சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் சீமராஜா படத்தின் இசை வெளியீடு
Updated on : 21 July 2018

ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பது தான். 24ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் தனது திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். அந்த வகையில் சமீபத்திய முயற்சியாக தங்களது பெருமைமிகு படைப்பான 'சீமராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் ஆர் டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழாவை மிகப்பெரிய வெற்றியாக மாற்ற மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.



 



மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தோம். எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயனின் அபரிமிதமான வளர்ச்சியும், இந்த முடிவுக்கு மிக முக்கியமான ஒரு காரணம். மேலும் இந்த படத்தின் மையக்கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, மனப்பூர்வமாக முடிவு செய்தோம். ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்" என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா