சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

நடிகர் R மாதவன் முதல் முறையாக இயக்கும் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' ஜூலை 1 முதல் உலகமெங்கும்
Updated on : 14 February 2022

இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் R மாதவன், முதல் முறையாக இயக்குநராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நம்பமுடியாத வாழ்வினை வாழ்ந்த அறிவியலாளரின் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார் நடிகர் R மாதவன்.  



 



“ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் 1 ஆம் தேதி ஜூலை 2022 உலகம் முழுதும் வெளியாகிறது.  இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. நடிகர் R மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து , எழுதி, இயக்கியும் உள்ளார். 



 



சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான் மற்றும் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளனர். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளர், இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன்,  உளவுத்துறையால் தேசத்துரோகம் செய்ததாக கைதுசெய்யப்பட்ட  பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் CS இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



 



இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே இணையத்தில் புயலை கிளப்பி,   ரசிகர்களிடம் பேரார்வத்தை தூண்டியுள்ளது. மாதவனின் திரைவாழ்வில் மிகப் பெரிய திரைப்படம் என்று சொல்லப்படும் இப்படம், மூன்று வருடங்களுக்குப் பிறகு மாதவன் திரையில் தோன்றவுள்ள படம் என்பதால், ரசிகர்கள்  அவரை பெரிய திரையில் காணவேண்டுமென பலத்த  எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர், குறிப்பாக அவர்  இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில் தோன்றுகிறார். பிரம்மாண்டமான முறையில், பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.



 



“ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்”  திரைப்படம் TriColour films , Varghese Moolan Pictures மற்றும் 27th Investments நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் UFO Moviez மற்றும் AGS Cinemas நிறுவனங்களால் விநியோகம் செய்யப்பட,  உலகின் பிறநாடுகளில்  Yash Raj Films மற்றும்  Phar Films Co நிறுவனங்களால் விநியோகம் செய்யப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா