சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

சமந்தா படத்துக்காக போடப்பட்ட 3 கோடி மதிப்பிலான பிரமாண்ட செட் !
Updated on : 20 February 2022

நடிகை சமந்தாவின் அடுத்த பிரமாண்ட படமான  ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார், திரைத்துறையில் திறமைமிகு  இளம் ஜோடிகளான ஹரி - ஹரிஷ் கூட்டணி இந்த படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக கலை இயக்குனர் அசோக் மேற்பார்வையில், முக்கியமான காட்சிகளுக்காக 3 கோடி மதிப்பிலான பிரமாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.



 



இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது.., “சமந்தா நாயகியாக நடிக்கும் எங்களின் பிரமாண்ட படைப்பான ‘யசோதா’ படத்தின்  கதை 30 முதல் 40% காட்சிகள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் நடக்கிறது. இதற்காக நாங்கள் பல நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றோம், ஆனால் இதுபோன்ற ஹோட்டல்களில் 35, 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது மிக சிரமமாக இருந்தது. எனவே, கலை இயக்குனர் அசோக்கின் மேற்பார்வையில் நானக்ராம்குடாவின் ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி மதிப்பிலான 2 மாடிகள் கொண்ட பிரமாண்ட செட் ஒன்றைத் அமைக்க முடிவு செய்தோம். இதில் 7 முதல் 8 செட் டைனிங் ஹால், லிவிங் ரூம், கான்ஃபரன்ஸ் ஹால், லைப்ரரி என  ஒரு  7  ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி, சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 6 முதல் கிறிஸ்மஸ் வரை முதல் கட படப்பிடிப்பு முடித்து, ஜனவரியில் சங்கராந்திக்கு முன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது, எஞ்சியுள்ள முக்கிய காட்சிகள் கொடைக்கானலில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து, இப்படத்தை  தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.



 



கலை இயக்குநர் அசோக், ‘ஒக்கடு’ படத்தின் பிரமாண்ட சார்மினார் செட் மற்றும் பல்வேறு படங்களில் பிரமாண்ட அரங்குகள் அமைத்ததற்காக  பிரபலமானவர். அவர் தெலுங்கு மற்றும் தமிழில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதைக்கு ஏற்ற சிறந்த அரங்குகளை அமைத்து புகழ் பெற்றுள்ளார்., யசோதா செட் அவரது திறமையை மேலும் சிறக்க்க செய்வதாக இருக்கும் என்று படக்குழு கூறுகிறது.



 





 





 





 





 



இப்படத்தில் சமந்தா உடன், வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா