சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

விக்ரம் பிரபுவுக்கு வில்லனாக மாறிய சக்தி !
Updated on : 01 February 2022

நடிகர் விக்ரம் பிரபு, உலகளாவிய பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக செயல்பட்டு, தனது ஒவ்வொரு தேர்விலும், அவரது திரைப்படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில் ஒரு கிராமிய பாத்திரத்தில், முழுதாக தன்னை மாற்றிக்கொண்டு, தனது திறமையை நிரூபித்திருந்தார். இந்த முறை இயக்குநர் முத்தையா கதை, வசனத்தில், கார்த்தியின் திரைக்கதை இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் படத்திற்கு ‘டைகர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.



 



எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஓபன் ஸ்கிரீன் பிக்டர்ஸ் நிருவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக அனந்திகா நடிக்க, வில்லனாக சக்தி வாசு நடிக்கிறார். இவர்களுடன் ‘அட்டு’ பட புகழ் ரிஷி, டேனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



 



இப்படம் குறித்து இயக்குநர் கார்த்தி கூறுகையில், “புலி படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்த திரைப்படத்தில் இயக்குனர் முத்தையா பங்களிப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. படத்திற்கு இது ஒரு முக்கிய ஈர்ப்பை தரும் அம்சமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த திரைக்கதையை கூற வாய்ப்பளித்ததற்கும், இப்படத்தை ஒப்புக்கொண்டதற்கும் விக்ரம் பிரபு சாருக்கு, மிகுந்த நன்றி. ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளனர். இது நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும், பரபர திரில்லராக, ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும் படமாக இருக்கும்.” என்றார்.



 



சாம் CS இசையமைக்க, கதிரவன் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலைத் துறையை கவனிக்கிறார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் மணிமாறன் (எடிட்டிங்), முருகன் (ஸ்டில்ஸ்), பாபா பாஸ்கர் (நடன அமைப்பு), கணேஷ் மாஸ்டர் (ஸ்டண்ட்), மற்றும் S. வினோத் குமார்-தம்பி M பூபதி (நிர்வாகத் தயாரிப்பு) பணிகளை கவனிக்கின்றனர்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா