சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக உருவாகவுள்ள “பி.ஈ. பார்” !
Updated on : 31 January 2022

காவல் துறை உங்கள் நண்பன் திரைப்படம்  அதன் தீவிரமான கருத்து, ஈர்க்கும் கதை அமைப்பு மற்றும் நடிகர்களின் அற்புத நடிப்பிற்காக அனைவராலும் பெருமளவில்  பாராட்டப்பட்டது. இந்த திறமைமிகுந்த திரைக்குழுவினர், “பி.ஈ. பார்”  (B.E. BAR)  என்ற தலைப்பில் தங்கள் இரண்டாவது திரைப்பட பயணத்தை தற்போது துவக்கியுள்ளனர்  இந்த் குழுவின் முந்தைய திரைப்படம் நமது மனதை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக்களத்தை கொண்டிருந்தது, ஆனால் இந்த இரண்டாவது படைப்பு , முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக “ஃபிரண்ட்ஷிப் காமெடி” ( FRI-COM ) எனும் புது ஜானரில் உருவாகவுள்ளது. இக்கதையின் மையம்  பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை  சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது.



 



மோ மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக சதுரங்க வேட்டை புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார். தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.



 



காவல்துறை உங்கள் நண்பன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் RDM இப்படத்தை இயக்குகிறார். தொழில்நுட்பக் குழுவில் விஷ்ணு ஸ்ரீ K.S., ஆதித்யா & சூர்யா (இசை), வடிவேல் & விமல்ராஜ் (எடிட்டிங்), சிவராஜ் (கலை), கல்லூரி வினோத் (வசனம்), ஞானகரவேல் & கானா பிரபா (பாடல் வரிகள்) ஆகியோர் பணிபுரிகின்றனர். 



 



“பி.ஈ. பார்”  (B.E. BAR)  படத்தினை Absolute Pictures  நிறுவனம் சார்பில் மால்கம்,  BR Talkies Corporation மற்றும் White Moon Talkies உடன் இணைந்து தயாரிக்கிறார். B. பாஸ்கரன், P. ராஜபாண்டியன், மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் இப்படத்தை  இணைந்து தயாரிக்கின்றனர். 



 



தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா