சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

கதாநாயகனாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ராபர்ட் மாஸ்டர் !
Updated on : 06 February 2022

நடனத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துப் பிரபலமானவர் ராபர்ட் மாஸ்டர். இவர்  சற்று இடைவெளிக்குப் பின் மறுபிரவேசமாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் 'மாலை'.



 



இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று சென்னை ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது.



 



ராபர்ட் மாஸ்டர் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ராஜேஷ் ராஜா. இவர் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.



 



இயக்குநர் ராஜேஷ் ராஜா அரை மணி நேரத்தில் சொன்ன கதை பிடித்துப்போய் படத்தில் நடிக்கச் சம்மதிக்கும் அளவிற்கு அவர் கதை சொல்லும் விதம் ராபர்ட் மாஸ்டருக்குப் பிடித்து இருந்ததாகக் கூறுகிறார்.



 



அதை மீண்டும் விரிவாகச் சொல்லக் கேட்டபோதும் அவ்வளவு தெளிவாகக் கதை சொன்னதால் உடனே நடிக்க சம்மதித்து விட்டார்.



 



இப்படத்தில் சங்கீதா முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் அவர் சின்னச்சின்ன வேடங்களில் சில படங்களில் தலைகாட்டியவர் . மகாலட்சுமி என்கிற குழந்தை நட்சத்திரம் படத்தில் அறிமுகமாகிறது. மகாலட்சுமியின் நடிப்பாற்றலை இயக்குநர் சோதித்துப் பார்த்தபோது நடித்துக் காட்டிய விதம் இயக்குநரை வியக்கவைத்திருக்கிறது. 



 



மேலும் பல அறிமுகமான முகங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை பாலகங்கா  கிரியேஷன்ஸ் ஜி கே எம் புரொடக்சன்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில்  படப்பிடிப்பு நடைபெறவிருக்கும் 'மாலை' படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா