சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

ராம் பொத்தினேனி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் !
Updated on : 20 February 2022

தெலுங்கு திரை உலகில் சமீபத்தில் வெளி வந்து வெற்றி பெற்ற "அகாண்டா" உள்ளிட்ட  பல வெற்றி படங்களை இயக்கி உள்ள இயக்குனர் போயபதி ஸ்ரீனு,  லிங்குசாமி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் தி வாரியர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க,  வெற்றி பட தயாரிப்பாளர்  ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஒரு பிரமாண்டமான பன்மொழி  இந்திய படம் உருவாகிறது.



 



Srinivasaa Silver Screen நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்கு பிறகு, ராம் பொத்தினேனி நடிப்பில், இயக்குநர் N லிங்குசாமி இயக்கத்தில் ‘தி வாரியர்’ படத்தை தயாரித்து வருகிறார். 



 



இயக்குநர் போயபதி ஸ்ரீனு, சமீபத்தில் பிரமாண்ட ஹிட்டடித்த நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’ படத்தை இயக்கிய உற்சாகத்தில் உள்ளார். நடிகர் ராம் பொத்தினேனி தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனாக ரசிகர்கள் இதயங்களை வென்றுள்ளார் , திரையுலக வல்லுநர்களின் கணிப்பின் படி ராம் பொத்தினெனி அனைத்து மொழி ரசிகர்களும் ஆராதிக்கும் ஓரூ நடிகராக வருவார் என நம்பபடுகிறது.



 



இந்த மூன்று பிரபலங்களும் ஒரு திரைப்படத்தில் இணைவது திரைத்துறையின் மிகப்பெரும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு விரைவில் தலைப்பு வைக்கப்படவுள்ளது. 



 



இயக்குநர் போயபதி ஸ்ரீனு இம்முறை ஹீரோ மற்றும் தயாரிப்பாளரை ஈர்க்கும் அட்டகாசமான மாஸ் கதையுடன் வந்துள்ளார். 



 



படத்தில் நடிக்கும் நாயகி, நடிகர்கள் குழு மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா