சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

ஜேப்பியாரின் சொத்தை அபகரிக்க சதி! விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
Updated on : 03 March 2021

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜேப்பியாருக்கு சொந்தமான ஒரு இடத்தை அபகரிக்க முயன்றதாக  5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



 



ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் ஜேப்பியார் அவர்களின் மனைவி ரெமிபாய்க்கு சொந்தமான சென்னை இராயபேட்டை வீட்டின் மீது மறைந்த ஜேப்பியார் ரூபாய் 5 கோடி கடன் பெற்றதாக போலி ஆவனம் தயார் செய்து திட்டம் தீட்டி மோசடியில் ஈடுபட்டவர்கள் ஐந்து பேர் மீது சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



 





பிரபல ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் ஜேப்பியார் அவரது மனைவி(79) மகள்கள் என குடும்பத்துடன் ஆரம்ப காலகட்டத்தில் சென்னை இராயபேட்டை கணபதி தெருவில் வாழ்ந்து வசித்து வந்தனர். 



 





கடந்த 1985ம் ஆண்டு ஜேப்பியார் அவர்கள் 3600 சதுரடி கொண்ட இந்த வீட்டை தனது மனைவி ரெமிபாய் பெயரில் வாங்கியுள்ளார்.  



 





இந்நிலையில் ரெமிபாய்க்கு சொந்தமான சென்னை இராயபேட்டை வீட்டின் கேட்டை கடந்த 2019ம் வரும் பிப்ரவரி 16ம் தேதி மூன்றுபேர் பூட்டியது அங்கு பாதுகாப்பிற்காக பொறுத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை கவனித்துள்ளனர்.



 





இதுகுறித்து பூட்டு போட்ட மூவரிடம் ரெமிபாய் சட்ட ஆலோசகர் கண்ணன் பேசியபோது இந்த இடம் சென்னை நந்தனம் சிஐடி நகரை சேர்ந்த தனியார் பைனான்சியரான முரளிதரன் என்பவர்க்கு சொந்தமானது என்று கூறிய அவர்கள் முரளிதரன் உத்தரவின்பேரில் பூட்டு போட்டதாகவும் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். 



 





மேலும் ஜேப்பியார் செயலாளராக பணியாற்றிய ஜோஸிடம் ரெமிபாய் கேட்டபோது ஜேப்பியார் அவர்களுக்கு அப்பொழுது அவசர தேவைக்காக ரூபாய் 5 கோடி தேவைப்பட்டதால் மனைவிக்கு சொந்தமான இராயபேட்டை வீட்டின் மீது கடனாக மறைந்த ஜேப்பியார் அவர்கள் ரூபாய் 5 கோடி பணம் பெற்றதாகவும் கூறியுள்ளனர் சகோதரர்கள் ஜோஸ் மற்றும் ஜஸ்டின். 



 





இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வயது முதிர்ந்த ரெமிபாய் ஜேப்பியார் இதில் வில்லங்கம் உள்ளது என்பதால் அவருடைய சட்ட ஆலோசகர் கண்ணன் என்பவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் 06.08.2020 அன்று புகார் அளித்தனர். 



 





புகாரை தொடர்ந்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் துரைப்பாக்கம் உதவி ஆணையராக அப்பொழுது பொறுப்பில் இருந்த நீலாங்கரை உதவி ஆணையர் விசுவேஷ்வரய்யா விசாரணை மேற்கொண்டனர். 



 





பின்னர் சிஎஸ்ஆர் மட்டும் போட்டு கொடுத்த செம்மஞ்சேரி ஆய்வாளர் விஜயகுமார் மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 30.09.2020 அன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ரெமிபாயின் சட்ட ஆலோசகர் கண்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். 



 



வழக்கை விசாரித்த நீதிபதி செம்மஞ்சேரி ஆய்வாளர் விசாரித்து வழக்கு பதிவு செய்யும்படி ஆணை பிறப்பித்துள்ளார்.  நீதிமன்ற ஆணையை அலட்சியப்படுத்தும் வகையில் அதை கண்டும் காணாமல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளார் ஆய்வாளர் விஜயகுமார். 



 





பின்னர் சிசிபியில் ரெமிபாய் தரப்பில் முறையான ஆவணங்களை சமர்பித்ததால் ஜேப்பியாரின் செயலாளர் ஜோஸ், அவரது அண்ணன் ஜஸ்டின், பைனான்சியர் முரளிதரன்(59), அவருடைய உதவியாளர் பிரான்சிஸ் (எ) பினு பிரான்சிஸ்(52) உள்ளிட்ட ஐந்து பேர் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க திட்டம்தீட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 



 





பின்னர் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 



 





போலீசார் விசாரணையில் சகோதரர்கள் ஜோஷ்(44), ஜெஸ்டின்(45) இருவரும் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயில் கடியப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கடந்த 2004ம் ஆண்டு வேலை தேடி சென்னை வந்து ஜேப்பியார் அவர்களை சந்தித்துள்ளனர். 



 





இருவரின் குடும்ப சூழலை எடுத்து கூறியதும் ஜேப்பியார் சகோதர்கள் இருவரையும் தனது கல்லூரியில் படிக்கவைத்து அவருடை கல்லூரியிலேயே வேலை வழங்கியுள்ளார். 



 





அண்ணன் ஜோஸ் ஜேப்பியாரின் (Secretary) செயலாளராக பணியமர்த்தியுள்ளார். 



 





ஜேப்பியாரின் செயலாளராக பணியாற்றி வந்த ஜோஸ் ஜேப்பியார் தற்பொழுது உயிருடன் இல்லை என்பதாலும் வயது முதிர்ந்த ரெமிபாய்க்கு தெரியாமல் அவருக்கு சொந்தமான வீட்டின் பத்திரத்தை வைத்துக்கொண்டு ஜேப்பியார் அவர்கள் ரூபாய் 5 கோடி கூறி தனியார் பைனான்சியர் முரளிதரனுடன் இனைந்து திட்டமிட்டு ஐந்து பேர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா