையை தவிர்த்து விட்டு ரசிக்க முடியாது. எந்த கதையை நான் கேட்டாலும் முதலில் இதில் ஷான் ரோல்டனின் இசை எப்படி இருக்கும் ... என்ன மாயஜாலம் செய்யும் ... என்று தான் யோசிப்பேன். அப்படி யோசித்துக் கொண்டுதான் கதையையே கேட்பேன். இதுவரை நான் கேட்ட கதைகளுக்கு நான் நினைத்ததை விட அற்புதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். இதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகேஷ் என் பார்ட்னர். பொதுவாக இரண்டு பேர் இணைந்து பணியாற்றினால் கிரியேட்டிவ் டிஃபரன்ஸ் வரும். ஆனால் மகேஷ் நான் என்ன நினைத்து செய்தாலும் அதற்கு முழு பக்க பலமாக இருப்பார். நாங்கள் இதுவரை இரண்டு படங்களை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறோம். இப்பொழுது மூன்றாவது படத்தில் இணைந்திருக்கிறோம். மகேசின் ஆதரவு இல்லை என்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் யாரையும் எந்த ஒரு தருணத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தாது என்பதை மட்டும் நான் இங்கு உறுதியாக சொல்கிறேன். இந்தத் திரைப்படம் எங்கள் குழுவினரின் நேர்மையான முயற்சி. அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அன்பை கொடுக்கும். ரசிகர்களை கவர்வதற்கான அனைத்து விசயங்களும் இப்படத்தில் உள்ளது. மே முதல் தேதி அன்று வெளியாகிறது. நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசுகையில், '' பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது திரைப்படத்தை இயக்குவது தான் லட்சியம் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு புள்ளிக்குப் பிறகு நான் யாரிடமும் பணியாற்றாமல் கதை எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய கதையை எந்தவித தயக்கமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் கேட்டனர். கதையை கேட்ட பிறகு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள் மகேஷ் - யுவராஜ் ஆகியோருக்கு என் முதல் நன்றி.
படத்தின் முதல் பாதி கதையை கேட்டதும் தயாரிப்பாளர் யுவராஜ் இப்படத்தை உருவாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் அற்புதமானது.
இப்படத்திற்கு சசிகுமார் தான் ஹீரோ என நிச்சயத்துக் கொண்டு அவரை சந்தித்து கதை சொல்லப் போனேன். கதையை அவரிடம் சொல்லும் போது அவர் எந்த ரியாக்ஷனையும் காண்பிக்கவில்லை. அதன் பிறகு நான் சற்று சோர்வடைந்தேன். அன்று மாலை தயாரிப்பாளர் யுவராஜ் போன் செய்து சசிகுமார் சாருக்கு கதை பிடித்து விட்டது என சொன்னார். அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
இப்படத்தில் குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கு சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதில் முதன்மையானவர் ஷான் ரோல்டன். அவரின் இசை இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்த
படத்தின் மூலம் எனக்கு பாராட்டு கிடைத்தால்.. அதில் 50 சதவீதம் ஷான் ரோல்டனைத்தான் சாரும். அந்த அளவிற்கு இந்த படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார்.
மோகன் ராஜனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் சிலிர்ப்பானது. 'முகை மழை' என்ற வார்த்தைக்கு அவர்தான் பொருள் சொல்லி புரிய வைத்தார். ஷான் ரோல்டன் - மோகன் ராஜன் ஆகிய இருவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்.
சிம்ரன் மேடம் போன்ற அனுபவம் மிக்க நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. மிதுன் ஜெய் சங்கர் - கமலேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், '' இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் நிறைய நடந்தது. அதனால் முதலில் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் என்னிடம் எப்போது நம்பர் ஒன் ஆக வரப்போகிறீர்கள் ? என கேட்கிறார்கள். நான் அதற்காக வரவில்லை. நல்ல படைப்புகளுக்கு இசையை வழங்கி அதனை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் மூலமாக கிடைக்கும் நல்ல விசயங்கள் தான்.. என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
திடீரென்று உயரத்திற்கு சென்று விட்டால்... அந்த உயரத்தில் நின்று கொண்டு, அந்த உயரத்தை தக்க வைப்பது என்பது கடினமான செயல். பலர் பல ஐடியாக்களை சொல்வார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை இசை இந்த சமூகத்திற்கு எப்படி பலன் அளிக்க வேண்டும். எந்த மாதிரியான இசையை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது போன்ற சிந்தனையை கொண்டவன் நான். அந்த வகையில் நான் இதுவரை என்னுடைய சினிமா இசை பயணத்தில் சந்தித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நல்ல படங்களில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன்.
என்னுடைய நண்பரும் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர்மான விஜய் இப்படத்தின் கதையை கேளுங்கள் என்று சொன்னார். பொதுவாக நான் கதையை கேட்பதை தவிர்த்து விடுவேன். திரைக்கதையை வழங்கி விடுங்கள். நான் வாசித்து தெரிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன். திரைக்கதையை வாசிக்கும் போது அந்த திரைக்கதையில் இசைக்கான வேலை என்ன? என்பது தெரிந்துவிடும். ஏனெனில் சில கதாபாத்திரங்களில் மன ஓட்டத்தை இசையால் சொல்லிவிட முடியும்.
இருந்தாலும் இப்படத்தின் இயக்குநர் அபி கதையை நான் ஒரு முறை சொல்கிறேன் கேளுங்கள் என்றார். கதையை இரண்டு மணி நேரம் சொன்னார். கதையை சொல்லும்போது திரையில் காட்சிகளாக இப்படித்தான் தோன்றும் என்ற விசுவலை உண்டாக்கினார். அவர் கதை சொன்ன விதத்தை பார்த்து வியந்து போனேன். இந்தப் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும்.
இப்போதுள்ள சூழலில் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் நல்ல கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். ஒரு டிராமா இருக்க வேண்டும். குடும்ப மதிப்பீடுகள் இருக்க வேண்டும்.. என பல விசயங்கள் உண்டு. இதனை அனுபவமிக்க இயக்குநர்களுக்கு இயல்பானது. ஆனால் அபி போன்ற ஒரு புதுமுக இயக்குநருக்கு... இத்தகைய ஒரு பொறுப்புணர்ச்சி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
ஒரு கட்டமைப்புக்குள் இயங்குவது என்பது வேறு. ஒர
’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!
‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாகத் தொடங்கியது.
இதன் படப்பிடிப்பில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி என்.டி.ஆர். இணைகிறார். படப்பிடிப்புக்காக என்.டி.ஆர். ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்கிறார். என்.டி.ஆர். வருகையை படக்குழுவினரும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்தப் புதிய படத்தில் என்.டி.ஆருக்கு இன்னும் அதிக மாஸ் சேர்க்க உள்ளார். மதிப்புமிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய திரை அனுபவத்தை கொடுக்கும்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கோசரராஜு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக சலபதி பணிபுரிகிறார்.
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில் 'கலியுகம்' பட வெளியீட்டு தேதி போஸ்டர் வெளியானது!
முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “கலியுகம்”. மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு படக்குழுவைச் சந்தித்து,படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார்.
ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான திரில் பயணமாக, ரசிகர்களை புதிய உலகிற்கு இப்படம் கூட்டிச் செல்லும்.
இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இனியன் சுப்ரமணி, அஸ்மல், ஹரி, மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் கே ராம் சரண் இப்படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். உலகத் தரத்தில், உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், மிகச்சிறந்த திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) ரிலீஸ், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஏஸ் '( ACE) எனும் திரைபடம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏஸ் ' ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் . இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்பை ஏ.கே . முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்ட இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர்- கிளிம்ப்ஸ் - பாடல்- ஆகியவை வெளியாகி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ரசிகர்களிடத்தில் மட்டுமின்றி திரையுலக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும் - ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசுகையில், '' சூர்யாவின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் நினைத்தது நடந்துவிடும்.
'ரெட்ரோ' திரைப்படம் மறக்க முடியாத அனுபவத்தை தரும். 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 15 வது படைப்பு இது. சூர்யாவுடனான பயணம் இனிமையானது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்திருக்கும் படக்குழுவினர் அனைவரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். அதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தை பற்றி நிறைய சொல்ல வேண்டும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் என் இனிய நண்பர். மூன்றாண்டுகளுக்கு முன் சந்தித்து இந்த கூட்டணியை உருவாக்கினோம். மார்ச் 2024 ஆம் ஆண்டில் உறுதி செய்து ஜூன் மாதம் படப்பிடிப்புக்கு சென்றோம். கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. குறிப்பாக அந்தமானில் 36 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தினார். இதற்கு அவரது குழுவினரின் திட்டமிடல் தான் காரணம்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்களுடைய தயாரிப்பில் உருவான '36 வயதினிலே' படத்திற்கு இசையமைத்தார். அதன் பிறகு இந்த படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அதற்கும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுக்கும் என்னுடைய நன்றிகள்'' என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ''நான் வாழ்க்கையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முக்கியமான முடிவை எடுத்தேன். அது என் மனைவியை காதலித்தது. அன்றைய தினம் விதைத்த விதைதான் இன்று விருட்சமாக வளர்ந்து மேடையில் உங்கள் முன்னால் நிற்கிறேன். அத்துடன் கார்த்திக் சுப்புராஜும் உறவினர் ஆனார். இது மிகவும் உணர்வுபூர்வமான தருணம்.
ராஜசேகர் என் வாழ்வில் கிடைத்த மிக இனிமையான மனிதர். இந்த படத்தில் இருந்து நாங்கள் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறோம். சூர்யாவை போல் ஒரு ஜென்டில்மேன் ஆக இருக்க முடியுமா! என தெரியவில்லை. மக்கள் மீதும்... ரசிகர்கள் மீதும்... அவர் காட்டும் அன்பை போல் வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. அவரிடம் இருந்து பெற்ற 'ஆரா' என் இறுதி மூச்சு வரை தொடரும். அவருடைய 'அகரம் ' அலுவலகத்திற்கு ஒரு முறை தான் விஜயம் செய்தேன். எங்களால் என்ன செய்ய முடியும் என யோசிக்க வைத்தது அந்த சந்திப்பு. ஐ லவ் யூ சூர்யா சார். படத்தைப் பற்றி நாங்கள் எப்போதும் பேச மாட்டோம். படம் தான் பேச வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் சொல்வார். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன் சிறப்பான- தரமான -அழகான- அன்பான - சம்பவம் இந்த படத்தில் இருக்கிறது.'' என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில், '' நம்ம நெனச்சது நடந்துருமா.. சிங்கம் மறுபடியும் திரும்புதும்மா.. முன்ன ஒரு கதை இருந்ததும்மா.. இப்போ உரு கொண்டு இறங்குதம்மா.. சூர்யாவைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் போதாது. சூர்யா சாருக்கு எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் நான்' 36 வயதினிலே' என்ற திரைப்படத்தில் தான் அனைத்து பாடல்களையும் எழுதினேன்.
சூர்யாவைப் பற்றி ஒரு பாடலில் சொல்ல வேண்டும்... ஆனால் நேரடியாக சொல்லாமல் சொல்ல வேண்டும் என நினைத்தேன். 'ஒரு தீயில சொல்லெடுத்து ஒளி போடுற கையெழுத்து' என சொல்லியாகிவிட்டது. ' வீரனாம் கர்ணனுக்கே அவ அப்பன்..' எனும் வரிகளை எழுதியது மறக்க முடியாது. அவருடன் இணைந்து பயணித்ததில் பெரு மகிழ்ச்சி.
இந்த படத்தின் டீசரில் 'பரிசுத்த காதல்' வருகிறது. இந்த பரிசுத்த காதல் சந்தோஷ் நாராயணனின் பரிசுத்த காதலை சொல்கிறது. சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவின் ஜீனியஸ். ' கனிமா ..' படத்தின் பாடல் வெளியீட்டிற்கு முதல் நாள் தற்போது நீங்கள் கேட்கும் வரிகள் இல்லை. இசையும் இல்லை. கதாபாத்திரத்தின் நடன அசைவுகளுக்கு ஏற்ப இசையை மாற்றி.. பாடல் வரிகளையும் மாற்றி அமைத்தார். அந்த அளவிற்கு நுட்பமாகவும் நுணுக்கமாக பணியாற்றுபவர் தான் இந்த ஜீனியஸ்.
இந்த திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் நிறைய பாடல்கள் உண்டு . நான் மேலும் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். அந்த மூன்று பாடல்களும் மிகச் சிறப்பானதாக இருக்கும். அவருக்கு என் நன்றி.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எங்களைப் போன்ற பாடல் ஆசிரியர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவார். அவர் உருவாக்கிய கதை சூழல்தான் அற்புதமான பாடல்களாக மாற்றம் பெறுகிறது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பேசுகையில், '' முதல் முறையாக சூர்யா படத்தின் முன்னோட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன். சூர்யா நடித்த அன்புச்செல்வன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். 'பிதாமகன்' பட சூர்யாவை பிடிக்கும். ரெட்ரோ படத்தில் அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறது'' என்றார்.
நடிகர் சிவகுமார் பேசுகையில், '' மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சூர்யாவுக்கு 17 வயசு. செயின்ட் பீட்ஸ் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கள் வீட்டிற்கு உறவினரான ஒரு ஜோதிடர் வந்தார். எனது இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் கேட்டார். இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் பார்த்த பிறகு, உங்களுடைய மகன் கலைதுறையில் மிக உச்சத்திற்கு வருவார் என சொன்னார். சூர்யாவா? கார்த்தியா? என கேட்டேன். அவர் பெரியவன் சூர்யா தான் என்று சொன்னார்.
காலையிலிருந்து மாலை வரை மொத்தமாகவே நான்கு வார்த்தை தான் பேசுவான் சூர்யா. அவன் கலைத்துறையில் வெற்றி பெறுவான் என்கிறீர்களே.. என்றேன். அதன் பிறகு இயக்குநராக வருவாரா...? ஒளிப்பதிவாளராக வருவாரா...? எனக்கேட்டபோது, இல்லை முகத்தை தொழிலாக கொண்டிருப்பார் என்றார். அப்போது நான் நடிகராக வருவாரா? எனக் கேட்டபோது, அவர் 'ஆம் 'என்றார். அதுமட்டுமல்ல உங்களை விட சிறந்த நடிகர் என்ற பெயரையும் சம்பாதிப்பார். உங்களைவிட நிறைய விருதுகளையும் வாங்குவார். உங்களைவிட நிறைய சம்பாதிப்பார் என்றார். சூர்யாவே இதை கேட்டுவிட்டு சின்ன புன்னகையுடன் கடந்து சென்று விட்டார்.
அதன் பிறகு லயோலா கல்லூரியில் இணைந்தார். அதன் பிறகு தனியார் கம்பெனியில் வேலை செய்தார். அந்தத் தருணத்தில் நாங்கள் ஒரு கலை விழா நிகழ்ச்சிக்காக மலேசியாவிற்கு சென்றோம். அப்போது இயக்குநர் வசந்தும் உடன் வந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் வைத்து ஒரு முறை இயக்குநர் வசந்த் சூர்யாவை பார்த்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து இயக்குநர் வசந்த் எனக்கு போன் செய்து உங்க பையன் சூர்யாவிற்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா? என கேட்டார் இல்லை என்று நான் சொல்லிவிட்டேன். நான் அவரிடம் பேசலாமா? என கேட்டார். அதன் பிறகு இயக்குநர் வசந்த் சூர்யாவை நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. 'நேருக்கு நேர்' படம் வெளியானது. அதில் இடம்பெறும் ஒரு பாடலில் சூர்யாவின் குளோசப் காட்சி இருந்தது. அந்த காட்சிகள் தெரிந்த சூர்யாவின் கண்களை பார்த்த இயக்குநர் ஒருவர், 'இது தமிழ்நாட்டின் வாழும் பெண்களின் தூக்கத்தை கெடுக்கும்' எனக் குறிப்பிட்டார். சினிமாவைப் பற்றி கனவில் கூட நினைக்காத சூர்யாவை இன்று நடிகராக உயர்த்திய இயக்குநர் மணிரத்னத்தையும், இயக்குநர் வசந்தையும் பாதம் தொட்டு வணங்குகிறேன். அதன் பிறகு இயக்குநர் பாலா, 'நந்தா' என்றொரு படத்தை கொடுத்து சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவிற்கு முன் சிக்ஸ்பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது. இவரை உருவாக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
நடிகர் கஜராஜ் பேசுகையில், '' சிவக்குமார் , நாசர் ஆகிய இருவரும் லெஜெண்ட்ஸ். நான் நடிகனாக நடித்த முதல் படத்திற்கு வாய்ப்பளித்த என் மகனும், இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் முதல் படம் 'பீட்சா'. நூறாவது படம் 'ரெட்ரோ'. இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தது தான் எனக்கு ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் அனைவர் மீதும் அக்கறையும், அரவணைப்பும் கொண்டவர் சூர்யா. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றார்.
நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசுகையில், '' வந்தாரை வாழவைக்கும் தமிழகம். சினிமாவை கொண்டாடும் இந்த மண்ணில்... இந்த மேடையில்.. நிற்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொன்னபோது பயந்துவிட்டேன். அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோளை தான் வைத்தேன். அதை இயக்குநர் நிறைவேற்றினார். எனக்கு என் மீது நம்பிக்கையை கொடுத்த படம்.
மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த ஒரு படத்தில்தான் எனக்கு பிரேக் கிடைத்தது. அப்போது அவரிடம் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு எனக்கு இரண்டு ஆண்டுகள் வரை வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா? என கேட்டேன். வெற்றியை எப்படி கையாளுகிறாயோ... அதைப் பொறுத்து தான் வாய்ப்பு தொடரும் என்றார். இதற்கு நான் நேரில் பார்த்த மிக சிறந்த உதாரணம் சூர்யா சார். இத்தனை வெற்றிகளுக்கு பிறகும் அவரிடம் இருக்கும் எளிமை.. எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ சார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா பேசுகையில், '' இந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக முதலில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதில் அமீர்கான் - அக்ஷய் குமார் - அஜய் தேவகன் - போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். சூர்யாவை இந்தியா முழுவதும் தெரியும். அவர் இந்தியாவின் ஹீரோ. எனக்கு இந்தி மட்டும் தான் தெரியும். அவர்களுக்கு ஆங்கிலமும், தமிழ் மட்டும்தான் தெரியும். இருப்பினும் அரை மணி நேரம் நாங்கள் சந்தித்து பேசினோம். கார்த்திகேயன் சந்தானம் தான் பேச்சுவார்த்தைக்கு உதவினார். நான் முதன்முதலில் இவ்வளவு பிரமாண்டமான விழாவில் கலந்து கொள்கிறேன். எனக்கு தமிழ் படங்கள் என்றால் சூர்யாவின் படங்கள் மட்டும் தான் தெரியும். திரைப்படத்தின் வெற்றிக்கு உதவும் ரசிகர்களை வாழ்த்துகிறேன். ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றி விழாவை மும்பையில் நடத்துகிறேன். சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.'' என்றார்.
நடிகை பூஜா ஹெக்டே பேசுகையில், '' நான் கலந்து கொள்ளும் இரண்டாவது இசை வெளியீட்டு விழா நிகழ்வு. இதனை சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன்.
இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் தமிழில் பின்னணி பேசி இருக்கிறேன். இதற்கு உதவிய இயக்குநர் குழுவினருக்கும் நன்றி. டீசரில் எந்த டயலாக்குகளையும் நான் பேசவில்லை என்றாலும் இசை மூலமாக என் கதாபாத்திரத்தின் உணர்வை ரசிகர்களுக்கு சொன்ன இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு என் நன்றி. இந்த திரைப்படத்தில் ருக்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் இத்தகைய கேரக்டரை வடிவமைத்ததற்காகவும் அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேங்ஸ்டர் கதையை எழுதி இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் அதில் நடிப்பதற்கு வாய்ப்பு தாருங்கள்.
சூர்யா சார் இந்த படத்தில் பாரி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய எக்ஸ்பிரஸிவ்வான கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
' கனிமா 'பாடலை ரீல்சாக உருவாக்கி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி. '' என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், '' இசை வெளியீட்டு விழாவில் என்னுடைய முதல் பேச்சு இதுதான். வருகை தந்திருக்கும் அனைவருக்கும் முதலில் நன்றி. பீட்சா படத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடம் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை வெளியில் கொண்டு வந்து, அதனை கலை வடிவமாக மாற்றும் திறமைக்காரர் கார்த்திக் சுப்புராஜ். அவருடன் பணியாற்றும்போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது. தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் மிகவும் அன்பான நடிகர் சூர்யாவுடன் பணியாற்றியது பறக்க முடியாதது. எப்போதும் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும் போது தயக்கம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த தயக்கத்தை உடைத்து இயல்பாக்கியவர் சூர்யா சார்.
படப்பிடிப்பு தளத்தில் பூஜா ஹெக்டே எப்படி ரியாக்ட் செய்வாரோ.. அதிலிருந்து ஒரு விசயத்தை
'குபேரா' படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது!
பான் இந்திய படைப்பாக உருவாகி வரும் "குபேரா படத்தின் முதல் சிங்கிள், இசை ரசிகர்களை புயலாக தாக்கியுள்ளது. 'குபேரா' திரைப்படத்தின் முதல் பாடலான ‘போய் வா நண்பா’ அதிரடி இசையில், மென் மெலடி கலந்து அசரடிக்கிறது. இப்பாடல் மூன்று தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.
இப்பாடல் உருவான பின்னணி காட்சிகள், தனுஷின் குரல், மற்றும் அவரின் அசத்தலான நடனம், ராக் ஸ்டார் டிஎஸ்பியின் மயக்கும் இசை, அருமையான வரிகள், எனக் கேட்கும் போதே மாய உலகிற்கு அழைத்து செல்கிறது. சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மேஜிக்கை காணும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது இப்பாடல்.
மனித உணர்வுகளின் குவியலாக, அற்புதமான உணர்வுகளைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், உலகம் முழுவதும் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சரப் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுனீல் நாரங் மற்றும் புஷ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிப்பில் “குபேரா” திரைப்படம், மிகப் பெரிய பொருட்செலவில், பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட குபேரா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உண்மையான பான் இந்திய படைப்பாக வெளியாகவுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! - கே.ராஜன்
உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் - விட்ஃபா’. (World International Tamil Film Association - WITFA) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் முதல் மாநாடு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில், ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்வில், விட்ஃபா அமைப்பின் தேசிய கீத பாடல் மற்றும் விட்ஃபா மூலம் தயாரிக்கப்படும் முதல் திரைப்படமான ’Expired மருந்து’-வின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விட்ஃபா அமைப்பின் சர்வதேச தலைவரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ரஷீம் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “நான் தெய்வத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளவன். எவ்வளவு பெரிய விசயமாக இருந்தாலும் நடக்கும், தெய்வம் துணை இருக்கும், என்ற நம்பிக்கையில் அதில் ஈடுபடுவேன், அந்த வகையில் தான் சர்வதேச அளவிலான இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.
ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், அது நடக்கும், நடக்காது, என்று எல்லாம் நான் யோசிக்கவில்லை, ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும், என்று தான் நினைத்தேன். அது நடக்கவில்லை என்றாலும், ரஜினிகாந்தின் அண்ணனை வைத்து இன்று படம் எடுத்திருக்கிறேன். யார் படத்திலும் நடிக்காத ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா இன்று என் படத்தில் நடித்திருக்கிறார். தெய்வத்தின் அருளால் தான் அவர் என் படத்தில் நடித்திருக்கிறார். இன்றைய விட்ஃபா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கங்கை அமரன் சார் எவ்வளவு பெரிய மனிதர், அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது கடவுளின் அருள் தான். இயக்குநர் பேரரசுக்கு தெரியாமல் அவரது பழனி படத்தில் ஆறு நாட்கள் பயணித்திருக்கிறேன், அதனால் அவர் என்னுடைய குருநாதர். இயக்குநர் சங்க தலைவராக இருக்கும் ஆர்.வி.உதயகுமார் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர். சிறு முதலீட்டு படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன் சார், ஆகியோரை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
’மாம்பழம் திருடி’ என் ஆறாவது படம், நான் இயக்கும் ஏழாவது படம், விட்ஃபா தயாரிக்கும் முதல் படமாகும். இதில், இலங்கையில் பிரபலமாக இருக்கும் ஒருவரை அறிமுகப்படுத்த இருக்கிறோம். விட்ஃபா தயாரிக்கும் அனைத்து படங்களையும் நான் மட்டுமே இயக்க மாட்டேன். விட்ஃபா ஒவ்வொரு வருடமும் இரண்டு படங்களை தயாரிப்பதோடு, பத்து படங்களை வெளியிட போகிறது. ஆக, ஆண்டுக்கு 12 படங்கள் விட்ஃபா மூலம் வெளிவரும். இதன் மூலம், இரண்டு தயாரிப்பாளர்கள், இரண்டு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல புதுமுகங்களை உருவாக்கப் போகிறோம்.
நாங்கள் ஒரு கூட்டமைப்பாக இருந்து திரையுலகிற்கான பணியை மேற்கொள்ளப் போகிறோம். இதுவரை எங்கள் அமைப்பில் 11 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 40 பேர் அமைப்பின் முக்கிய நிர்வாகத்திலும், 150 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். சாதாரன உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் பேன்ஸ் கிளப் உறுப்பினர்களாக லட்சக்கணக்கானோர் இணைய உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், சுமார் 1000 பேர் என 50 ஆயிரம் பேர் விட்ஃபா-வில் இணைய இருக்கிறார்கள்.
விட்ஃபாவில் உள்ள உறுப்பினர்களுக்கு, நாங்கள் வெளியிடும் படங்களை பார்க்க 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இன்று ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுமானால் எவ்வளவு கட்டணம் என்பது தெரியும். அதில் 50 சதவீதம் சலுகை என்றால் உங்கள் செலவு எவ்வளவு குறையும் என்று பாருங்கள். இதே, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஒரு டிக்கெட்டின் விலை சுமார் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் உங்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை இருந்தால், உங்கள் செலவு பாதியாக குறையும். நாங்கள் சாதாரண படங்களை வெளியிட மாட்டோம். அதேபோல் தயாரிப்பதிலும் நல்ல கதைகளை கேட்டு தான் தயாரிப்போம், அதற்கான குழுவும் எங்களிடம் இருக்கிறார்கள்.
விட்ஃபாவின் வெளியிடம் முதல் திரைப்படமான ‘மாம்பழ திருடி’ படத்தில் ரஜினிகாந்தின் பெயர் வரப்போகிறது. அவரது அண்ணன் நடித்திருப்பதால், ரஜினிகாந்தின் பெயர் நிச்சயம் வரும். இப்படி தான் எங்களது ஒவ்வொரு படங்களையும் திட்டமிட்டு தயாரிப்பதோடு, படங்களை வெளியிடவும் செய்வோம்.
எங்களுடைய அமைப்பின் கொளை மற்றும் சட்டத்திட்டங்கள் மிக நேர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைப்பை உருவாக்கிய என்னை கூட வெளியேற்றும் வகையில் இதன் சட்டதிட்டங்கள் உள்ளது. தலைவர், செயலாளர் என முக்கிய நிர்வாகிகள் தவறு செய்தால், மற்ற நிர்வாகிகள் செயற்குழுவை கூட்டி, அவர்களை வெளியேற்றும் அளவுக்கு இதன் கட்டுப்பாடுகளை உருவாக்கியிருக்கிறோம். இப்படி ஒரு வலுவான அமைப்பில் சேர சிறு கட்டணம் உள்ளது, அது வெறும் ரூ.200 மட்டுமே.
என் அப்பா சமூக சேவகர், ஒரு மிகப்பெரிய கல்லூரியின் தலைவராக இருந்தார், பொதுநல அமைப்புகள் பலவற்றின் தலைவராகவும் இருந்தார். அவர் சொன்னது, “நீ இறந்தால் 40 பேர் அழ வேண்டும்” என்பது தான். அதனால், தான் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினரை விட உயர்ந்த பதவியில் இருந்த நான் அந்த வேலையை விட்டுவிட்டு திரைத்துறைக்கு வந்தேன், இந்த துறையின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்ய முடியும், என்ற நம்பிக்கையில் இந்த துறைக்கு வந்திருக்கிறேன். இன்று சொல்கிறேன், விட்ஃபாவின் இரண்டாவது மாநாடு நேரு ஸ்டேடியத்தில் நடக்கும், செயற்குழு உறுப்பினர்கள் 150 பேரின் வீட்டில் ஒரு கார் இருக்கும். இதற்கான பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். உலகம் முழுவதும் இருக்கும் இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருக்கிறார்கள், அவர்களை எல்லாம் சந்தித்து எங்கள் அமைப்பு பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறோம். எனவே, விட்ஃபா மூலம் தமிழ் திரையுலகிற்கு மட்டும் அல்ல சினிமா மீது ஆர்வம் உள்ள சாமானியர்கள் அனைவருக்கும் உதவி செய்யப் போகிறோம்.” என்றார்.
இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ”இசை வெளியீட்டு விழா என்று தான் நினைத்து வந்தேன், இங்கு வந்து பார்த்ததும் ஏதோ புதிய சங்கமாக இருக்குமோ என்று பயந்து விட்டேன். இருக்கிற சங்கத்துல இருப்பவர்களுக்கே இங்கு வேலை இல்லை, இது என்னட புது சங்கமா என்று பயந்துட்டேன். ஆனால், அப்படி அல்லாமல் ஒரு அமைப்பாக சினிமாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியே வர தமிழ் சமூகத்தை ஒன்று சேர்த்தது மட்டும் இன்றி, அந்த படத்தின் டிக்கெட் விற்பனையும் இறங்கி வேலை செய்திருக்கிறார்கள். இங்கு வெற்றி பெறுவதற்உ திறமை மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்ட்டம் வேண்டும், ஆளும் கட்சியின் சப்போர்ட் வேண்டும், அது இருந்தால் தான் தியேட்டர் கிடைக்கும், படம் வெளியாகும். ஆனால், இது எதுவும் இல்லை என்றாலும், ஒரு அமைப்பை உருவாக்கி, யாருக்கும் எதிராக நிற்காமல், ஒரு நல்ல முயற்சியை விட்ஃபா மூலம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பை பற்றி கேட்ட போதே, நானே சேர்ந்து விடலாமா என்று யோசித்தேன். இந்த நேரத்தில், இயக்குநர்கள் சங்க தலைவராக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், நல்ல கதையோடு வருகின்ற இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு விட்ஃபா அமைப்பு வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.
இயக்குநரும், தயாரிப்பாளருமான ரஷீம், தன்னுடைய வெற்றியை தொடர்ந்து அடுத்தவர்களையும் வெற்றியாளர்களாக மாற்றுவதற்காக இந்த விட்ஃபா அமைப்பை தொடங்கியிருக்கிறார். அவருடைய ஆர்வமும், முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். விட்ஃபா வெற்றிகரமாக வளர வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.
விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் பேசுகையில், “ரஷீம் மிகச்சிறந்த ஒரு மாபெரும் திரையுலகை வாழ வைக்கும் வளர்க்கிற அற்புதமான திட்டத்தை நம்மிடையே விளக்கியிருக்கிறார். திரையுலகை வாழ வைக்கும், உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உலகம் முழுவதும் வாழும் நம் இரத்தங்களான இலங்கை தமிழர்களால் தான் சினிமா வாழ்கிறது. அந்தகைய இலங்கை தமிழரான ரஷீம், தமிழ் திரையுலகை வாழ வைக்க கூடிய முயற்சியான இந்த விட்ஃபா அமைப்பு மிகச்சிறந்த முயற்சியாக இருக்கிறது.
வெளியிடாமல் இருக்கும் திரைப்படங்கள் வெளியாவதோடு, பலரை தயாரிப்பாளராகவும், இயக்குநர்களாகவும் உருவாக்க உள்ள இந்த விட்ஃபா அமைப்பின் அனைத்து பணிகளும் வெற்றி பெற வேண்டும், ரஷீம் பல வெற்றி படங்களை இயக்கி வலம் பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “விட்ஃபா என்னும் போது என்க்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. திடீர் திடீரென்று புது புது சங்கங்கள் ஆரம்பிக்கப்படுகிறது. தொழிலாளர்கல் தான் சங்கம் தொடங்குவாங்க, இன்று முதலாளிகளே தொழிலாளர்கள் சங்கம் தொடங்குகிறார்கள். திரையுலகம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் படம் எடுப்பது சுலபம், ஆனால் அதை வெளியிடுவது என்பது மிக மிக கடினமாகி விட்டது. அப்படிப்பட்ட கடினமான வேலையை மிகவும் சுலபமாக செய்து கொடுக்க தான் இந்த விட்ஃபா அமைப்பு வந்திருக்கிறது. இந்த மாதிரி அமைப்பு, தற்போதைய தமிழ் சினிமாவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இந்த தருணத்தில் விட்ஃபா அமைப்புக்கு ஒரு கோரிக்கிஅ வைக்கிறேன், வெளியிடாமல் இருக்கும் பல சிறிய படங்களில் மிக சிறப்பான பல படங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களை உங்கள் குழுவினர் பார்த்து அவற்றை வெளியிட வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இது சினிமாவுக்கு நீங்கள் செய்யும் சேவையாக இருக்கும். இன்று சினிமா துறையில் சின்ன படம், பெரிய படம், என்று இல்லை. நல்ல படம் என்றால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெற்றால் பெரிய படங்களாகி விடும். ஆக, நல்ல படம் எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இன்று படங்கள் ஓட தொடங்கியிருக்கிறது, நல்ல படம் எடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். இந்த நேரத்தில் சினிமாக்காரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். உட்கார்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சினிமாவிடம் இருந்து பல லட்சக் கோடி வரி பெறும் அரசாங்கமும் இதற்கு பொறுப்பேற்று, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்று இந்த தருனத்தில் கேட்டுக் கொள்கிறேன். விட்ஃபா மிகப்பெரிய வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேசுகையில், “விட்ஃபா அமைப்பை பற்றி கேட்ட போது இது மிகவும் சிறப்பான அமைப்பாக இருக்கிறது. ஒரு கதையை உயிராக நினைத்து சுமப்பவர்களை தேடி பிடித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும், அப்படிப்பட்ட கதைகளை தயாரித்தால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம். இப்போது வருகின்ற படங்களில் வன்முறை அதிகம் இருக்கிறது. கமலே அப்படிப்பட்ட படங்களுக்கு சென்று விட்டார். அதற்கு காரணம் மக்கள் தான், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, எதை விரும்புகிறார்களோ அதை நோக்கியே படம் இயக்க தயாராகி விட்டோம். நம் வாழ்க்கையிலேயே நிறைய கதைகள் இருக்கிறது, அதை வைத்து படம் இயக்கினாலே வெற்றி பெற்று விடலாம்.
நான் இயக்கிய கரக்காட்டக்காரன் படத்தை பற்றி பாராட்டி பேசுகிறார்கள், தில்லானா மோகம்மாள் படத்தின் கரு தான் கரக்காட்டக்காரன், இதை நான் சொன்னால் தான் உங்களுக்கு தெரியும், இல்லை என்றால் தெரியாது. இசையும் அப்படித்தான் நீங்கள் கொண்டாடுகின்ற பல பாடல்களுக்கு வேறு ஒரு பாடல் உதாரணமாக இருக்கும். இதை காபி என்று சொல்லக்கூடாது, பாதிப்பு என்று சொல்ல வேண்டும். இங்கு யாரும் எதையும் தெரிந்துக் கொண்டு வரவில்லை, அவர்களுக்கு அமைகின்ற சூழலுக்கு ஏற்றபடி, நம் முன்னோர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்.
விட்ஃபா அமைப்பின் செயல்கள் மிக சிறப்பானவையாக இருக்கிறது. நீங்கள் நல்ல கதையம் அம்சம் கொண்ட படங்களை தயாரித்தான், நாள் இளையராஜாவிடம் சொல்லி இலவசமாக இசை அமைக்க சொல்வேன், அதேபோல் நானும் இலவசமாக பாடல் எழுதி கொடுக்கிறேன், என்பதை இங்கே பதிவு செய்து கொண்டு, விட்ஃபா மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி” என்றார்.
இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ள 'என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச' – மையல் பட மெலோடி!
மெல்லிசை, மனதை வருடும் குரல்கள், கவிதையாய் பேசும் வரிகள்… இவை அனைத்தும் இணையும் போது, இசை நாயகர்களின் உள்ளங்களை தீண்டும் ஒரு மந்திரம் உருவாகிறது. கூட மேல கூட வச்சு, கண்கள் இரண்டால் போன்ற இனிமை நிரம்பிய பாடல்களின் வரிசையில் இப்போது இணையப்போகும் இன்னொரு மர்ம மாயம் – மையல் படத்தில் இருந்து வெளிவந்துள்ள "என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச".
இந்த சுகாத இசை அனுபவத்தை இசையமைப்பாளர் அமர்கீத் தனது நுட்பமான இசை பாணியால் உயிரூட்டுகிறார். பாடலுக்குச் சுவை கூட்டும் விதமாக, சத்யப்ரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோரின் மென்மையான குரல்கள் பாடலின் உணர்வுகளை நம் உள்ளங்களில் நேரடியாகப் பதிய செய்கின்றன. மிக எளிமையாக அமைக்கப்பட்ட இசை பின்னணி, பாடலின் உணர்வுபூர்வ தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஏகாதசி எழுதிய வரிகள், எளிமை மற்றும் அழகிய உணர்வுகளின் இணைவு. அவரது வார்த்தைகள், நம்மை அசைவற்றுப் பார்த்து உணர்ச்சிகளை அள்ளி தருகின்றன.
மையல் – உணர்ச்சிகளால் நெஞ்சை தொடும் ஓர் யதார்த்தக் கதை. இயக்குனர் ஏ.பி.ஜி. ஏழுமலை,கதை திரைக்கதை வசனம் ஜெயமோகன். சேது மற்றும் சம்ரித்தி தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அனுபமா விக்ரம் சிங், ஆர். வேணுகோபால், மற்றும் ஐகான் சினி கிரியேஷன் எல் எல் பி தயாரிக்கின்றனர்.
"என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச" தற்போது யூட்யூப் மற்றும் அனைத்து முக்கிய இசை தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது.
படத்தின் பாடல் வெளியீடு, ட்ரெய்லர் மற்றும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியீடும் குறித்து, படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ள ’குட் பேட் அக்லி’
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது.
நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது, “’மார்க் ஆண்டனி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி. இந்தப் படம் ப்ளே கிரவுண்ட் போல. எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற சுதந்திரத்தை இயக்குநர் கொடுத்தார். அஜித் சார் படத்தில் பணிபுரிந்தது எனக்கு பாக்கியம். என்னுடைய அணி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”
டான்ஸ் மாஸ்டர் கல்யாண், “’குட் பேட் அக்லி’ படத்தின் அனுபவம் செம மாஸ். ஒவ்வொரு ஃபிரேமையும் ஆதிக் செதுக்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் வந்தது மிகப்பெரிய வரம். இந்த டீமுக்கு நான் புதிது. ஆனால், செம ஜாலியாக ஷூட்டிங் இருந்தது. ஜிவி பிரகாஷ் படத்தின் பாடல்களில் கலக்கி விட்டார். பாடல்களுக்கு விஜய் வேலுக்குட்டி செம எடிட்டிங் செய்திருந்தார். அஜித் சார் என்றாலே வேற லெவல் எனர்ஜிதான். அனைவருக்கும் நன்றி”.
ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம், “ஆதிக் சாருடைய அப்பா ரவி சாருக்கு முதல் நன்றி. அவர்தான் என்னை ‘மார்க் ஆண்டனி’ படத்திலும் சஜெக்ட் செய்தார். எல்லாருமே இந்தப் படத்தில் ஃபேன் பாயாக மாறிதான் வேலைப் பார்த்தோம். இதுபோல படம் எடுக்க மைத்ரியால் மட்டும்தான் முடியும். என்னுடைய டீமுக்கு நன்றி. அனு மேம் காஸ்ட்யூம் சூப்பராக இருந்தது. என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்திற்கு நன்றி”.
ஃபைட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், “இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக வாய்ப்புக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றி. ஆதிக் சாருடன் ‘மார்க் ஆண்டனி’படத்தில் வேலை பார்த்தேன். படம் வெளிவருவதற்கு முன்பு ஹால்ஸ், விக்ஸ் எடுத்துக் கொண்டு வாங்க என நான் சொன்னது சர்ச்சை ஆனது. ஆனால், படம் வேலை பார்க்கும்போதே அது ஜெயித்து விடுமா என்பது எங்களுக்குத் தெரிந்து விடும். நெகட்டிவ் எல்லாவற்றையும் தகர்த்து கொடுத்து இருக்கிறது. ஃபைட்டில் வரும் பாடல் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அர்ஜூன் தாஸ், பிரியா எல்லாருக்கும் நன்றி. படத்தை வெற்றிப் படமாக்கிய அஜித் சார் ரசிகர்களுக்கும் நன்றி” என்றார்.
காஸ்ட்யூம் டிசைனர் அனு வர்தன், “ஆதிக் உங்களுக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு வித்தியாசமான அனுபவம். தயாரிப்பாளர் மைத்ரிக்கும் நன்றி. படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி”.
நடிகர் கே.ஜி.எஃப். அவினாஷ், “ஏகே ஒரு ரெட் டிராகன். என் இயக்குநர் ஆதிக் சாருக்கு நன்றி. முதலில் அவரிடம் இருந்து ஃபோன் கால் வந்தபோது நான் நம்பவே இல்லை. என்னை சிறப்பாக காட்டியதற்கு நன்றி. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. அர்ஜூன் தாஸ் சாரின் குரல் எனக்கு பிடிக்கும். ரசிகர்களுக்கு நன்றி”.
நடிகர் ரகு ராம், “படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய கொண்டாட்டமாக அமைந்து எனக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி”.
நடிகர் கார்த்திகேய தேவ், “என் இயக்குநர் ஆதிக்கிற்கு நன்றி. அஜித் மிகவும் இனிமையானவர். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அஜித்- த்ரிஷாவுடன் நடித்தது எனக்கு பெரிய சாதனை. அர்ஜூன் சார், ப்ரியா மேம் அனைவருக்கும் நன்றி. படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது”.
அசார் மாஸ்டர், “ இதெல்லாம் எனக்கு கிடைக்குமா என்று கனவாகவே இருக்கிறது. கடவுளுக்கும் அஜித் சாருக்கும் ஆதிக் சாருக்கும் நன்றி. ஒட்டுமொத்த பட குழுவுக்கும் நன்றி. அர்ஜுன் சார் ஃபயராக படத்தில் ஆடியிருப்பார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் நிஜமாகவே ஃபயரில் தான் டான்ஸ் செய்தார். இரண்டு லெஜெண்ட் பாடல்களை ரீகிரியேட் செய்திருக்கிறோம். அதற்கு நியாயம் சேர்த்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நன்றி".
நடிகர் அர்ஜூன் தாஸ், " எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அனைவருக்கும் நன்றி. சுரேஷ் சாருக்கு நன்றி. கடந்த 2013ல் இருந்து அஜித் சார் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். அஜித் சார் படத்தில் வேலை செய்வது எனக்கு பெரிய ரெஸ்பான்ஸ்பிலிட்டி. என்னை புஷ் செய்து வேலை வாங்கிய அசார் மாஸ்டருக்கு நன்றி. கல்யாண மாஸ்டர், ஜிவி சாருக்கும் நன்றி. ப்ரியா, கார்த்திகேய தேவ் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
நடிகர் பிரசன்னா, “அஜித் சாருடன் வேலை செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அவரைப் பார்த்துதான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். ‘மங்காத்தா’ பட சமயத்தில் வெங்கட்பிரபு என்னை அழைத்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அஜித் சாரின் ஒவ்வொரு படம் அறிவிக்கும்போது வாய்ப்பு அருகில் வந்து நடக்காமல் போகும். முதல் நாள் இந்தப் படத்தின் செட்டில் அவரை சந்திக்கும் போது, என்னை முந்திக் கொண்டு, பல வருடம் தள்ளிப் போனது இப்போது நடந்திருக்கிறது எனச் சொல்லி என்னைக் கட்டிப் பிடித்தார். அந்த ஒரு விஷயம் எனக்கு போதும். என் கனவை நிறைவேற்றியதற்கு ஆதிக்கிற்கு நன்றி. எனக்கு கடைசி வரையும் ஆதிக்கின் ஃபிலிம் மேக்கிங்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசி வரை புரியாமலேயே நடித்த படம் இது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தை ஹிட்டாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் தான் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகன் என்ற இறுமாப்பில் சென்றேன். ஆனால், அஜித் சாருக்கு ஒவ்வொரு ஃபிரேமும் ஆதிக் பார்த்து பார்த்து வைத்து என் எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கும் நன்றி” என்றார்.
நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர், "என்னுடைய இரண்டாவது தமிழ் படத்துக்கே இப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ’AK64’ என ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கீங்க ஆதிக். இந்த இடத்தில ஓப்பனாகவே வாய்ப்பு கேட்கிறேன். என்னையும் அந்த படத்துல நடிக்க வைக்க ரெக்கமன்ட் பண்ணுங்க. அஜித் சாருடைய பிரியாணி மற்றும் ரைட் இப்போ என்னுடைய பக்கெட் லிஸ்ட்ல இருக்கு. அவர் இப்போது ரேஸ்ல இருக்காரு. அவருக்காக நாங்க இங்க கடவுளை வேண்டிக்கிறோம். OG சிம்ரன் மேமுக்கு நன்றி சொல்லிக்கிறேன். தமிழ் மக்களுக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்" என்றார்.
நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி, “நெல்சன் சாருக்கு முதல் நன்றி. 28 வருடங்களுக்கு முன்பு அஜித் சாரின் ‘அவள் வருவாளா…’ படத்தில் க்ரூப் டான்ஸராக ஆடியிருக்கிறேன். இப்போது இந்த வாய்ப்பு கொடுத்த ஆதிக் மற்றும் அவரின் அப்பா ரவி சாருக்கு நன்றி. இது எனக்கு மிகப்பெரிய கனவு. படத்தில் இரண்டு சீன் தான் வந்தாலும் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “18 வருடங்கள் கழித்து அஜித் சாருடைய படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித் சாருக்கு நன்றி. இப்படி ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’, ‘மார்க் ஆண்டனி’ இப்போது ‘குட் பேட் அக்லி’ என ஆதிக்குடன் மூன்று ஹிட் படங்கள் கொடுத்திருப்பதில் சந்தோஷம். தயாரிப்பாளர்கள் ரவி சார், நவீன் சாருக்கும் நன்றி. தமிழில் மிகப்பெரிய படம் மூலம் எண்ட்ரி கொடுத்திருக்கிறீர்கள். என்னுடைய டீமுக்கும் நன்றி. டெக்னிக்கல் டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தியா மட்டுமில்லாமல் ஸ்ரீலங்கா, மலேசியாவிலும் படம் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் நவீன், ”படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. நடிகர் அஜித் அவர்களுக்கும் இயக்குநர் ஆதிக்கிற்கும் நன்றி”.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ஏழாவது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான். நான் அஜித் சார் ரசிகனாக மாறாமல் இருந்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. சினிமாவுக்கு வராமல் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்திருப்பேன். அஜித் சாரின் ரசிகராக இருந்தால், என்ன நடக்கும் என்பது இந்த தருணத்தில் எனக்கு நிதர்சனம் ஆகியுள்ளது.
நான் எப்போதும் அஜித் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போது நான் சரியான சினிமா வாழ்க்கை இல்லாத இயக்குநர். பெரிய ஹிட் இல்லாத இயக்குநர். எனது முதல் படம் மட்டுமே ஹிட் கொடுத்தது. ஆனால், அஜித் சாரைப் பொறுத்தவரையில் எப்போதும் யாரிடமும் வெற்றி தோல்வியை பார்த்தது கிடையாது. ஒரு சக மனிதராக தான் பார்ப்பார். என்னிடம் இருந்து அவர் என்ன கவனித்தார் என்பது எனக்கு இப்போதுவரை கேள்வியாக உள்ளது.
படப்பிடிப்புத் தளத்தில் கூட அஜித் சாரிடம் கேட்டேன், ' எதை வைத்து சார் நீங்கள் போனி கபூர் சாரிடம் நான் பெரிய இயக்குநராக வருவேன்' எனக் கூறினீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் எதுவும் கூறாமல், சிரித்துக் கொண்டு போய்விட்டார். இந்த தருணத்தில் நான் சுரேஷ் சந்திரா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அஜித் சார் என்னை நம்பிய அளவுக்கு நீங்களும் என்னை நம்பினீர்கள். இங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களைப் பார்க்கும்போது மிகவும் எமோஷ்னலாகிவிட்டேன். அந்த கூட்டத்திற்குள் இருந்தவன்தான் நான்.
அங்கு இருந்த என்னை இங்கு உங்கள் முன் நிறுத்தி அழகு பார்க்க வைத்த அஜித் சாருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அஜித் சார் தன்னை எப்போது பெரிய ஸ்டாராக கருதியது கிடையாது. அவர் தன்னை ஒரு நடிகராக மட்டுமே நினைக்கிறார். இந்த படம் இந்த அளவிற்கு எனர்ஜியாக இருக்க முக்கிய காரணம், அவரது மொத்த எனர்ஜியும் குட் பேட் அக்லி தான். படத்தின் டைட்டிலை முடிவு செய்தது அஜித் சார்தான். அதில் இருந்து, இரவோடு இரவாக டப்பிங் முடித்துவிட்டு அவர் ரேஸ்க்கு கிளம்பும் வரை தன்னால் முடிந்த அனைத்தையும் இந்த படத்திற்காக கொடுத்துள்ளார். ஐ லவ் யூ அஜித் சார்
நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விடவும் உங்களுக்குத்தான் அதிகம் ஐ லவ் யூ சொல்லி உள்ளேன். அதுதான் உண்மையும் கூட. எனது மனைவியை விட உங்களை தான் சார் அதிகம் நேசிக்கிறேன். எனது பெற்றோர்களுக்கு அடுத்து எனது வாழ்க்கையில் இருப்பது நீங்கள் தான் சார்" என எமோஷனலாக பேசியுள்ளார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா