சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

‘சீயான் ’விக்ரமின் 'மகான்' படத்திலிருந்து வெளியான மற்றுமொரு பாடல் !
Updated on : 02 February 2022

மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'மகான்'. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் அறுபதாவது திரைப்படமான 'மகான்' படத்திலிருந்து மூன்றாவது பாடலாக 'போனா போவுறான்னு..' எனத் தொடங்கும் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடல் தமிழைத் தவிர தெலுங்கில் 'போதே போனி..' என்றும், மலையாளத்தில் 'வேண்டா வேண்டா என்னு...' என்றும்,   கன்னடத்தில் ' ஹோட்ரே ஹோக்லி அன்டே..' என்றும் இந்தப்பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். நீங்கள் யாரையாவது விரும்பும்போது அவர்கள் உங்களை விரும்பவில்லை என்றால், அவர்களை விடுவித்து விடுங்கள் என்பதை நுட்பமான செய்தியுடன் கூடிய பாடலாக 'போனா போவுறான்னு..' என்ற பாடல் அமைந்திருக்கிறது.



 



‘சீயான்’ விக்ரம் நடித்திருக்கும் 'மகான்' படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. கன்னடத்தில் இந்தப் படத்திற்கு 'மகா புருஷா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.



 



மகான் = தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக 'மகான்' உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது 'மகான்' படத்தின் திரைக்கதை. 



 



‘சீயான்’ விக்ரமின் ‘மகான்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘போனா போவுறான்னு..’ எனத் தொடங்கும் பாடலுக்கான லிங்க்...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா