சற்று முன்

காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |   

சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 3 முதல் அதர்வா முரளியின் 'பூமராங்' இசை!
Updated on : 20 July 2018

ஒரு திறமையான இயக்குனர்  இசையின் மீது பாதி நம்பிக்கையை வைப்பார். குறிப்பாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகழ்பெற்ற பள்ளியில் இருந்து இயக்குனரான கண்ணன் போன்ற ஒரு இயக்குனர் தனது திரைப்படங்களில் இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக இருப்பார். பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்ட போதிலும், அவரது திரைப்படங்கள் ஒருபோதும் இசை விருந்தை அளிக்க தவறியதில்லை. அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் 'பூமராங்' படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ரதன் இசையமைத்திருப்பது படக்குழுவை தன்னம்பிக்கையோடு வைத்திருக்கிறது. இப்படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். குறிப்பாக, சமீபத்திய 'அர்ஜுன் ரெட்டி' ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.



"மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன்  செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த 'பூமராங்' குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் இயக்குனர் கண்ணன்.



ஆகஸ்ட் 3ஆம் தேதி படத்தின் இசையோடு சேர்த்து படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா