சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகையின் புதிய சாதனை !
Updated on : 28 February 2022

திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், கலைத்துறையில் மட்டும் இன்றி ராணுவத்திலும் இணைந்து தமிழ் நடிகை ஒருவர் சாதித்திருக்கிறார்.



 



கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை  நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.



 



மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.



 



இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின் பலவிதமான கடின பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.



 





 



 



மேலும், இளைய சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சமூகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அகிலா நாராயணன், தான் கற்றதை பிறருக்கும் கற்பிக்கும் வகையில், ‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ (Nightingale School of Music) என்ற இசைப் பள்ளியை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார்.



 



அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளார். அவரது இத்தகைய  சேவை மனப்பான்மைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தி வருகிறார்கள்.



 



இதன் மூலம், நடிகை அகிலா நாராயணன் மட்டும் இன்றி அவருடைய குடும்பத்தை சார்ந்த , சுமதி நாராயணன், நாராயணன் நரசிங்கம், ஐஸ்வர்யா நாராயணன், சேகர் குழந்தைவடிவேலு, உமா சேகர், ஆதித்யா சேகர், அரவிந்த் சேகர் என அனைவரும் தங்களை ராணுவ குடும்பம் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதோடு, அமெரிக்க ராணுவத்திற்கு சேவை செய்வதை தங்களது கடமையாகவும் கருதுகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா