சற்று முன்

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |   

சினிமா செய்திகள்

'லென்ஸ்' பட இயக்குனருக்கு 19-வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது!
Updated on : 10 August 2016

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்வு செய்து வழங்கப்படும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, கடந்த 2015 ஆண்டுக்காக 'லென்ஸ்' படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.



 



இயக்குனர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான பிரேம புஸ்தகம் படத்தினை இயக்கி கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். இப்படத்தில் தான் அஜீத் அறிமுக நாயகனாக நடித்து கொண்டிருந்தார்.



 



இவரின் மறைவையடுத்து 'கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்' எனும் தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதளித்து கவுரவித்து வருகிறது.



 



இந்த ஆண்டுக்கான விருது, வெளியாவதற்கு முன்னரே பல்வேறு விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ள 'லென்ஸ்' பட இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



 



இதற்கான விழா, இம்மாதம் 12-ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கலந்துக்கொண்டு இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு விருது வழங்குகிறார்.



 



மேலும், கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக "The Making of an Actor" எனும் தலைப்பில் ஸ்ரீ போமன் இரானி பேசுகிறார். கவுரவ விருந்தினர்களாக இயக்குனர் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.



 



மேலும் இந்த நிகழ்ச்சியை மெருகேற்றும் விதமாக நடிகர்/ இயக்குனர் என பல்முகம் கொண்ட சுகாசினி மணிரத்னம், தனது தந்தையான சாருஹாசன் எழுதிய சுயசரிதை “Thinking on my feet” புத்தகத்தை அடிப்படையாக கொண்டு மேடை நாடகத்தினை இயக்குகிறார். இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகளான மதுவந்தி அருண் இணைந்து நடிக்கின்றனர். இது வரை பல தமிழ் மேடை நாடகங்களில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் முதன்முறையாக ஆங்கில மேடை நாடகத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் நடிகர்கள் பிரசன்னா மற்றும் சுப்பாராவ் நடிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா