சற்று முன்

கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!   |    இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமானது எப்படி? 22 வருட திரை வாழ்க்கை பற்றி பிரபாஸ்   |    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது!   |    ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட உள்ள 'கல்கி 2898 கிபி'!   |    ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!   |    #NaniOdela2 திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது!   |    'அமரன்' பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் #D55   |    ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடியாக கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்!   |    அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |   

சினிமா செய்திகள்

பிரபுதேவா உதவியாளர் தர்ஷிணி கதாநாயகியாக அறிமுகமாகும் 'தோப்புக்கரணம்'
Updated on : 27 February 2021

பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் " தோப்புக்கரணம் ". இவர் தென் ஆசியா கராத்தே பெடரேஷன் அஸோசிசியனின் REFEREE COMMISSION CHAIRMAN என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான " கைலா " படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.



 



" தோப்புக்கரணம் " படத்தில் கோகன் ,அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இண்டியாவாக வலம் வந்த "ஸ்டீவ் " நடித்திருக்கிறார். இவர்களுடன்  படத்தின் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



 





 



இந்தபடத்தின் கதை மற்றும்  திரைக்கதை வசனத்தை கென்னடி ப்ரியன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவை பரணி செல்வம் கவனிக்க, படத்தொகுப்பை லான்சி மோகன் தொகுக்கிறார். தயாரிப்பு மற்றும் இயக்கம் பாஸ்கர் சீனுவாசன்.



 



100 நாட்களில் 100 பாடல்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்த ஷரவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்..பாடல்களை நிகரன் எழுதியுள்ளார்.



 



இந்த படத்தில் ஒரே ஏரியாவில் வசிக்கும்  5 நண்பர்களை  அந்த ஏரியாவின் தாதா ஒரு பிரச்சனையில் பொதுமக்கள் மத்தியில் தோப்புக்கரணம் போட வைத்துவிடுகிறார். அதனால் அவமானம் அடைந்த அந்த நண்பர்கள் அந்த தாதாவை பழிவாங்க துடிக்கிறார்கள்.  இறுதியில் அவர்கள் தாதாவை என்ன செய்தார்கள் தோப்புக்கரணம் போட வைத்தார்களா இல்லை தாதா அவர்களை என்ன செய்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.



 



5 கல்லூரி மாணவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்பதால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 500 கல்லூரி மாணவர்களை வரச்செய்து அதில் 5 மாணவர்களை தேர்வுசெய்து நடிக்க வைத்துள்ளோம்.



 



திருச்சி, மதுரை, கோவை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து  தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்களை தேர்வு செய்து காமெடி மற்றும் இதர கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். முற்றிலும் பொழுது போக்கு படமாக வரவிருக்கும் தோப்புக்கரணம் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும்  விழுப்புரம் பகுதிகளில் நடை பெற்றது. ஸ்பெஷல் பர்மிஷனில் இது வரை படப்பிடிப்பு நடைபெறாத வீடூர் டேமில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளோம் என்கிறார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா