சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

கௌதம் கார்த்திக் நடிக்கும் மாஸ் கலந்த ஆக்சன் படம்
Updated on : 13 February 2021

SST Productions தயாரிப்பாளர் ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப்  தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும்  “செல்லப்பிள்ளை". இதில் நடிகர் கௌதம் கார்த்திக் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். 





இப்படத்திற்கு நாயகனாக   கௌதம் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டதை பற்றி இயக்குநர் அருண் சந்திரன் கூறும்போது, அவரது தந்தை நவரச நாயகன் கார்த்திக்கை போலவே கௌதம் கார்த்திக அவர்களும், எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் மிக எளிதாக பொருந்தி போக கூடியவர். ஆகவே எனது திரைக்கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் சரியாக அவர் பொருந்திப் போவார் என நினைத்தேன். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கின் கதாப்பாத்திரம் கண்டிப்பாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். “செல்லப்பிள்ளை” படத்தின் பெயர்க்காரணம் குறித்து கூறும்போது.. கதைக்காக மட்டும் இந்த தலைப்பை வைக்கவில்லை, கௌதம் கார்த்திக் தனது தாத்தா முத்துராமன் மற்றும் தந்தை நவரச நாயகன் கார்த்திக் ஆகியோரின் ரசிகர்களால் செல்லப்பிள்ளையாகவே பார்க்கப்படுகிறார். அவர் அனைத்து தலைமுறையினராலும் அன்போடு நேசிக்கப்படுகிறார். அதனால் “செல்லப்பிள்ளை” தலைப்பு மிகச் சரியான தலைப்பாக இருக்கும். 



 



தற்போது இப்படத்தின் முதல்கட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்காக  முன்னணி நடிகர்கள் குழு மற்றும் பிரபல தொழில்நுட்ப கலைஞரகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதத்தில் மொத்த படக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டு படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. 





ஏற்கனவே கௌதம் கார்த்திக் தமிழில் முக்கியமான சில படங்களில் நடித்து வருகிறார். சிலம்பரசன் TR உடன் இணைந்து “பத்து தல”  படத்தில் நடித்து வருகிறார். மேலும் மதுரையை பின்னணி களமாக கொண்டு உருவாகும் புதியதொரு குற்ற விசாரணை செய்யும் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா