சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ் 2026 தமிழ் திரைப்பட வரிசை வெளியீடு   |    சாய் துர்கா தேஜ் கிராமத்து அவதாரத்தில் ‘SYG (சம்பரால எட்டிகட்டு)’ சங்கராந்தி போஸ்டர் வெளியீடு   |    பிரமாண்ட புராண ஆக்ஷன் ‘நாகபந்தம்’ – நபா நடேஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு   |    2026 கோடை வெளியீட்டிற்கு தனுஷ் நடிப்பில் தயாராகும் மெகா திரில்லர்!   |    காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’   |    ஜப்பானை கலக்க வரும் ‘புஷ்பா2: தி ரூல்’, டோக்கியோவில் புரமோட் செய்து வரும் அல்லு அர்ஜுன்!   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் கனவு கூட்டணி பிரம்மாண்ட மெகா திரைப்படம்!   |    Letterboxd வரலாற்றில் சாதனை – இந்திய அறிமுக இயக்குநராக உலக டாப் டென்னில் அபிஷன் ஜீவிந்த்!   |    ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |    சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு   |    கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”   |    இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது   |    வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!   |    திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்   |    சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!   |    சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!   |    100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'   |    ’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |   

சினிமா செய்திகள்

2026 கோடை வெளியீட்டிற்கு தனுஷ் நடிப்பில் தயாராகும் மெகா திரில்லர்!
Updated on : 15 January 2026

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 1990-களின் பின்னணியில் உருவாகும் இந்த படம், மர்மமும் உணர்வுப்பூர்வமான பரபரப்பும் கலந்த எமோஷனல் திரில்லராக வடிவமைக்கப்பட்டுள்ளது.



 



வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் சார்பில், டாக்டர் ஐசரி K கணேஷ் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில், குஷ்மிதா கணேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார். ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, விக்னேஷ் ராஜா இந்த திரைப்படத்தை இயக்குகிறார். அல்ஃபிரட் பிரகாஷ் உடன் இணைந்து எழுதப்பட்ட திரைக்கதை, விறுவிறுப்பான திரையனுபவத்தை உறுதி செய்கிறது.



 



‘கரசாமி’ எனும் இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம், 90-களின் காலகட்டத்தை நிஜத்தன்மையுடன் மீட்டெடுக்க, சென்னை, இராமநாதபுரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 80 நாட்களுக்கும் மேலாக படமாக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தைக் காட்சிப்படுத்த, பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.



 



தனுஷுடன் முதல் முறையாக மமிதா பைஜு கதாநாயகியாக இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சர முடு, கருணாஸ், பிருத்திவி ராஜன் உள்ளிட்ட பல திறமையான நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங்கும், மாயபாண்டி தயாரிப்பு வடிவமைப்பும், தினேஷ் மனோகர் – காவ்யா ஸ்ரீராம் உடைகள் வடிவமைப்பையும் மேற்கொள்கிறார்கள்.



 



தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் கூறுகையில், “கர ஒரு தனித்துவமான, மனதில் நீண்ட நாள் நிற்கும் திரையனுபவமாக உருவாகி வருகிறது. படத்தின் உணர்வுப்பூர்வ தாக்கமும் தொழில்நுட்ப தரமும் என்னை மிகவும் நம்பிக்கையுடன் இருக்கச் செய்கிறது” என தெரிவித்தார்.



 



வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனத்தின் 2026 படப்பட்டியலில் ‘கர’ முக்கியமான படமாக இடம்பெறுகிறது. இதனுடன் மூக்குத்தி அம்மன் 2 (நயன்தாரா), டயங்கரம் (VJ சித்து), UNKILL_123 (அனுராக் காஷ்யப்) உள்ளிட்ட படங்களும் தயாரிப்பில் உள்ளன.



 



மேலும், ‘கர’ படத்தின் இசை உரிமைகளை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் லிமிடட் கைப்பற்றியுள்ளது. OTT ஸ்ட்ரீமிங் உரிமைகளை Netflix நிறுவனம் பெற்றுள்ள நிலையில், படம் 2026 கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விவரங்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா