சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்க ரஜினி காட்டிய அரசியல் தந்திரம்
Updated on : 15 February 2021

கன்னியாகுமரி மாவட்ட துணை செயலர் ஆர்.எஸ்.ராஜன், சிறுபான்மை பிரிவு இணை செயலர் சதீஷ்பாபு, மகளிரணி செயலர் ஈஸ்வரிமதி, ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மன்றத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், கட்டுப்பாட்டை மீறி, ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, ரஜினி மக்கள் நிர்வாகி சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



 



இது குறித்து, ஆர்.எஸ்.ராஜன் கூறியதாவது,  '' கடந்த 1986ல் இருந்து ரஜினி ரசிகர் மன்றத்தில் இருக்கிறேன். 2017 டிசம்பர் 31ஆம் தேதி கட்சி தொடங்க போவதாக, ரஜினி அறிவித்தார். இதனால், நான் காங்கிரஸ் கட்சியில் வகித்து வந்த, மாநில விவசாய அணி செயலர் பதவியை ராஜினாமா செய்தேன்.தற்போது ரஜினி, என்னை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றியுள்ளார். எந்திரன் படத்தை, 800 கோடி ரூபாய்க்கு விற்க, அவர் காட்டிய தந்திரம்தான் அரசியல் கட்சி தொடக்கம் என்று அறிவித்தது . கல்லா கட்டுவதில்தான் அவர் குறியாக இருந்தார்.



 



உயிரே போனாலும் தமிழக மக்கள் நலன்தான் முக்கியம் எனக் கூறியவர், பொய்யாக மருத்துவமனையில் படுத்து கொண்டார். என்னை நீக்கியதை நான் சும்மா விடப்போவது இல்லை.இது, என் மனதை பாதித்து விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், அவர் பெயரில், 13.50 லட்சம் ரூபாய்க்கு நற்பணிகள் செய்துள்ளேன். மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் . தனது படம் வெற்றி பெற மட்டுமே ரசிகர்களை அவர் பயன்படுத்திக் கொண்டார். எங்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளமாக்கி விட்டார்'' என்று புலம்பி தள்ளியுள்ளார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா