சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

அன்புதான் காதலின் உண்மையான வடிவம், ஆதலால் காதல் செய்வீர் - அமைச்சரின் காதலர் தின அட்வைஸ்
Updated on : 15 February 2021

உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் ஒரே நாள் ஒரே தினம் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில்,நாட்களில், மணி நேரங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல்! ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் உயிரோடு இருக்கிறது...



 



 இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்கள் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்கு புதிய அடையாளம் கொடுத்துள்ளார். ஆம் தன் பேரனை தோளில் சுமந்து ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அளித்த பதில் தான் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.



 





 



 "பிப்ரவரி 14" என்பதை பலரும் காதலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அப்படின்னு நினைச்சிட்டு இருக்காங்க... அதுவல்ல அதற்கான அர்த்தம்.காதல் அப்படிங்கறது பொதுவானது உயிர்ப்பானது. மனுசங்க அடுத்த மனுஷங்க மேல காட்டுற அன்பும்,பரிவும், பாசமும், கருணையும் எல்லாமே காதலின் வடிவம் தான். அதனால காதலர் தினம் அப்படிங்கறத நாம தனிப்படுத்தி வேறுபடுத்திக் காட்ட முடியாது. எல்லா மனுஷங்களும் எல்லார்கிட்டயும் அன்பு காட்டி அனுசரிச்சு போனா இந்த உலகம் இன்னும் ரொம்ப அழகா ரம்மியமாக இருக்கும். மனுஷங்க இத புரிஞ்சுக்கணும்,அதுவும் குழந்தைகள் மேல நாம காட்டுற பாசம் அலாதியானது. உலகமே தெரியாத அந்த குழந்தைகள் நம்மள பார்த்து சிரிக்கிறது, மடியில் தவழ்ந்து விளையாடுறது தனி சுகம்... அதுமாதிரியான அன்புதான் காதலின் உண்மையான வடிவம். அதனாலதான் என் பேரனை தோளில் சுமந்தபடி எடுத்த போட்டோ இது, ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று முடித்துக் கொண்டார்.



 



காதல் காதல் காதல் இந்த மூன்று எழுத்தால் தான் இந்த உலகம் இன்னமும் சுழன்று கொண்டிருக்கிறது. பூமிப்பந்தை அன்பும், காதலும் கொண்டு பொடி நடையாக நடந்து வருவோம். நம்மைச் சுற்றியுள்ள கவலைகள் யாவையும் கடந்து செல்வோம். ஆதலால் காதல் செய்வீர்..!

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா