சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ் 2026 தமிழ் திரைப்பட வரிசை வெளியீடு   |    சாய் துர்கா தேஜ் கிராமத்து அவதாரத்தில் ‘SYG (சம்பரால எட்டிகட்டு)’ சங்கராந்தி போஸ்டர் வெளியீடு   |    பிரமாண்ட புராண ஆக்ஷன் ‘நாகபந்தம்’ – நபா நடேஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு   |    2026 கோடை வெளியீட்டிற்கு தனுஷ் நடிப்பில் தயாராகும் மெகா திரில்லர்!   |    காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’   |    ஜப்பானை கலக்க வரும் ‘புஷ்பா2: தி ரூல்’, டோக்கியோவில் புரமோட் செய்து வரும் அல்லு அர்ஜுன்!   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் கனவு கூட்டணி பிரம்மாண்ட மெகா திரைப்படம்!   |    Letterboxd வரலாற்றில் சாதனை – இந்திய அறிமுக இயக்குநராக உலக டாப் டென்னில் அபிஷன் ஜீவிந்த்!   |    ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |    சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு   |    கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”   |    இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது   |    வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!   |    திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்   |    சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!   |    சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!   |    100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'   |    ’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |   

சினிமா செய்திகள்

நெட்ஃபிலிக்ஸ் 2026 தமிழ் திரைப்பட வரிசை வெளியீடு
Updated on : 15 January 2026

மும்பை, ஜனவரி 15, 2026: தமிழ் சினிமாவின் கதை சொல்லல் தரத்தை உலகளவில் எடுத்துச்செல்லும் நோக்கில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் 2026-ஆம் ஆண்டில் வெளியிடவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் முன்னணி நட்சத்திரங்கள், திறமையான இயக்குநர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் கதைகள் இடம்பெற்றுள்ளன.



 



2025 ஆம் ஆண்டில், ‘இட்லி கடை’, ‘டிராகன்’, ‘டியூட்’, ‘குட் பேட் அக்‌லி’ போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களும், ‘பைசன்’, ‘காந்தா’ போன்ற தரமான படைப்புகளும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வியத்தகு வரவேற்பைப் பெற்றன. இதனை தொடர்ந்து 2026-ஆம் ஆண்டு, திரையரங்கில் வெளியான பின்னர் உலகம் முழுவதும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் தமிழ் திரைப்படங்கள் பார்வையாளர்களை சென்றடையும் வகையில் வெளியாகும்.



 



இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முக்கியப்படங்கள்:



 





  • விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘காரா’




  • வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா 46’ மற்றும் ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’




  • கார்த்தி, கல்யாணி இணைந்து நடித்த அதிரடி ஆக்ஷன்-டிராமா ‘மார்ஷல்’




  • யோகி பாபு நடிப்பில் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘அன் ஆர்டினரி மேன்’




  • எஸ்.ஜே. சூர்யா நடித்தும் தயாரித்தும் வரும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’





ஆக்ஷன், டிராமா, கிரைம், நகைச்சுவை உள்ளிட்ட அனைத்து வகை திரைப்படங்களும், திரையரங்கில் வெளியீட்டுக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை நெட்ஃபிலிக்ஸ் தளம் மூலம் சென்றடையும்.



நெட்ஃபிலிக்ஸ் இந்தியா உள்ளடக்கத் துறை துணைத் தலைவர் மோனிகா ஷெர்க் கூறியதாவது:

“வலுவான, உணர்வுப்பூர்வமான, அசல் கதைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் இந்தியாவிலும் உலகளவிலும் பார்வையிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு, கொண்டாடப்படுகின்றன. பொங்கலை முன்னிட்டு நான்காவது ஆண்டாக எங்களின் தமிழ் உரிமம் பெற்ற திரைப்பட பட்டியலை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். ‘இட்லி கடை’, ‘டியூட்’, ‘டிராகன்’, ‘பைசன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற சிறந்த கதைகளை திறமையான இயக்குநர்களுடன் இணைத்து பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உற்சாகமாக காத்திருக்கிறோம்”



 



2026 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல்:



 



• பெயரிடப்படாத சூர்யா, வெங்கி அட்லூரி படம் (சூர்யா 46): சூர்யா, மமிதா பைஜு (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),



• AGS 28: அர்ஜுன் சர்ஜா, ப்ரீதி முகுந்தன்



(தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்),



• புரொடக்ஷன் நம்பர் 1:  ரவி மோகன், எஸ். ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),



• டயங்கரம்: வி.ஜே. சித்து (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),



• கட்டா குஸ்தி 2: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),



• இதயம் முரளி:  அதர்வா முரளி, காயடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),



• மார்ஷல்: கார்த்தி, கல்யாணி பிரியதர்ஷன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),



• அன் ஆர்டினரி மேன்:  யோகி பாபு (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),



• பெயரிடப்படாத தனுஷ் மற்றும் ராஜ்குமார் படம்: தனுஷ்



(தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),



• வித் லவ்: அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),



• பெயரிடப்படாத சூர்யா மற்றும் ஜித்து மாதவன் படம் (சூர்யா 47): சூர்யா, நஸ்ரியா நஸீம், நஸ்லென் கே. கஃபூர் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)



• காரா: தனுஷ், மமிதா பைஜு (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா