சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

சியான் விக்ரமின் ‘மகான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டது ப்ரைம் வீடியோ !
Updated on : 31 January 2022

பிப்ரவரி 10 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘சீயான்’ விக்ரமின் 60 ஆவது திரைபடமான –‘மகான்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு, முன்னரே, அதிகம் எதிர்பார்க்கபட்ட சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் டீசரை ப்ரைம் வீடியோ சற்று முன்பு வெளியிட்டது. பரபரப்பான இந்த டீசர் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும். மனதைக் கவரும் கதைக்களத்தோடு  அதிரடிச் சம்பவங்கள் நிறைந்த “மகான்’ உலகத்தின் ஒரு பார்வையை அறிமுகப்படுத்துகிறது. நட்பு, போட்டி ,மற்றும் விதியின் விளையாட்டின் சம்பவங்கள் பின்னிப்பிணைந்த ஒரு விறுவிறுப்பான கதை விவரிப்பை  இந்த டீசர் மூலம் எதிர்பார்க்கலாம்.



 



இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு சாதாரண மனிதனையும், அவனைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள்… அவனை மட்டுமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றுவதை விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்துகிறது. வாழ்வில் உண்மையான தந்தை = மகன் உறவை கொண்ட ஜோடியான  விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் முதல் முறையாக   ‘மகான்’ .படத்தில் இணைந்து தோன்றுகிறார்கள்.



 



அவர்களுடன் முக்கியமான பாத்திரத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியிடப்படும். தமிழில் மட்டுமல்லாமல்  மற்றும் இது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னட மொழியில் இந்தத் திரைப்படம் “மகா புருஷா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா