சற்று முன்
சினிமா செய்திகள்
சுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..!
Updated on : 16 July 2018
சமீபத்தில் வெளியான 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு 'கோலிசோடா-2' ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என சிலாகிக்கிறார் க்ரிஷா க்ரூப் .பரதநாட்டியம் தனது உயிர் மூச்சு என்கிற க்ரிஷாவின் பூர்விகம் மலையாளம், வளர்ந்தது மும்பையில்.. என்றாலும் அழகாக தமிழ் பேசுகிறார் .
சில வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் ஒரு படத்தில் அறிமுகமானாலும் சினிமாவை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே விஸ்காம் படித்துவிட்டு மீண்டும் திரையுலகில் நுழைந்திருக்கிறார்.
அந்த மலையாள படத்தை பார்த்துவிட்டுத்தான் 'அழகு குட்டி செல்லம்' பட வாய்ப்பு இவரை தேடிவந்ததாம். தொடர்ந்து ஆண்டனி இயக்கத்தில் சாலை என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் வந்த வாய்ப்புதான் 'கோலிசோடா-2'
"விஜய் மில்டன் சார் என்னை முதலில் அழைத்தது வேறு ஒரு படத்திற்குத்தான்.. ஆனால் அப்படியே காட்சிகள் மாறி 'கோலிசோடா-2' படத்தை துவங்கி அதில் என்னை கதாநாயகியாகவும் ஆக்கிவிட்டார்.
கோலிசோடா முதல் பாகத்துக்கு மிகப்பெரிய ரசிகை நான்.. அதன் இரண்டாம் பாகத்தில் நான் நடித்தது என்னுடிய அதிர்ஷ்டம் தான். எனக்கு அடையாளம் தந்தது என்றால் அது 'கோலிசோடா-2' தான்" என உற்சாகமாக கூறுகிறார் க்ரிஷா க்ரூப் .
"இந்தப்படத்தில் சமுத்திரக்கனி சாருடன் நடித்தபோது சினிமா குறித்த நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. மொட்டை மாடியிலிருந்து இருந்து குதிக்கும் காட்சியில் சற்று பயமாக இருந்தது. ஆனால் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் அந்த காட்சியில் ஒரு கீறல் கூட விழாமல் என்னையே நடிக்க வைத்தார்" என கோலிசோடா-2 அனுபவம் பகிர்கிறார் கிரிஷா. '
கோலிசோடா-2' பார்த்துவிட்டு நடிப்பில் இவர் ரேவதியை ஞாபகப்படுத்துகிறார் என சில ஊடகங்கள் பாராட்டி வருவதால் இன்னும் உற்சாகமாகி இருக்கிறார் க்ரிஷா க்ரூப் . நடிப்பில் தனது ரோல் மாடல்கள் என்றால் ரேவதி, ஷபானா ஆஸ்மி, ஸ்மீதா பாட்டீல் ஆகியோரை குறிப்பிடுகிறார் க்ரிஷா.
தற்சமயம் சுசீந்திரன் இயக்கிவரும் 'ஏஞ்சலினா ' படத்தில் டைட்டில் ரோலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் க்ரிஷா க்ரூப் .
"திடீரென ஒருநாள் சுசீந்திரன் சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ஆடிஷனும் ஓகே ஆனது. இப்போதுவரை அவர், எப்படி என்னை இந்த கேரக்டருக்காக தேர்வு செய்தார் என்கிற விஷயம் கூட எனக்கு தெரியாது.
சுசீந்திரன் சாரின் வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை இரண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லோரும் காமெடி நடிகராக பார்த்த ஒருவரை அவர் வேறு கோணத்தில் காட்டியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.
அவரது பிலிம் மேக்கிங் ஸ்டைலே புதிதாக இருக்கும்" என்கிற க்ரிஷா இந்தப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர்தான் வேறு படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளாராம்..
சமீபத்திய செய்திகள்
10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் காலத்தை கடந்தும் பேசிக்கொண்டே இருக்கும். அந்த வகையில், 2016ஆம் ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘விசாரணை’ திரைப்படம், இன்று தனது 10ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. ஒரு திரைப்படமாக மட்டுமல்லாமல், ஒரு காலகட்டத்தின் சமூக சாட்சியாக மாறிய இந்த படைப்பு, இன்னும் பலரின் நினைவில் ஆழமாக பதிந்திருக்கிறது.
இந்த முக்கிய தருணத்தை நினைவுகூறும் வகையில், ‘விசாரணை’ படக்குழு பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் எம். சந்திரகுமார், நடிகர் வே.இரா. தினேஷ், இயக்குநர் & நடிகர் சமுத்திரக்கனி, கருணாஸ், இயக்குநர் சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படத்தின் நினைவுகளை மீட்டனர்.
Wunderbar Films மற்றும் Grass Root Film Company நிறுவனங்கள் தயாரிப்பில், எழுத்தாளர் எம். சந்திரகுமார் எழுதிய “லாக்கப்” நூலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘விசாரணை’, போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை நேர்மையாகவும், தைரியமாகவும் வெளிப்படுத்தியது. அதிகாரத்தின் கொடூர முகமும், அடித்தட்டு மக்களின் வலியும் எந்த வணிக சமரசமும் இல்லாமல் திரையில் பதிவு செய்யப்பட்டதால், படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது.
வெற்றிமாறனின் இயக்கம், இயல்பான நடிப்புகள், ஆவணப்படத் தன்மையிலான காட்சியமைப்பு மற்றும் மனதை உலுக்கும் கதை சொல்லல் ஆகியவை ‘விசாரணை’யை சாதாரண சினிமாவைத் தாண்டி ஒரு சமூக ஆவணமாக உயர்த்தின. தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற அங்கீகாரங்கள், தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கில் உயர்த்திய முக்கிய தருணங்களாக அமைந்தன.
10 ஆண்டுகள் கடந்தும் ‘விசாரணை’ இன்னும் பேசப்படுகிறது என்பதே அதன் தாக்கத்தின் அளவை உணர்த்துகிறது. சமூக பொறுப்புணர்வுடன் உருவான இப்படம், எதிர்காலத்திலும் துணிச்சலான சினிமாக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!
ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மை லார்ட்”. நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ரா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வருகிற 13ஆம் தேதி வெளியாக உள்ள “மை லார்ட்” திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. நல்ல உள்ளடக்கமுள்ள படைப்புகளை ஆதரிப்பதில் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வரும் 2டி நிறுவனம், இந்தப் படத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பும் நம்பிக்கையும் அடிப்படையாக கொண்ட நல்ல படைப்புகளுக்கு எப்போதும் 2டி நிறுவனத்தில் தனி இடம் உண்டு. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கோ, வியாபாரமோ அல்ல; அது பார்வையாளர்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும் சக்தி வாய்ந்த கலை. அப்படியான சினிமாக்களுக்கு துணை நிற்பது எங்கள் கடமை,” என கூறப்பட்டுள்ளது.
மேலும், “ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மை லார்ட்’ திரைப்படம் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை பேசும் ஒரு சமூக பிரதிபலிப்பு. இந்தப் படம் அதிகமான மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் ஆவலும் நம்பிக்கையும். இதனை வழங்குவதில் 2டி என்டர்டெயின்மென்ட் பெருமை கொள்கிறது,” எனவும் தெரிவித்துள்ளனர்.
சமூக அக்கறையுடனும் மனிதநேய உணர்வுடனும் உருவாகியுள்ள “மை லார்ட்”, ரசிகர்களிடம் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது திரையரங்குகளில் வெளியாகும் நாளில் தெரியவர உள்ளது.
என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரில்லர் திரைப்படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹாரூன், இந்தப் படத்திற்கு கதை எழுதி இயக்கியுள்ளார்.
‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் பரவலாக பாராட்டைப் பெற்ற நடிகர், இப்படத்தில் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தனது கடமையில் சந்திக்கும் உயிர்–மரண சவால்கள், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் மற்றும் அந்த சிக்கல்களில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதையே மையமாகக் கொண்டு இப்படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ளது. ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் திகில் கலந்த கதைமாந்திரம் இப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் ஜான் ராபின்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பல ஆல்பம் பாடல்களால் கவனம் பெற்ற அவர், இந்தத் திரில்லருக்கு வித்தியாசமான இசை அமைப்பை வழங்கியுள்ளதாக தகவல். ஒளிப்பதிவை கே.வி. கிரண் மேற்கொள்கிறார். டான்பாஸ்கோ படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள வேலு செய்துள்ளார். ரிச்சி ரிச்சர்ட்சன் நடன வடிவமைப்பை செய்துள்ளார்.
போலீஸை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியிருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.
கேப்டன் MP ஆனந்த் மற்றும் KSK செல்வகுமார் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக தயாரிப்பு பணிகளை ஒருங்கிணைத்துள்ளனர். சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உண்மை சம்பவங்களை நினைவூட்டும் வண்ணம் உருவாகி வரும் ‘பரீட்’, போலீஸ் வாழ்க்கையின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டும் வித்தியாசமான திரில்லராக திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!
தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனித்துவமான பயணத்தை அமைத்து வரும் நடிகர் நிகில் சித்தார்தா, தற்போது தனது கேரியரில் மிகப்பெரிய முயற்சியாக கருதப்படும் ‘சுயம்பு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகிறார். இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், பீரியட் ஆக்ஷன் வகையில் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்க, தாகூர் மது வழங்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் பன்மொழிகளில் வெளியாகி குறுகிய காலத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிக பார்வைகளை பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. டீசரில் வெளிப்பட்ட காட்சிகளின் பிரம்மாண்டம், போர்க்கள அமைப்புகள் மற்றும் நிகிலின் மாறுபட்ட தோற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
985ஆம் ஆண்டு பின்னணியில் இந்திய வரலாறு மற்றும் புராணத் தாக்கங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கதை, ஒரு வீரனின் எழுச்சியை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. நீண்ட தலைமுடி, சுருள் மீசை, அடர்த்தியான தாடி, வலிமையான உடல் அமைப்புடன் போர்வீரனாக நிகில் காட்சியளிக்கும் தோற்றம் பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் படத்தின் அளவை வெளிப்படுத்துகின்றன.
சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் இருவரும் வழக்கமான கதாநாயகி வரம்புகளை தாண்டி கதையின் மையத்தில் நிற்கும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுப்பராஜு, சுனில் உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்களும் கதைக்கு வலுவூட்டுகின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாகவும் ‘சுயம்பு’ உயர்தர முயற்சியாக திகழ்கிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் எம். பிரபாகரன் மற்றும் ரவீந்தர் உருவாக்கிய வரலாற்று செட் அமைப்புகள் படத்திற்கு உண்மைத்தன்மையை அளிக்கின்றன. ஒளிப்பதிவாளர் கே.கே. செந்தில் குமார் காட்சிகளுக்கு கண்கவர் தோற்றத்தை அளித்துள்ளார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை போர்க்களக் காட்சிகளுக்கு தீவிரத்தை கூட்ட, முன்னணி இந்திய VFX நிறுவனங்கள் உலகத் தரத்தில் காட்சிகளை வடிவமைத்துள்ளன. விஜய் காமிசெட்டியின் வசனங்கள், கிங் சாலமன் மற்றும் ஸ்டண்ட் சிவா அமைத்த சண்டைக் காட்சிகள், தம்மிராஜுவின் படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு மேலும் வலிமை சேர்க்கின்றன.
பிரம்மாண்ட தயாரிப்பு, வரலாற்று பின்னணி மற்றும் வலுவான நடிப்பு—all இணைந்து ‘சுயம்பு’ திரைப்படம் பீரியட் ஆக்ஷன் படங்களுக்கு புதிய அளவுகோல் அமைக்கும் என திரையுலகில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம், நிகிலின் திரைப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என கூறப்படுகிறது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான திரைப்படம் “வித் லவ் (With Love)”. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், அனஸ்வரா ராஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இன்றைய இளைஞர்களின் உணர்வுகள், உறவுகள் மற்றும் காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம், வெளியீட்டிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்களும் படத்தின் நவீன கதை சொல்லல் மற்றும் நடிப்பை பாராட்டியுள்ளனர்.
தற்போது அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படக்குழு பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் வரவேற்பிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது..,
மகேஷ் ஐயாவோட பல படங்களாக இந்தப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும், இது நல்ல படம் - ன்னு நீங்கள் நம்பினால், அதை முழு மனதோடு தூக்கிக்கொண்டு போய் ஒரு வெற்றிப் படமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய பெரிய நன்றிகள். இப்படத்தில் தயாரிப்பாளராக சௌந்தர்யா மேம் எங்களுக்கு கிடைத்தது, ஒரு பெரிய வரம்னு தான் நினைக்கிறோம். உண்மையிலேயே, நான் நீண்ட நாளா மனசுக்குள்ள வைத்திருந்த ஆசை – ரஜினி சாரை நேரில் சந்திக்கணும்ன்னு. அதை மகேஷ் ஐயாவிடம் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். சௌந்தர்யா மேடமிடம் சொன்னேன். அது இப்படத்தில் நடந்தது மகிழ்ச்சி.
ரஜினி சாரை பார்க்கும் போது வைரமுத்து சார் போல எப்படியாவது ஒரு கவிதை சொல்லி, சாரை இம்ப்ரெஸ் பண்ணணும்னு நினைச்சேன். உண்மையிலேயே அந்த கவிதை அவருக்கு ரொம்ப பிடிச்சது. என்னோட வாழ்நாள் கனவு நிறைவேறிச்சு.
இந்த படத்தில் ஒர்க் பண்ணிய ஒவ்வொருத்தருக்கும் நான் மனசார நன்றி சொல்லணும். மதன் – அடுத்த படம் இன்னும் கவனமா பண்ணணும். அபி – இது உன்னோட முதல் படம். அது ஜெயிக்கணும்னு நானும் ஷான் ஐயாவும் அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம். அது இப்போ நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. அனஸ்வராவுக்கு வாழ்த்துக்கள் , கடைசியாக, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் பெரிய நன்றி.
நடிகர் சரவணன் பேசியதாவது..,
இந்த படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன். அதே மாதிரி மகேஷ் சார், மேலும் இந்த படத்தின் முழு குழுவுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.இந்த படத்தில் என்னோட கேரக்டர் உண்மையிலேயே ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனாலும் அந்த சின்ன கேரக்டரையும் அழகாக எழுதி, அதைப் பாராட்டி, நிறைய ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் மனசார எழுதியிருந்தார்கள். என்னைப் பாராட்டிய எல்லாருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லக் கடன்பட்டிருக்கிறேன். இந்த படம் இன்னும் நல்ல படியாக, இன்னும் அதிக மக்களைச் சேரும் வகையில் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகை ஆனந்தி பேசியதாவது..
நான் இந்த படத்தைப் பற்றி பேசும்போது, ஒரு நடிகராக இல்லாமல், ஒரு ஆடியன்ஸாக பேசணும்னு ஆசைப்படுறேன். நேத்து நைட்டுதான் இந்த படம் பார்த்தேன். ஒரு நல்ல படத்தில் நானும் ஒருத்தராக இருப்பது மகிழ்ச்சி.
இன்றைய தலைமுறை பற்றி ஒரு தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது அதை மாற்றி வேறு பார்வையில் இப்படம் நம்மிடம் காட்டுகிறது.
இந்த படம் அந்த Human Nature-ஐ ரொம்ப அழகாக, ரொம்ப மென்மையாக சொல்லுகிறது. “There are no bad people.But we all do bad things sometimes.”
அது நம்ம எல்லாருக்கும் நடந்திருக்கலாம்.ஆனா அதே சமயம், நம்மளுக்குள்ள வளர வாய்ப்பு இருக்கிறது அப்படிங்கிற கருத்து இந்த படத்துல ரொம்ப அழகா ஒரு காதல் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் ஒரு பங்காக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
நடிகை காவ்யா பேசியதாவது..,
ஒரு புதுமுகமாக என்னை என் பெயர் சொல்லி பாராட்டிய அனைவருக்கும் நன்றி. என் கதாப்பாத்திரத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் படக்குழுவுக்கு என் நன்றி.
நடிகர் சச்சின் பேசியதாவது..,,
இப்படத்தில் பங்கு கொண்டது மிக மகிழ்ச்சி. இந்த மொத்தக்குழுவுக்கும் என் நன்றி. அபி மற்றும் அனஸ்வராவுக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகை அனஸ்வரா பேசியதாவது..,
இந்த படம் ரொம்ப ரொம்ப அன்போட உருவக்கிய படம். அந்த அன்பை ஆடியன்ஸ் அப்படியே ஏற்றுக்கிட்டது தான் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம்.
“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக மதனுக்கு மனப்பூர்வமான நன்றி. அபியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். அபியுடன் உள்ள கெமிஸ்ட்ரியை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்கள் ரசித்தது ரொம்ப மகிழ்ச்சி. சௌந்தர்யா மேடம், மகேஷ் அண்ணா, காவ்யா மற்றும் முழு நடிகர்–தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி.
இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரை சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது. எங்கள் படத்தை இவ்வளவு அன்போட ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
இந்தப்படத்துக்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. அபியை முதல் படம் செய்ய கஷ்டபட்ட காலத்திலிருந்து பார்க்கிறேன். அவனுடைய உழைப்பு 200 சதவீதம் இருந்தாலும் நீங்கள் அவனுக்கு முழு ஆதரவு தந்திருக்கிறீர்கள் நன்றி. அபி மிக அழகான மனது கொண்டவர் அவர் மாற மாட்டார் என நம்புகிறேன். எனது கூட்டாளி மோகன்ராஜனுடன் தொடர்ந்து படங்கள் செய்கிறேன் அவருக்கு என் நன்றி.
இயக்குநர் மதன் இந்தக்கதை சொன்ன போதே இது வெற்றிப்படம் என்பது தெரியும், கதை சொல்லும் போது தடுமாறினாலும் படத்தில் மிக அழகாக அதை நிறைவு செய்துவிட்டார். அனஸ்வரா கேரக்டரை எழுதிய விதமும், அதை எடுத்த விதமும் அத்தனை அழகாக இருந்தது. அனஸ்வராவுக்கு படத்தில் நான் கை தட்டினேன் அவர் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்.
தயாரிப்பாளர் மகேஷ் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அவரைப் பார்த்தால் என் பையன் தான் ஞாபகம் வரும். குழந்தை மனது கொண்டவர். கண்டிப்பாக இன்னும் 3 படங்கள் ஹிட் தந்துவிடுவார். எங்களுக்கு முழு ஆதரவு தந்ததற்காக நன்றி. சௌந்தர்யா மேம், அவர் மிகத்தெளிவான சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய திட்டமிடல் இருக்கும். அவர் இன்னும் நிறைய சாதிப்பார் அதைக் காண ஆவலாக இருக்கிறேன்.
படத்தில் உழைத்த அத்தனை நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடிய மக்களுக்கு நன்றி.
இயக்குநர் மதன் பேசியதாவது..,
எல்லாருமே“இந்த படம் கண்டிப்பா ஒரு வெற்றி படம்” என சொன்னார்கள். அதே போல படம் வெற்றியடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.மகேஷ் சார், சௌந்தர்யா மேடம், இருவருக்கும் பெரிய நன்றி. அதே மாதிரி சரவணன் சார் டீம் உட்பட, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். தூக்கமில்லாமல் இப்படத்திற்காக உழைத்த என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் பேசியதாவது..,
“நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.”நீங்கள் எல்லாரும் இல்லாம இந்த டீமும் இல்லை. அதனால ரொம்ப சந்தோஷம். பிரஸ் ஷோ முடிந்த பிறகு,நீங்கள் தந்த பாராட்டுக்களில் இருந்து தான் இந்த படம் உண்மையிலேயே take off ஆனது. இப்படத்தை மக்கள் மனதளவில் நெருக்கமாக கொண்டாடுகிறார்கள்.
மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்கு தெரியும். இந்தக் கதை சொல்லும்போதே, “இந்த படம் ஹிட்” எனத் தோன்றியது. அவன் கண்டிப்பாக அனஸ்வரா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். அனஸ்வரா நடிப்பை பார்த்த பிறகு அவர் எவ்வளவு பெரிய பலம் என்று புரிந்தது. அபி எனக்கு சொந்த தம்பி. அபியை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப் பையன் மாதிரி பார்த்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஷான் தான் என் மூன்று படத்திற்கும் இசையமைப்பாளர். இதில் அனீஷா கேரக்டருக்கு அவரின் இசை அற்புதமாக இருந்தது. எங்கள் சின்ன டீமை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர்ஸ்டாருக்கு நன்றி.
சௌந்தர்யா அக்காவுடனான உறவு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அவர் எனக்கு எப்போதும் அக்கா தான். எங்களால் முடியாத பல விஷயங்களை ஒரு போன் கால்லஅவங்க முடிச்சு கொடுத்து விடுவார்கள்.அக்கா – ஒரு பெரிய சப்போர்ட். எங்கள் டீமின்தூண். அவருடன் இன்னும் நிறைய படம் செய்வேன். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெரிய நன்றி.
தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது..,
“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது”ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து தான் படத்தை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் சென்று விட்டார்.
“படம் முடிந்ததும், வீட்டிற்கு சென்றபோது அப்பா–அம்மா இருவரும் என்னை கட்டிப்பிடித்து சிரித்தார்கள். அப்போது தான் ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். 16–18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும், இந்த படத்தின் மூலமாக தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இது தான் முதல் சக்சஸ் மீட்.
“அபி எனக்கு ஒரு பேபி பிரதர். அந்த மனதிலிருந்து வரும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இங்கே நீண்ட காலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கையுடன் கூறினார். அனஸ்வராவை எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள் என்று கேட்கத் தோன்றியது. இந்த படத்தில் அவர் மிக அழகாக நடித்துள்ளார். குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் அமைதியும், மழையை பார்த்து அவர் சிரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தருணம்”
இயக்குநர் மதன் கதை சொன்னபோதே இது வெற்றி படம் என்ற நம்பிக்கை வந்தது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளும், இறுதியில் நான்கு கதாபாத்திரங்களும் ஒரே ஷாட்டில் சந்திக்கும் காட்சியும் முழுமையான டைர்கடர்ஸ் டச். அவரது அடுத்த படத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு போட்டது பத்து நிமிடத்தில் உருவான இசை என்பது நம்ப முடியாத மாயை. அந்த மேஜிக் அவரால் மட்டுமே முடியும். பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், பிரஷாந்த் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்டஸை தாண்டி, மக்கள் தங்கள் படமாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” அனைவருக்கும் நன்றி.
நடிகர் அபிஷன் ஜீவிந்த் பேசியதாவது..,
“ரஜினி சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும், அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது. இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்ப சொன்னது… அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது,”
நீங்கள் படத்தை அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். நல்ல ரிவ்யூஸ், நல்ல வார்த்தைகள் – அதுதான் இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.
“என்னை ஹீரோவாக நம்பி இந்த இடத்துல நிற்க வைத்ததுக்கு மதனுக்கு ரொம்ப பெரிய நன்றி. உன்னை இந்த மேடையில் பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்த பயணம் இன்னும் பெரியதாக இருக்கும் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குறித்து,“எப்போதும் எனக்கு கூடுதலாக வேலை செய்வார். ‘அபிக்காக இதை இன்னும் நல்லா பண்ணலாம்’ன்னு சொல்ற அந்த மனசு ரொம்ப ஸ்பெஷல். புகழை கூட அழகாக, ஈகோ இல்லாமல் கொடுக்கத் தெரிந்தவர், அவருக்கு நன்றி. பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், ஸ்ரேயாஸ், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. அனஸ்வரா எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப அழகாக ஒர்க் ஆனது. ஆடியன்ஸ் அதை ரொம்ப ரசிக்கிறார்கள். இந்த கூட்டணி அடுத்தும் தொடரும். காவியா, சச்சின், தேனி முருகன், சரவணன், ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் மகேஷ் அண்ணா படம் ஹிட் ஆன பிறகும், ‘நான் எதாவது தவறு பண்ணினேனா ? ன்னு கேட்கும் அந்த மனசு எல்லாருக்கும் கிடைக்காது. அவர்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அது தான் இந்த உறவின் அழகு,” அவருக்கு என் நன்றிகள்.
சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு“‘சக்ஸஸ் இப்படித்தான் இருக்குமா என்று அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. மகேஷ் அண்ணா சௌந்தர்யா மேம் நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரிய படம் செய்கிறோம். இந்த படம் இன்றைக்கு மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த பயணத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி
டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய அளவுகோல்களை அமைத்து வருகிறது. டீசர் கூட வெளியாகாத நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மொத்தமாக ₹225 கோடி மதிப்பிலான விநியோக ஒப்பந்தங்களை கைப்பற்றியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, ஆந்திரா–தெலங்கானா சந்தையில் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனத்துடன் ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ‘டாக்ஸிக்’ தெலுங்கு மார்க்கெட்டில் புதிய விதிகளை எழுதத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச விநியோக உரிமைகளை முன்னணி நிறுவனமான Phars Films ₹105 கோடி முன்பணம் கமிஷன் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம், ‘டாக்ஸிக்’ மீது உலக சந்தையில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய இந்திய மொழி பதிப்புகளுக்கே பொருந்தும்; ஆங்கில பதிப்பு இதில் சேர்க்கப்படவில்லை.
Phars Films நிறுவனத்தின் CEO & Founder திரு. அஹமத் கொல்சின் கூறியதாவது..,
"டாக்ஸிக்" மூலம் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் கவரும் ஒரு கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த படத்தை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் பெருமை கொள்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களில் இந்தக்கதை கொண்டாடப்படுவதைக் காண ஆவலாக உள்ளோம். இந்த வெளிநாட்டு வெளியீடு Phars Film-க்கு முக்கிய மைல்கல்லாகும். உலகம் முழுவதும் பார்வையாளர்கள் "டாக்ஸிக்" படத்தின் தீவிரத்தையும் உணர்ச்சி ஆழத்தையும் அனுபவிப்பார்கள் என்பதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்.”
கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட K நாராயணா கூறியதாவது..,
"டாக்ஸிக்" ஒரு உலகளாவிய சினிமா மொழியில் பேசும் படமாக கற்பனை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட அளவிலான கனவுக்கு, உலகளாவிய வலிமை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட கூட்டணி தேவைப்பட்டது. சர்வதேச சந்தைகளில் இந்திய சினிமாவை வலிமையாக நிலைநிறுத்துவதில் Phars Films தொடர்ந்து அபார திறனை நிரூபித்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு விநியோக ஒப்பந்தத்தில் அவர்களுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவர்களின் பரந்த மற்றும் நுணுக்கமான அணுகுமுறையில், "டாக்ஸிக்" உலகம் முழுவதும் அதற்குரிய அளவிலும் தாக்கத்திலும் வேகத்திலும் கொண்டாடப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இது இந்திய சினிமாவின் உலகளாவிய வெளியீட்டில் புதிய அளவுகோல்களை உருவாக்கும்.”
உள்நாட்டு (தெலுங்கு) சந்தையில் சாதனை புரிந்த ஒப்பந்தம், ₹105 கோடி வெளிநாட்டு ஒப்பந்தம், மேலும் KGF 2-ன் உலக பாரம்பரியம் — இவற்றின் பின்னணியில் "டாக்ஸிக்" வெளியீட்டுக்கு முன்பே உலகளாவிய பெரும் நிகழ்வாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மிகப்பெரிய சர்வதேச அளவிலான தயாரிப்பில் உருவாகியுள்ள "டாக்ஸிக்" , உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு, வலுவான VFX, வலுவான கதை உலகம், மற்றும் பெரும் நட்சத்திரக் கூட்டணி ஆகியவற்றால் நிரம்பியுள்ளது; இது எதிர்காலத்தில் ₹1000 கோடி மெகா பிளாக்பஸ்டராக மாறும் முன்னோட்டத்தை அளிக்கிறது.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) - தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.
கீது மோகன் தாஸ் இயக்கத்தில், யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து எழுதியுள்ள ‘டாக்ஸிக்’, KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் தயாரிப்பாக, ஈத் – உகாதி – குடி பட்வா பண்டிகைகளை முன்னிட்டு மார்ச் 19, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!
‘மூன்வாக்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “Yethu” வீடியோ பாடல் சமூக ஊடகங்களை முழுவதும் கைப்பற்றியுள்ளது. வெளியான சில நாட்களிலேயே இந்தப் பாடல் ஒரு உலகளாவிய நடன ட்ரெண்டாக மாறி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் “Yethu” பாடலுக்கு நடன ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மட்டுமின்றி, சிறார்கள், தொழில்முறை நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக்கலைஞர்களும் இந்த ட்ரெண்டில் இணைந்து பாடலின் ஆற்றலை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர்.
யூடியூபில் வெளியான இரண்டு வாரங்களிலேயே 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள “Yethu”, சர்வதேச விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், நாளுக்கு நாள் மேலும் வேகமெடுத்து வருகிறது.
இந்த வைரல் அலைக்கு சிறப்பு சேர்த்தது ஆப்பிரிக்காவின் பிரபலமான “Hypers Kids Africa” குழந்தைகள் இசைக்குழு. அவர்கள் வெளியிட்ட “Yethu” நடன ரீமேக் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாமே “Thank you for the love. You guys are terrific” என்று கருத்து தெரிவித்தது, இந்த ட்ரெண்டை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றது. குழந்தைகள் குழுவும் “Happy to see your comment. We love you too” என்று பதிலளித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நடனப்புயல் பிரபுதேவாவின் அதிரடி அசைவுகள், ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளலான இசை, மற்றும் கவர்ச்சியான ஒளிப்பதிவு—all சேர்ந்து “Yethu” பாடலை ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியுள்ளன. கடினமான நடன அசைவுகளை எளிமையாக வெளிப்படுத்தியுள்ள பிரபுதேவாவிற்கு பாராட்டுகள் குவிகின்றன.
தாளம், ஒற்றுமை மற்றும் எல்லைகளை தாண்டிய படைப்பாற்றலை கொண்டாடும் ஒரு உலக நடன விழாவாக மாறியுள்ளது “Yethu”. தற்போதைய சூழலில், இது ஒரு சாதாரண பாடல் அல்ல — கலாச்சாரங்களை இணைக்கும் ஒரு உலக நடன கீதமாக உருவெடுத்துள்ளது.
மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் வெகுவாக சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கிரைம் திரில்லர் படத்தில், சரத்குமாருடன் இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார். மேலும், ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை, தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
பிப்ரவரி 27 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் படக்குழுவினரும் அதனை பெற்றுக் கொண்டனர்.
விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில்,
"இன்றைய தேதியில் நல்ல படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பல சவால்கள் இருக்கின்றன. நல்ல கன்டென்ட் கிடைப்பதும் பெரிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் ஆழி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத்குமாரின் ரசிகர். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த இந்த திரைப்படத்தை விநியோகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வெளியாவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் பெரும் போராட்டம் இருக்கிறது. தமிழ் திரையுலக நலனுக்காக போராடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து வியாபார வழிமுறையை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை தாமரை செல்வி பேசுகையில்,
''இது எனக்கு முதல் மேடை. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன் பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னை படபிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி," என்றார்.
நடிகர் வையாபுரி பேசுகையில்,
''சரத்குமாருடன் 2001ம் ஆண்டிற்கு முன்னர் நடித்துள்ளேன். அதன் பிறகு இப்போது தான் அவருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநர் என்னிடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டார். ஆனால் ஒரே நாளில் அனைத்து படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார். மலையாள இயக்குநர்கள் தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று என ஆசைப்படுகிறார்கள். அதற்காக இயக்குநர் உருவாக்கிய கதைதான் 'ஆழி' . இப்படம் பிப்ரவரி 27ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை தேவிகா சதீஷ் பேசுகையில்,
"தமிழில் நான் நடிக்கும் மூன்றாவது படம் 'ஆழி'. நான் இந்தப் படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்திருக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத் குமார் சார் நடித்த படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். படத்தில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு அப்பாவை போல் அறிவுரை கூறி அன்பாக அக்கறையுடன் நடத்தினார். என்னுடைய ஆசிரியர்களுக்கும் இயக்குநர் மாதவ் ரமா தாஸ் இயக்கிய படங்கள் பிடிக்கும். இந்தப் படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். அதனால் படத்தின் தரம் அனைவருக்கும் பிடிக்கும். படத்தின் பணியாற்றிய சக நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
நடிகர் இந்திரஜித் ஜெகன் பேசுகையில்,
"இப்படத்தில் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. திரைக்கு முன்னாலும்... திரைக்குப் பின்னாலும்... அவர் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆழி படக்குழுவில் நானும் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது," என்றார்.
தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில்,
"படத்தின் டைட்டில் ஆழி. ஆழி என்றால் கடல். உங்களில் யாருக்காவது கடலின் ஆழம் என்ன என தெரியுமா? தெரியாது. அதேபோலத்தான் என்னுடைய நண்பர் சரத்குமாரின் நடிப்பின் ஆழம். இன்னும் அவர் புதிதாய் நடித்துக் கொண்டே இருப்பார். அவர் முதலில் ஏற்று நடித்த கேரக்டர்கள் வேறு. வில்லன், ஹீரோ, லவ்வர் பாய், ஃபாதர்- ஃபேமிலி மேன் டு எவரிதிங். ஆனால் இதில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்றைய இளம் கலைஞர்கள் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இதனை இன்றைய 85 சதவீத நடிகர்கள் செய்வதில்லை. அவர் இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
கடல் அலையின் ஓசையை கேட்டிருப்பீர்கள். கடல் - ஆழியின் ஒலியை கேட்டிருக்கிறீர்களா? அதனை இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி கேட்க வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இயக்குநர் மாதவ் ரமா தாசன் வித்தியாசமான திரைக்கதையில் கதையை சொல்லி இருக்கிறார்.
தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன் எனது தயாரிப்பில் வெளியான மலையாள படத்தை 26 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர். சிறந்த அனுபவசாலி. அவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூன் மாதத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கும். அனைவரும் வருகை தாருங்கள். சினிமாவை மேலும் வளப்படுத்துவோம்," என்றார்.
இயக்குநர் மாதவ் ரமா தாசன் பேசுகையில்,
"நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இதற்கு முன் மலையாளத்தில் 'மேல் விலாசம்', 'அப்போதகேரி ', 'இளையராஜா ' என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். இதில் 'இளையராஜா' படத்தை தமிழில் உருவாக்க எண்ணினேன். தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி உருவாகியுள்ளது. 70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்த கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காக சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. அதனுடைய ஒலிக்காக கஷ்டப்பட்டு உழைத்தார். நாயின் குரைப்பு ஒலியை துல்லியமாக பதிவு செய்யும்போது அவருடைய மைக் ஒன்றும் சேதமடைந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக உழைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயின் கதாபாத்திரமும், அதனுடைய ஒலி அமைப்பும் ரசிகர்களை கவரும். இந்தப் படத்தை பார்த்த பிறகு அனைவருக்கும் கடலுக்குள் நிஜமாகவே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.
இந்தக் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் தருணத்தில் அதிகாலை 3 மணி அளவில் கூட என்னை தொடர்பு கொண்டு அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விகளை கேட்பார். அதற்கு நான் விளக்கம் அளிப்பேன். இந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் சரத்குமார். இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடிலும் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடித்த வையாபுரி, இந்திரஜித், தேவிகா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நிகில் முருகனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்,'' என்றார்.
சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி பேசுகையில்,
"சரத்குமார் நடித்த பல படங்களை என்னுடைய கல்லூரி காலங்களில் பார்த்து ரசித்து கொண்டாடி இருக்கிறேன். அவரை மீண்டும் இந்த படத்திற்காக திரையில் பார்த்தபோது அவர் அதே இளமையுடன் இருப்பதை பார்த்து வியந்து போனேன். இவர் எப்படி இளமைக் குன்றாமல், வயதே ஆகாமல் தோன்றுகிறார் என ஆச்சரியப்படுகிறேன். நடிகர், பாசமுள்ள தந்தை, நிறுவனத்தின் தலைவர் என அவர் எப்போதும் இயல்பாக சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்கிறார். இதைத்தான் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரும் பின்பற்றுகிறார்கள்.
சரத்குமாரை பற்றி இந்திரஜித் குறிப்பிட்டது போல் அவரிடம் இருக்கும் ஒழுக்கத்தை இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியை செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.
நான் இதுவரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் பழகி பணியாற்றி இருக்கிறேன். இந்தி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன், தென்னிந்திய சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறேன். இரண்டிலும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். சினிமாவைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள். நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குதர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரை கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்.
அத்துடன் இவர்கள்தான் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களின் மனநிலையை கணிக்கிறார்கள். தொழில்நுட்பம், கலை அழகு, கதை, கதாசிரியர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இந்த காரணத்தினால் தான் தமிழ் சினிமா, மலையாள சினிமா, மராத்தி சினிமா,.வங்காள சினிமா ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம்.
இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தேவிகாவின் புன்னகை நன்றாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,'' என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில்,
''இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான 'மேல் விலாசம்' படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்த படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாக தான் பார்க்கிறேன்.
பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.
இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். செல்போனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்சில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏந்த குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.
மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்த படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையை சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்.
தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன், விநியோகஸ்தர் ஹரி உத்ரா, பாடலாசிரியர் நவீன், வையாபுரி, தாமரைச்செல்வி, தேவிகா சதீஷ், இந்திரஜ
உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மை லார்ட்’ (My Lord) திரைப்படம், பிப்ரவரி 13 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட வெளியீட்டை முன்னிட்டு, நேற்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய நிகழ்வில், படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், பாடல்கள் பாடியும், பட வசனங்களை பேசியும், மை லார்ட் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முழுவதும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்தது.
இந்நிகழ்வினில்
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
மை லார்ட் ரசிகர்களுக்கு ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும்.
ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம்.
சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தாலும் அதை சாப்பிடக் கூடாது.
“மை லார்ட்” படம், எல்லாருமே ரசித்து, சந்தோஷமாக, ரொம்ப என்ஜாய் பண்ணி, எண்டர்டெயின் ஆகி பார்க்குற சுவையுடன் கூடிய படமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில், மனிதர்களாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தும் படமாகவும் இருக்கும்.
சசி சாருக்கு “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்திற்கு பிறகு “மை லார்ட்” மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். ராஜுமுருகனுக்கு இது பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி.
இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,
மை லார்ட் பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதாவது வேலண்டைன்ஸ் டே சமயத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் பலர், “வேலண்டைன்ஸ் டேக்கும் ‘மை லார்ட்’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்கள். உண்மையில் இந்த படத்துக்கும் வேலண்டைன்ஸ் டேவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஏனென்றால் மை லார்ட் என்பது சசிகுமார் மற்றும் சைத்ரா (முத்துசிற்பி, சுசீலா) ஆகியோரின் காதல் நிறைந்த ஒரு தம்பதியரை மையமாக கொண்ட படம்.
ஒரு அழகான கணவன்–மனைவி.அவர்களுக்கிடையிலான அன்புதான் இந்த படத்தின் மையம். கணவன்–மனைவிக்கிடையில் இருக்கும் ஆழமான அன்புதான், உலகத்திலேயே மிகப் பெரிய காதல். அதனால் மை லார்ட் வேலண்டைன்ஸ் டே சமயத்தில் வெளியாகிறது. இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது. என்னுடைய படங்களில் பொதுவாகவே காதலுக்கு நான் மிக முக்கியத்துவம் கொடுப்பேன். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல.
நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையே காதல் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில், இந்த படம் கணவன்–மனைவிக்கிடையிலான காதலை பேசுகிறது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் சொல்லும் படமாக இருக்கும்.
இப்படியான அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் படத்தை சசிகுமார் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும் — சசிகுமார் என்றாலே அன்பும் மனிதநேயமும் கொண்டவர் அது சினிமாவில் மட்டுமல்ல; சினிமாவுக்கு வெளியிலும் அவர் அப்படியே வாழும் மனிதர். அதனால் முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிட சிறந்த ஆள் யாரும் இல்லை.
அதேபோல் சைத்ரா இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மை லார்ட் மூலமாக அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.கர்நாடகாவிலிருந்து ஒரு சிறந்த நடிப்புத் திறன் கொண்ட நடிகை நமக்கு கிடைத்துள்ளார். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் பூமி. அந்த வகையில், அவரையும் தமிழ்நாடு வாழ வைக்கும்.
என்னுடைய ஆத்மார்த்தமான இசை நண்பர் ஷானுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.
பெரும் உழைப்புடன், முழுக்க முழுக்க மக்களுக்கான படமாக மை லார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நீங்கள் தரும் அன்புதான் எங்களைப் போன்ற கலைஞர்களை வாழ வைக்கும். அனைவருக்கும் நன்றி. பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பாருங்கள்.
நடிகை சைத்ரா பேசியதாவது..,
இந்தப்படம் மிக மிக இனிமையான அனுபவம், இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகள் பங்குபெற்ற படத்தில் நானும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஷான் ரோல்டன் இசை அனைவருக்கும் பிடிக்கும். இப்பட பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப்படத்தில் காதல் இருக்கிறது. சசிகுமார் மிக ஜாலியானவர். அவர் இயக்குநர் என்பதால், அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் இன்னும் நிறைய படம் நடிக்க ஆசை. பொலிடிகல் டிராமாவும் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பயனுள்ள படமாக இருக்கும்.
எல்லோரும் கண்டிப்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பார்த்து ஆதரவு தாருங்கள்.
நடிகர் சசிக்குமார் பேசியதாவது…,
டூரிஸ்ட் ஃபேமிலியில் மனிதநேயத்தைப் பற்றி சொன்ன மாதிரி, இந்த படமும் உங்களுக்கு அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் படம். என்னுடைய படங்கள் எப்போதுமே ஃபேமிலிக்கான படங்கள். உங்கள் குடும்பத்தோட, குழந்தைகளோட நிச்சயமாக வந்து பார்க்கலாம். இளம் தலைமுறைக்கும் ஏற்ற ஒரு படம். இப்போ உள்ள ஜெனரேஷன், வேகமா கோபப்படுற சூழ்நிலைக்கு நடுவில்,
“பொறுமையா இருங்க, மனிதநேயமா இருங்க” என்று சொல்கிற படம். ராஜுமுருகன் சார் ஸ்டைலில், கலகலப்பான காமெடியோட படம் நகரும். உங்களை சோகப்படுத்த மாட்டோம். அழ வைக்க மாட்டோம். சிரிக்க வைப்போம்… சிந்திக்க வைப்போம்.
கர்நாடகாவிலிருந்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகும் நாயகி சைத்ரா ஜே. ஆச்சார், தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கன்னடத்தில் சிறந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்தியுள்ள அவர், தமிழிலும் முக்கியமான நடிகையாக வளர்வார் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘மை லார்ட்’ திரைப்படம் அவருக்கான ஒரு சிறந்த அறிமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையில் படக்குழுவில் இணைந்த அவர், எந்த தயக்கமும் இன்றி கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்து நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குரலின் தனித்துவம் காதல், சோகம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைவதில் பெரும் மகிழ்ச்சி இருப்பதாகவும், பிப்ரவரி 13 அன்று வெளியாகும் ‘மை லார்ட்’ திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும் எனவும் படக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏழை, எளிய மக்கள்மீது நடைபெறும் அதிகார அத்துமீறல்களை அரசியல் நையாண்டியுடன் சித்தரிக்கும் இப்படம், அதே சமயம் அன்பான குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டு, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் இயக்குநர் ராஜுமுருகன் எழுதி இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்க, கலை இயக்கத்தை முனி பால்ராஜ், படத்தொகுப்பை சத்யராஜ் நடராஜன் மேற்கொண்டுள்ளனர். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட் அமைத்துள்ளனர்.
அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் நிகழும் சுரண்டல்களை சட்டயர் (Satire) பாணியில் விவரிக்கும் இந்த படம், ஒரே நேரத்தில் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாகியுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து, அம்பேத்குமார் வழங்கும் இந்த திரைப்படத்தை, ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
‘மை லார்ட்’ திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!
இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரில்லர் திரைப்படமான "கென்னடி" யின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து, விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இந்த திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்திய பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.
மும்பையை பின்னணியாகக் கொண்டு, அனுராக் காஷ்யப்பின் முத்திரை பதிந்த நாயர் (Neo-Noir) பாணியில் உருவாகியுள்ள இந்த படம், முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறும் கென்னடி உதய் ஷெட்டியின் இரட்டை வாழ்க்கையை மையமாகக் கொண்டது. பகலில் டாக்சி ஓட்டுநராக எளிய வாழ்க்கை நடத்தும் கென்னடி, மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கான்க்காக ஆபத்தான கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுகிறார்.
தனது மகன் இழப்பால் உண்டான மனவேதனை, சிதைந்த குடும்பத்தின் நினைவுகள், கடந்த காலத்தின் நிழல்கள் ஆகியவை கென்னடியை இடையறாது துரத்துகின்றன. வன்முறையும், ஊழலும் நிரம்பிய நகரத்தில், தன்னையே தேடும் ஒரு மனிதனின் உள் பயணமே இப்படத்தின் முக்கிய கருவாக அமைந்துள்ளது.
படத்தில் ராகுல் பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திரங்கள் கென்னடியின் இருண்ட உலகத்திற்கு பல்வேறு அடுக்குகளை சேர்க்கின்றன.
கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்பும் போராட்டம் ஆகிய உணர்வுகளை தீவிரமாக வெளிப்படுத்துகிறது. வெடிப்புகள், சதி வலையங்கள், அதிகார அரசியல் என அபாயகரமான சூழலில் சிக்கிக் கொள்ளும் கென்னடி, உண்மை, பழிவாங்கல் மற்றும் இறுதிக்கட்ட மீட்பை நோக்கி வன்முறையுடன் பயணிக்கிறார்.
ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள் மற்றும் அனுராக் காஷ்யப்பின் தனித்துவமான கதை சொல்லும் பாணி ஆகியவை இணைந்து, தனிமை, நீதி மற்றும் சமரசமற்ற முடிவுகளின் விலையை ஆராயும் ஒரு தீவிரமான திரையனுபவமாக ‘கென்னடி’ உருவாகியுள்ளது.
படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,
“கென்னடி" நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”
நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,
“கென்னடி பாத்திரத்தில் நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும் நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”
சன்னி லியோன் கூறியதாவது..,
“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













