சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

ஜப்பானை கலக்க வரும் ‘புஷ்பா2: தி ரூல்’, டோக்கியோவில் புரமோட் செய்து வரும் அல்லு அர்ஜுன்!
Updated on : 14 January 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’, தற்போது ஜப்பானில் வெளியாவதற்குத் தயாராகி, உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகள் படைத்த இந்த படம், இந்திய ரசிகர்களிடையே கொண்டாட்டமாக மாறிய நிலையில், ஜப்பான் ரசிகர்களிடமும் அதே அளவிலான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 



படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் புஷ்பாவின் அறிமுக ஆக்‌ஷன் சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டிருப்பதும், அந்தக் காட்சியில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியில் சரளமாக வசனம் பேசும் காட்சியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சமே ஜப்பான் ரசிகர்களிடையே படத்திற்கான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.



 



ஜனவரி 16ஆம் தேதி ஜப்பானில் திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ளார். அங்கு அவர் தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார். டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைலைன் பின்னணியுடன் எடுத்த புகைப்படத்தை, அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.



 



மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, ஜப்பானில் ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் கீக் பிக்சர்ஸ் மற்றும் சோசிகு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. சுமார் 250 திரையரங்குகளில் படம் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி படங்களுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஏற்கனவே காட்டி வரும் பேராதரவை கருத்தில் கொண்டு, ‘புஷ்பா 2’ அங்கும் பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.



 



சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசில், நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர். ஜப்பான் தியேட்டர்களில் ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில், ஜனவரி 15, 2026 அன்று படம் ப்ரீமியர் ஆகிறது.



 



இந்த வெளியீடு, இந்திய சினிமாவின் உலகளாவிய வளர்ச்சிக்கும், அல்லு அர்ஜுனின் பான்-வேர்ல்ட் ஸ்டார்டத்துக்கும் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா