சற்று முன்

'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |   

சினிமா செய்திகள்

தமிழ் ஸ்டுடியோ சார்பில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள்!
Updated on : 26 September 2016

தமிழ் சினிமாவின் நூற்றாண்டு காலம் “2016” தான் என்பதை சான்றுகளுடன் முன்வைக்கும் தமிழ் ஸ்டுடியோ திரைப்பட இயக்கம், தொடந்து  தமிழ் சினிமாவின்  நூற்றாண்டை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது.



 



அதன் ஒரு பகுதியாக "100 குறும்படங்கள் திரையிடல்" நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. பியூர் சினிமா புத்தக கடையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் முதல் திரையிடல் நேற்று நடைபெற்றது.



 



இதில் தேசிய விருது பெற்ற 4 முக்கியமான குறும்படங்கள் திரையிடப்பட்டன. பி.லெனின் இயக்கிய "நாக் அவுட்", ஞானராஜசேகரன் இயக்கிய "ஒரு கண் ஒரு பார்வை", சிவகாமி இயக்கிய "ஊடாக" மற்றும் வஸந்த் இயக்கிய "தக்கையின் மீது நான்கு கண்கள்" ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.



 



குறும்படங்களை பார்க்க அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருந்தது. ஏராளமானவர்கள் நின்றுக்கொண்டே படங்களை ரசித்தனர். சிறப்பு விருந்தினர்களாக படத்தொகுப்பாளர் பி.லெனின், இயக்குநர் வஸந்த், நாக் அவுட் குறும்படத்தில் நடித்த சத்தியேந்திரா ஆகியோர் வந்திருந்தனர்.



 



திரையிடலுக்கு பின்னர் படைப்பாளிகளுடன் சிறிய கலந்துரையாடலும் நடைபெற்றது. குறும்படங்கள் குறித்த பார்வையாளர்களின் கேள்விக்கு சிறப்பு விருந்தினர்கள் பதிலளித்தனர்.



 



நேற்று தொடங்கிய 100 குறும்படங்கள் திரையிடல் நிகழ்ச்சியில் 4 குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தொடர்ந்து 96 முக்கிய குறும்படங்கள் திரையிடப்டவுள்ளன. இதன் இறுதியில் தமிழ் சினிமாவின் நூறாவது ஆண்டுக்கான (2016) விழா ஒன்றையும் தமிழ் ஸ்டுடியோ இயக்கம் முன்னெடுக்கவுள்ளது.



 



மேலும், நமது தமிழ் சினிமாவின் நூறாவது ஆண்டு கொண்டாட்டத்தில் நாமும் இணைந்துக்கொள்ளும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடுகளை செய்துள்ளது. நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான நம்மால் இயன்ற நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் இதில் நாம் பங்குகொள்ள முடியும்.



 



இதற்கான நிதி உதவிகளை வழங்க விரும்பும் தோழர்கள் தமிழ் ஸ்டுடியோ, பேசா மொழி, பியூர் சினிமா இணையதளங்கள் மற்றும் தமிழ் ஸ்டுடியோ அருணின் முகநூல் பக்கம் உள்ளிட்ட முகநூல் பக்கங்களிலும் தொடர்புகொள்ளலாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா