சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

நடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்
Updated on : 21 July 2018

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன்...



அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார்...



அதில் ரமணா அரவான் அடிமைசங்கிலி நிலாவே வா கருப்பி ரோஜா தயா தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை.  இவர் இயக்கி நடித்த படம் "வைரவன் "



சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்தார்...ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.



தற்போது மீண்டும் கலைத்துறைலயில் கால் பதிக்கிறார்...



அரசியலில் நேர்மையானவர்..ஊழலற்றவர்...தன்னலம் பார்க்காமல் பொது நல நோக்கம் கொண்டவர் என்று புகழப்பட்டவர் காமராஜர். அவர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன். அதனால் காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.



மது ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல..ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி விடுகிறது. அடிப்படை கல்வியாக போதிக்க வேண்டிய கல்வி ,ஒழுக்கம் , தேசப்பற்று, பெரியவர்களுக்கு மரியாதை , உற்சாகமாக இருப்பது., உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம். அது மட்டுமல்லாமல் ஏழை எளியோருக்கு பள்ளிகள் ,குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள்,திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம்...



அதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம்...



இதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும்...



இதையெல்லாம் நடை முறை படுற்ற வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன்...



அந்த ஆயுதம் ""சினிமா" அதனால் தான் சினிமா கம்பெனி ஆரம்பித்துள்ளேன்..



அதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்..



எங்களால் எல்லாரையும் திருத்த முடியாது., ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற எண்ணம் தான் எங்களுக்கு.



நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...



அதனால் எனக்கு ஒரு ஆசை .,என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன். என்றார் நடிகர் கரிகாலன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா