சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

100 வெற்றிப்படங்களை தந்த கூட்டணியின் புதிய படத்தில் அதர்வா
Updated on : 09 March 2021

தமிழ், இந்தி,தெலுங்கு, பெங்காலி என பல மாநில மொழிகளிலும் எண்ணற்ற வெற்றிபடங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம் தான் பிரமோத் பிலிம்ஸ்.



 



இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் தனது 25 வது படைப்பாக நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு  2021 மார்ச் 8 ஆம் தேதி படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் துவங்கியது.



 



படத்தின் தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா கூறியதாவது,





 

எங்களது 25 வது படைப்பாக ஒரு தமிழ் படத்தை தயாரிப்பதில் பெரும் மகிழ்ச்சி. திரைப்படங்கள் மீது தீவிரமான காதலுடன், தனித்தன்மை மிக்க நேர்த்தியான கதைகளை  ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் தருவதில் கவனமுடன் இயங்கிவருகிறது எங்கள் நிறுவனம். நேர்த்தியான படைப்புகளை கொண்டாடுவதில், தமிழ் ரசிகர்கள் எப்போதும் முன்னணியில் இருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தில் உருவான “மாறா” படமே அதற்கு சாட்சி. 



 



இப்படத்திற்கு ரசிகர்கள் தந்த பேராதரவு தான் மேலும் தமிழில் படங்கள் செய்ய பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசியுடன் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் எங்கள் நிறுவனத்தின் 25 வது படைப்பை துவங்கியுள்ளோம். அதர்வா முரளி,  இயக்குநர் சாம் ஆண்டன் வெவ்வேறு வகையான ஜானர்களில் படங்களை முயற்சித்து பார்ப்பவர்கள். முன்னதாக அவர்கள்  கூட்டணியில் உருவான 100 படம் பெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. ஆக்சன் கமர்ஷியல் திரைப்படமாக அனைவரும் ரசிக்கும் படைப்பாக இப்படம் இருக்கும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா