சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'
Updated on : 04 March 2021

சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”.  



 





இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான R.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்று தந்தது. அது போல் இப்படமும் அவருக்கும் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும். மற்ற நட்சத்திர தேர்வு நடைப் பெற்று வருகிறது.



 



தமிழ் சினிமாவில் குடும்பங்கள்  இணைந்து கொண்டாடும் படைப்புகளை தரும் தரமான இயக்குநர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் இயக்குநர் R.கண்ணன். ‘ஜெயம் கொண்டான்’ வெற்றிப்படத்துடன் அறிமுகமான இவர், அதனை  தொடர்ந்து, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பிஸ்கோத்’ என பல வகை ஜானர்களிலும் வித்தியாசமான படங்கள் தந்து தரமான இயக்குநர் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார். 



 





 





மேலும் இதனை தொடந்து அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த “தள்ளிப் போகாதே” ரொமான்ஸ் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் , இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும்பாராட்டுக்களை குவித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தை  தமிழில் உருவாக்கம் செய்கிறார்.



 



 



சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியான இப்படம் இன்றைய இளையதலைமுறை தம்பதியனரிடம், பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தற்காலத்திய நாகரீக உலகிலும், பெண்கள் இன்னும் சமையலறையில் தான் முடக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமான வகையில் பதிவு செய்திருந்த இப்படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.



 





இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.



 







இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படபிடிப்பு ஆரம்பமாகிறது. தமிழ் - தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா