சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

பிரபாஸ் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு- பரவசத்தில் ரசிகர்கள்
Updated on : 14 February 2021

யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் படம்  ‘ராதே ஷியாம்’. 



 



அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’ வரும் ஜூலை 30  அன்று வெளியாகும்.



 



காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.



 



இன்று காதல் தினத்தை முன்னிட்டு பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘ராதே ஷியாம்’ படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காட்சியையும் வெளியிட்டுள்ளது.



 







இன்று வெளியிடப்பட்டுள்ள காட்சியானது ரோமில் படமாக்கப்பட்டுள்ளது. ரயில் ஒன்றில் தொடங்கும் காணொலி, காடுகளை நோக்கி பயணிக்கிறது. இத்தாலி மொழியில் ‘செய் உன் அங்கெலோ? தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி?’என்று காதல் பொங்க பூஜாவிடம் பிரபாஸ் உரையாடுகிறார். இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.



 



இக்காணொலி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், காதலர்

தினத்திற்கான சரியான பரிசாக இது அமைந்துள்ளது என அவர்கள் கூறி வருகின்றனர். இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய காதல் படமாக ‘ராதே ஷியாம்’ இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சிறப்பு காட்சி வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா