சற்று முன்
சினிமா செய்திகள்
'வேலையில்லா பட்டதாரி 2' - இசையமைப்பாளர்கள் பெயர் குழப்பம்!
Updated on : 10 November 2016

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் அதிகாராப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆனால் இதில் அனிருத்தின் பெயரும் இடம்பெற்றதால் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழு, 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் பின்னணி இசை பலவற்றை இதிலும் பயன்படுத்தவுள்ளதால், அதன் இசையமைப்பாளரான அனிருத்தின் பெயர் இதிலும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இதன் கதை, வசனத்தை தனுஷ் எழுதுவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!
இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த 'யுவன் 360', 'சோனு நிகம் லைவ்', 'விஜய் ஆண்டனி 3.0', 'டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்', உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ஏற்பாடு செய்யவுள்ளது.
'ராக் ஆன் ஹாரிஸ் 3.0' என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் அக்டோபர் 4 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் டிஸ்டிரிக்ட் பை சொமாட்டோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.
இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சி குறித்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், "ரசிகர்கள் முன் இசைப்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சி. அதுவும் தாய் மண்ணான சென்னை ரசிகர்கள் முன் இசை நிகழ்ச்சியை வழங்குவது மறக்க முடியாத அனுபவம். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ரசிகர்களை சந்திப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது" என்றார்.
'ராக் ஆன் ஹாரிஸ் 3.0' நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்று காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் வழங்குவார்கள்.
ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான இசை நிகழ்ச்சி!
இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த 'யுவன் 360', 'சோனு நிகம் லைவ்', 'விஜய் ஆண்டனி 3.0', 'டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்', உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷம்மியா சென்னையில் முழுக்க பங்குபெறும் நிகழ்ச்சியை நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் முன்னணி இசை நிறுவனமான சரிகம உடன் இணைந்து வழங்க உள்ளது.
பாலிவுட்டில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஹிமேஷ் ரேஷம்மியா, தமிழில் கமல் ஹாசன் நடித்த 'தசவாதாரம்' வெற்றிப் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
'ஹிமேஷ் ரேஷமிய்யா கேப்மேனியா டூர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 16 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் புக் மை ஷோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.
இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், பிரபல பாலிவுட் இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷமிய்யா சென்னையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சரிகம உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஹிமேஷ் ரேஷமிய்யா, "இசைக்கு இன்றியமையாத இடம் கொடுத்துள்ள சென்னை ரசிகர்களை நேரில் சந்திப்பதற்கு காத்திருக்கிறேன். ஆகஸ்ட் 16 அன்று உங்கள் முன் இசைக்க ஆவலாக உள்ளேன்," என்றார்.
'ஹிமேஷ் ரேஷமிய்யா கேப்மேனியா டூர்' நிகழ்ச்சியில் ஹிமேஷ் ரேஷமிய்யா உடன் இணைந்து பிரபல பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்று மெல்லிசை மற்றும் துள்ளலிசை பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் இசைப்பார்கள்.
நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!
தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் - ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் , 'சிங்கம்' ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் கவனிக்க, கலை இயக்கத்தை துரைராஜ் கையாள, நிர்வாக தயாரிப்பு பணியை எஸ். பழனியப்பன் மேற்கொண்டார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் , தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் , அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், மயக்கும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
காமெடி நடிகராக பிரபலமான 'ஃப்ராங்க்ஸ்டர்' ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழாவும் , படப்பிடிப்பும் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
'பார்க்கிங் ' படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் - இணைய தள பிரபலமான நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்முதலாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். இயக்கும் பணியை நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் செயல்படும் ராகுல் ரவீந்திரன் மேற்கொள்கிறார்.
முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் குரலும் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக உள்ளது. தமிழ் பாடல்வரிகளைக் கவிஞர் ராகேந்து மௌலி எழுதியுள்ளார். அவருடைய வரிகள், இசையுடன் நெருக்கமாக இணைந்து, காதல் உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கின்றது.
ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி இடையிலான வசீகரிக்கும் கெமிஸ்ட்ரி பாடலின் வசீகரத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. விஸ்வகிரண் நம்பி நடன அமைப்பில், நேர்த்தியான நடன அசைவுகள், ராஷ்மிகாவின் அழகான முகபாவங்கள் மற்றும் தீக்ஷித்தின் அழகான நடிப்பு ஆகியவை உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இசை, பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு ஆழமான, நெகிழ்ச்சியுடன் கூடிய மயக்கும் அனுபவத்தை உருவாக்குகின்றன.
தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.
உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிக்கிறார். இப்படம், நம் மனதை ஆழமாக தொடும் கதைக்களத்துடன், பரவசமான நடிப்பை கலந்துசேர்த்த, ஒரு புதிய முயற்சியாக உருவாக உள்ளது.
இத்திரைப்படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும் பல ஆச்சரியமான தகவல்களுக்கு காத்திருங்கள்!
கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின்- பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்களும், ்படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால்.. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!
புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில், மனித குணத்தின் விசித்திரங்களை அழுத்தமாக பேசி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த “மனிதர்கள்” திரைப்படம், ஜுலை 17 இன்று முதல், சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.
Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், உருவான “மனிதர்கள்” திரைப்படம், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியானது.
ஒரு இரவில் ஒன்று சேர்ந்து, மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் அசத்தலான திரில்லராக, சொன்ன இப்படம், திரை ஆர்வலர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.
தற்போது இப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா என இரண்டு ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகி வருகிறது. இப்படத்தினை திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள், இப்போது வீட்டிலிருந்தே பார்த்து ரசிக்கலாம்.
இப்படத்தினை Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures சார்பில் இராஜேந்திர பிரசாத், ஜெ.நவீன் குமார், மு.கி.சாம்பசிவம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப குழுவில் ஒளிப்பதிவு - அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இசை - அனிலேஷ் எல் மேத்யூ , படத்தொகுப்பு - தின்சா, கலை - மகேந்திரன் பாண்டியன், பாடல் - கார்த்திக் நேத்தா, ஒப்பனை - அ சபரி கிரிசன், துனைத்தயாரிப்பு - தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், நா யுவராஜ், உதவி இயக்கம் - லோகேஷ் க கண்ணன், சண்டை பயிற்சி - வின் வீரா, ஒளிக்கலவை - ஆனந்த் இராமச்சந்திரன், சப்தம் - சதீஷ், வண்ணம் - வசந்த் செ கார்த்திக், வரைகலை - ஆன்டனி பிரிட்டோ, விளம்பர வடிவமைப்பு - ரிவர் சைடு ஹவுஸ் மக்கள் தொடர்பு : AIM சதீஷ், சிவா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
அருமையான திரை அனுபவமான "மனிதரகள்' திரைப்படத்தை, சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் கண்டு ரசியுங்கள் !.
https://www.sunnxt.com/movie/detail/227466
https://www.aha.video/movie/manidhargal
வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!
புதிதாகக் கால் பதித்திருக்கும், “PRK Productions” நிறுவனம் வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும், நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் துவங்கிய இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு ஆர் கே செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு மோகன மகேந்திரன் மற்றும் மாமன் படத் தயாரிப்பாளர் திரு குமார், நடிகர் திரு யோகிபாபு, இயக்குநர் திரு சுசீந்திரன், ராட்சசன் பட இயக்குனர் திரு இராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
முனியாண்டி விலாஸ் உணவகங்களின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான தெய்வத்திரு பாண்டியராஜ் அவர்களின் மகன் தான் திரு. ராஜ்குமார். பள்ளி வயது முதலே தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்க வேண்டும் என்ற கனவில் இயங்கி வந்த திரு ராஜ்குமார், தான் பத்தாவது படிக்கும் பொது, “PRK Productions” எனும் பெயரை உருவாக்கி வைத்துள்ளார். அதை நோக்கிய கனவில், இன்ஞ்சினியரிங் படிப்பிற்குப் பிறகு, தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில், திரு தியாகராஜன் அவர்களின் ஆசியுடன், தயாரிப்பு மேற்பார்வையாளராக 15 வருடம் பணியாற்றியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்தின் நுணுக்கங்களை முழுமையாகக் கற்றுக்கொண்டவர், தற்போது புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் முதல் படைப்பு, முன்னணி நட்சத்திர நடிகரின் நடிப்பில், முன்னணி இயக்குநர் இயக்கத்தில், தமிழின் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி ஜூலை 14 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், நடிகர் செளந்தரராஜன், படத்தொகுப்பாளர் பத்திரிகையாளர் டி.எஸ்.சுபாஷ், நடிகர் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு, நடிகர் சம்பத் ராம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் ஆனந்த் பாண்டி பேசுகையில், ”அனைவருக்கும் வணக்கம், கலக்கப்போவது யாரு, டான்ஸ் ஜோடி, ’பாவம் கணேசா’, ‘ராஜா ராணி’ சீரியல்கள் ஆகியவற்றில் நான் பணியாற்றியிருக்கிறேன். சாருஹாசன் சார் நடித்த ‘தாதா 87’ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போது ‘யாதும் அறியான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஒரே ஒரு போன் கால் தான், இப்படி ஒரு படம் இருக்கு பண்றீங்களா? என்று கேட்டார். அண்ணே இப்படி கேட்கிறீங்களே நீங்க பண்ண சொன்ன பண்ண போறேன், என்று சென்று விட்டேன். நல்ல கதாபாத்திரம் எனக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தை நாம தான் புரோமோட் பண்ணனும் என்று சில வரிககளை எழுதியிருக்கிறேன், அதை இங்கே சொல்ல நினைக்கிறேன், “கரண்டுக்கு தேவை ஒயரு, லாரியா ஓட்ட வேண்டும் டயரு, யாதும் அறியான் படம்னாலே ஃபயரு..”, “பரீட்சை எழுதுனா போடுவாங்க பாஸ், யாதும் அறியான் படம் எப்பவுமே மாஸ்”, படம் நிச்சயம் கலக்கலாக இருக்கும். பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தாலும், 2016 ஆம் ஆண்டு தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது, அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் அண்ணன் தான். அவரோட வாய்ஸ் பேச ஆரம்பித்ததும் நான் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டேன், அதன் பிறகு தான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்த படத்தையும், படக்குழுவையும் சிவகார்த்திகேயன் அண்ணா வாழ்த்தியிருக்கிறார். படம் சூப்பரா வந்திருக்கிறது. விஜய் சாரை வைத்து எங்க இயக்குநர் சூப்பரா ஒரு விசயம் பண்ணியிருக்காரு. அதுவும் இப்போது வைரலாக போய்ட்டு இருக்கு, படம் நிச்சயம் பெரிய அளவில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நாங்கள் வாய்ப்பு தேடும் போது பூந்தமல்லியில் இருந்து சாலிகிராமம் வருவோம், தூரமாக இருப்பதால் சாலிகிராமத்தில் ரூம் எடுத்து தங்கி விடலாம் என்று நண்பர்கள் சொல்வார்கள். ஆனால், இப்போது சாலிகிராமத்தில் இருப்பவர்களை விட இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள். சாலிகிராமத்தில் நிறைய பேர் வாய்ப்பு தேடிக்கொண்டு கஷ்ட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவாளர் எல்.டி பேசுகையில், “எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. எனக்கு அதிகம் பேச தெரியாது, இந்த படத்தில் பணியாற்றியது சந்தோஷம். ஒரு நல்ல படம் பண்ணனும் என்று வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது இயக்குநர் இந்த கதையை சொன்னார், படம் நன்றாக வந்திருக்கிறது என்று நம்புகிறோம். நீங்க தான் பார்த்துவிட்டு சொல்லனும், நன்றி வணக்கம்.” என்றார்.
இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் பேசுகையில், “யாதும் அறியான் சிறிய அளவில் தொடங்கி, பெரிய அளவில் முடிந்திருக்கிறது. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. மூன்று பாடல்கள் இருக்கிறது, மூன்று பாடல்களும் சிறப்பாக இருக்கிறது. நன்றி,” என்றார்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கஸாலி பேசுகையில், “யாதும் அறியான் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது அனைத்தையும் தெரிந்து பண்ணியிருக்கிறார்கள். விளம்பரத்தில் விஜய் முதல்வர் என்ற போஸ்டர் பெரிய வைரலாகியுள்ளது. இப்போது கூட நாயகன் தினேஷ், கொலை செய்துவிட்டு அப்படியே வருவது போல் கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார். படத்தின் பெயர் யாதும் அறியான், ஆனால் இயக்குநர் அனைத்தையும் அறிவான். ஒரு படத்தை எப்படி எடுக்கணும், எடுத்த படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும், என்பதை மிக தெளிவாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நான் வர காரணம், திருநெல்வேலி தினமலர் நிர்வாக இயக்குநர் தினேஷ் தான். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், கால்கள் தரையில் இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் தினேஷ், அவரது எளிமையும், பன்பும், இந்த படத்தை வெற்றியடைய வைக்கும், அவரை உயரத்திற்கு கொண்டு போகும். படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்த குழு அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுப்பார்கள், என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
இயக்குநர் நடிகர் இ.வி.கணேஷ் பாபு பேசுகையில், “தினமலர் குடும்பத்தில் இருந்து அம்பி, ரெமோ வருவார் என்று எதிர்பார்த்தால் அந்நியனே வந்திருக்கிறார். இன்று சைவத்தை விட அசைவம் தான் டிரெண்டாகி விட்டது. அதனால், அசைவமாகவும், கமர்ஷியலமாகவும் ஒரு படம் கொடுப்போம், என்று திட்டமிட்டு தினேஷ் சார் ஒரு படம் நடித்திருக்கிறார். இன்றைய சூழ்நிலைக்கு எப்படிப்பட்ட படம் ஜெயிக்கமோ அப்படி ஒரு படத்தை தினேஷ் சார் கொடுத்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். நேரில் சில மனிதர்களை பார்ப்போம், அப்போ ரொம்ப அமைதியானவர்களாக இருப்பார்கள், ஆனால் திரையில் அப்படியே எதிர்மறையாக அதிரடியாக இருப்பார்கள். நடிகர் விஜய் சாரும் அப்படி தான், அவருடன் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் ரொம்பவே அமைதியாக இருப்பார், சத்தமாக பேச மாட்டார், ஆனால் திரையில் அசத்திவிடுவார். அப்படிப்பட்டவராக தான் நான் தினேஷ் சாரை பார்க்கிறேன். அவரும் அமைதியாக இருப்பார், ஆனால் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது நடிப்பில் அசத்திவிட்டார். இந்த படத்தை பற்றி பல விசயங்களை தினேஷ் சார் என்னிடம் பகிர்ந்துக் கொள்வார், என்னையும் மற்றவர்களுக்கு பகிர சொல்வார், அவர் அப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை, காரணம் இது எங்களது கடமை அவங்களுக்கு நாங்கள் செய்ய வேண்டியது.
இயக்குநர் கோபி படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார், அவருக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம், விஜய் சார் அடுத்து படம் நடிப்பார், அதனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இந்த படத்தை அதிகமான திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார், அவரது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன். நடிகர் விஜயை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கும், அதற்கான ஆரம்பமாக தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவர் நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் பிரபலமானவர்களை இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் அவர் அதை செய்யாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார், புதியவர்கள் வெற்றி பெற்றால் வாய்ப்பு கொடுத்த நமக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆனால், இன்று புதுமுகங்கள் என்றால் சினிமா வியாபாரத்தில் தயக்கம் காட்டுகிறார்கள், அது மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
நடிகர் சம்பத் ராம் பேசுகையில், “இந்த படத்தின் ஹீரோ தினேஷ் சார், பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் போலவே தெரியவில்லை, மிக சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பஞ்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே தினேஷ் சார் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடிப்பார், என்று நம்புகிறேன். இயக்குநர் கோபி சார் சிறப்பாக இயக்கியிருக்கிறார், டிரைலர் மிக சுவாரஸ்யமாகவும், படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும்படி இருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது, இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்புகுட்டிக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.
படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுபாஷ் பேசுகையில், “இயக்குநர் கோபி, இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கைதட்டல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இங்கு நிறைய பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள், என்றால் அது தினேஷுக்காக தான். நம்முடைய பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அனைவருடனும் எளிமையாக பழக கூடியவர். அவரது எளிமை அவரை பெரிய உயரத்திற்கு கொண்டு போகும். இயக்குநருக்கு இந்த நேரத்தில் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும், காரணம் அப்புக்குட்டி உள்ளிட்ட பலருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் யாரை வேண்டுமானாலும் நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் அப்படி செய்யாமல் புதியவர்களுக்கும், வளர்ந்து வருபவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இன்று விஜய் சாரை பற்றி அனைவரும் பேசுகிறார்கள், ஆனால் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் என்பது செளந்தர்ராஜன் சொன்னது தான், அது விஜய் சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் நடிகராகவதற்கு முன்பாகவே சிறந்த சமூக செயல்பாட்டாளராக இருந்தார். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த படத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பத்திரிகையாளர் சகோதரர்கள், யார் யாரோ முன்னேற உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். நம்ம குடும்பத்தைச் சேர்ந்த தினேஷுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசுகையில், “ஒரு படத்தின் டிரைலர் அந்த படத்தின் தரத்தை நிர்ணயிக்கும், அதுபோல் இந்த படத்தின் டிரைலர் இந்த படம் ஒரு சிறப்பான படமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. பல படங்களின் டிரைலரை நாம் பார்க்கிறோம், ஆனால் யாதும் அறியான் டிரைலர் மிக சிறப்பாக இருக்கிறது. 2026 பற்றி இயக்குநர் ஒரு விசயம் சொல்லியிருக்கிறார், அது அவரது நம்பிக்கை. விஜய் மீது இயக்குநருக்கு இருக்கும் பற்றால் அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார். எனக்கும் அவர் மீது பற்று இருக்கிறது, அவருடன் 45 படங்கள் செய்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பதற்காக தினேஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார், அப்போது அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. பிறகு டிரைலரை அனுப்ப சொல்லி பார்த்தேன், வியந்து விட்டேன். மிக சிறப்பாக நடித்திருக்கிறார். டிரைலரும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக பின்னணி இசை மிக சிறப்பு. இங்கு வந்ததும் இசையமைப்பாளர் யார்? என்று கேட்டு அவரை பாராட்டினேன். அதேபோல் டிரைலரை எடிட்டர் நிரஞ்சன் சிறப்பாக கட் செய்திருக்கிறார். டிரைலரை பார்க்கும் போது படம் பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது. இந்த குழு பெரிய வெற்றியடைய வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், இயக்குநர் கோபி விஜய் சாரின் ரசிகர். அவர் முடிவு செய்துவிட்டார், நிகழ்ச்சிக்கு வருபவர்கள் விஜய் சாருடன் எதாவது தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்று. என்னையும் அந்த தகுதியால் தான் அழைத்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் விஜயின் ஆட்கள். விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை, அவர் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார். இரண்டு வாழ்க்கை கொடுத்தார். அது என் வாழ்நாள் முழுவதும் பெருமையாக நினைக்கும் விசயம். படத்தின் நாயகன் தினேஷ் பத்திரிகை துறையில் இருக்கிறார். பல்வேறு துறைகளில் இருந்து சினிமாவுக்கு வருவார்கள், அவர்கள் ஒரு ஆர்வத்தில், ஆசையில் வருவார்கள். அப்படி தான் தினேஷ் சாரையும் நினைத்தேன், ஆனால் தினேஷ் சாரிடம் முழுமையான நடிகருக்கான தகுதி இருக்கிறது. அவரிடம் கலை வெறி இருக்கிறது, அதற்காக தான் இப்போதும் கொலை வெறியோடு உட்கார்ந்து இருக்கிறார். காதல் மன்னன் ஜெமினி கணேசன் சார் இருந்தார், அவருக்குப் பிறகு காதல் இளவரசன் கமல்ஹாசன் வந்தார். அதன் பிறகு யாரும் இல்லை, இந்த டிரைலரை பார்த்த போது, அதில் வந்த பெட்ரூம் காட்சியில் மனுஷன் பூந்து விளையாடியிருக்கிறார். எல்லாமே செய்துவிட்டு லவ் என்று சொல்லும் இடம் செமையாக இருந்தது. அந்த காட்சிக்காக தான் அவர் கதையை ஒத்துக்கொண்டு இருப்பார் போல. கொஞ்சம் மூட் அவுட் ஆனவுடன், செல்போனை பார்த்து மூடை ஏத்திக்கிறாரு, பாக்யராஜ் சார் முருங்கைக்காய் பற்றி சொன்னார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் புது யோசனையை சொல்லியிருக்கிறார். செல்போனை பார்த்து மூட் ஏத்துறது. அந்த ஒரு காட்சியில் தினேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார், இந்த படத்திற்கு அந்த ஒரு காட்சி போதும். ஹீரோயின் வராததற்கு காரணமும், தினேஷ் இன்னும் அந்த மூட்ல இருந்து மாறாம இருப்பாரோ என்று பயந்து இருப்பாங்க. ஆனால், காதல் காட்சி, செண்டிமெண்ட் என அனைத்து இடங்களிலும் தினேஷ் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு அவர் பத்திரிகையாளர் என்பதை ஓரமாக வைத்துவிட்டு முழுநேர நடிகராகி விட வேண்டும், அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது.
இயக்குநர் கோபி விஜய் ரசிகர், விஜயின் விசயத்தை எங்கயாவது பதிவு செய்ய வேண்டும் ஒரு ரசிகராக, அதனால் தான் 2026 என்ற கான்சப்ட்டை வைத்திருக்கிறார். அவரது கனவு, ஆசை, நம்பிக்கை, விஜய் மீது உள்ள பற்று என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம். நான் விஜய் சாரிடம் ஒரு உதவி இயக்குநராக கதை சொன்னேன், அவர் கதையை ஓகே சொன்னதும் நான் இயக்குநராகி விட்டேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டது, அப்போது நான் அவரது ரசிகராகி விட்டேன். அப்படி மாறினால் தான் ரசிகர்களுக்கு ஏற்ற படத்தை கொடுக்க முடியும். திருப்பாச்சி கதையில், ஓபனிங் பாடல், பில்டப் ஆகியவை எதுவும் இல்லை. அவரது ரசிகரான பிறகு தான், அவரை ரசித்து, அவரது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக பல விசயங்களை சேர்த்தேன். ஒரு ஆக்ஷன் படம், ஒரு மாஸ் ஹீரோவை வைத்து பண்ணும் போது, அந்த ஹீரோவை இயக்குநர் நேசிக்க வேண்டும், அப்போது தான் அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக வரும். அதேபோல் காதல் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்றால் அந்த ஹீரோயினை காதலிக
- உலக செய்திகள்
- |
- சினிமா