சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது - நமீதா பிரமோத்
Updated on : 20 July 2018

தமிழ் சினிமா ஒரு போதும் பிராந்திய கலைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமையை அளித்ததில்லை. மாறாக எல்லா மொழியில் இருந்தும் திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு வரும் சிறந்த கலைஞர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தே வந்திருக்கிறது. நீங்கள் ஒரு உதாரண பட்டியல் வாசித்தால் அது எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போகும். கலை திறன்கள் சங்கமித்து ஒரு  பெருங்கடலை உருவாக்கும் ஒரு முக்கிய இடமாக தமிழ் சினிமா விளங்குவதாக நடிகை நமீதா பிரமோத் தன் ஆழ்மனதில் இருந்து உணர்கிறார். மேலும் அவர் இதை பற்றி குறிப்பிடும்போது, "கலை மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது. எங்கள் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, நானும் எப்போதும் தமிழ் சினிமாவின் கிரியேடிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறேன்" என்றார். 



சமீபத்தில் நமீதா பிரமோத் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றதோடு, அவருக்கு பாராட்டுக்களையும் பெற்றுத் தந்த கம்மர சம்பவம் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் நமீதா பிரமோத். சித்தார்த், திலீப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தில் நமீதா நடித்த 'பானுமதி' கதாபாத்திரம் கூடுதல் ஈர்ப்பாக  திகழ்ந்தது. தற்போது திலீப் உடன் ஒரு 3D படத்தில் இணைந்து நடிக்கிறார் நமீதா பிரமோத். இது பற்றி அவர்  கூறும்போது, "இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது" என்கிறார்.



அவருடைய பெயர் வெளியில் தெரியும் முன்பே பலரையும் ஈர்த்தது அவரின் நடனம் சிறப்பான நடன திறமை தான். பாரம்பரிய நடனத்திற்கென தனியாக சிறப்பு பயிற்சி எடுத்தீர்களா? என்று கேட்டால், "சினிமாக்கள் மூலம் தான் நான் நடனம் கற்றுக் கொண்டேன். பிருந்தா மாஸ்டர், ஷோபி பால், தினேஷ் மற்றும் சிலர் மூலம் நடன திறமையை வளர்த்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா