சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

ஜாதியை ஒழிப்பதற்காக படம் வர வேண்டுமே தவிர அதை வளர்ப்பதற்கு அல்ல - பேரரசு
Updated on : 15 February 2021

முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்படத்தை இயக்குனர் செரா .கலையரசன் இயக்குகிறார். காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக  நடிகை ஆரா இணைந்து நடிக்கிறார் . பிரபல இசையமைப்பாளர் DM உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும்  தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள் . இப்படத்திற்கான பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார் . ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது .



 





 



இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது . இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர் . மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஊர்வசி , இயக்குனர்கள் RV உதயகுமார் , பேரரசு ,ஜாக்குவார் தங்கம்  மற்றும்  நீட் தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை  சபரிமாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .



 



விழாவில் ஊர்வசி கூறியதாவது பல வருடங்களாக எனது அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் நடக்கவில்லை. தற்போது அண்ணன் ஒரு படம் எடுத்திருக்கிறார் .அதை நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனந்த கண்ணீருடன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



 



 





 



RV உதயகுமார் பேசுகையில் இத்தனை வருடத்தில் நான் இயக்க முடியாமல் போன நடிகை ஊர்வசி மட்டும்தான் .இப்படி போன்றவர்கள் இங்கு வருகை தந்து  இப்படத்தை வாழ்த்துகிறார்கள் ,கண்டிப்பாக வெற்றி அடையும். படம் பிரமாதமாக வந்துள்ளது. இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் இயக்குனர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.



 



பேரரசு அவர்கள் கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போதுதான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஜாதியை ஒழிப்பதற்காக படம் வர வேண்டுமே தவிர அதை வளர்ப்பதற்கு கிடையாது. சமீப காலங்களில் வரும் சாதி பசங்களுக்கு  சவுக்கடி கொடுக்கும் படமாக குழலி அமைய வேண்டும். இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



 



ஜாக்குவார் தங்கம் விழாவில் காதலால் ஜாதி ஒழியும் என்பதைவிட கல்வியால் ஜாதி ஒழியும் என்பதை ஏற்க முடிகிறது .இந்த படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும்  நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் .படத்தின் பாடல்கள் அருமையாக இருக்கிறது .இசை அமைப்பாளர் உதயகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.



 



 





 



படத்தின் இயக்குனர் செரா .கலையரசன் பேசியவை சமூக அக்கரை உள்ள படங்களை மட்டுமே இயக்க வந்துள்ளேன் .பெண்களை தவறாக சித்தரிக்கும் படங்களை நான் எடுக்க வரவில்லை .அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. படத்தின் பாடல்கள் மிகவும் பிரமாதமாக உள்ளது இசை அமைப்பாளர் உதயகுமார் அவர்களுக்கு என் நன்றி .கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளரை தகப்பன் என்று தான் சொல்ல வேண்டும் .அவ்வளவு உதவிகளையும் சுதந்திரத்தையும் எனக்கு அளித்தார். இந்தப் படத்தை வெளியிடும் நண்பர் டிரைடன்ட்ஸ் ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி.



 



நடிகர் விக்னேஷ் கூறியதாவது சில வருடங்களுக்கு முன்பு காக்க முட்டை படத்திற்காக மேடை ஏறினேன். அதற்குப்பிறகு இப்படத்தில்தான் மேடை ஏறுகிறேன். இந்தப் படம் வெளியான பிறகு காக்காமுட்டை விக்கி  என அழைப்பதற்கு பதிலாக குழலி விக்கி என்று தான் அழைப்பார்கள் என நினைக்கிறேன். இயக்குனர் கலையரசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்துள்ளது.



 



இசையமைப்பாளர் DM உதயகுமார் இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் ,கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா