சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

ஹன்சிகா நடிக்கும் சயின்ஸ்பிக்சன் ஃபேண்டஸி, ஹாரர் காமெடி திரைப்படம !
Updated on : 28 February 2022

Masala Pix  நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர்  ஆர்.கண்ணண்  - Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார்.



 



#ஜெயம்கொண்டான், #கண்டேன்காதலை, #சேட்டை, #இவன்தந்திரன், போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர்  இயக்குநர் R.கண்ணன்.



 



தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.



 



இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் #காசேதான்கடவுளடா படத்தை டைரக்ட் செய்துள்ளார்.



 



அடுத்ததாக, இன்று குடும்பங்கள் அனைவரும் விரும்பி பார்க்கும்  சயின்பிக்சன், ஃபேண்டஸி வகையில் காமெடி ஹாரர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக  ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் R.கண்ணன் ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து  இப்படத்தை உருவாக்குவது குறிப்பிடதக்கது.  தமிழ் சினிமாவுக்கு புதியதாகவும்,  ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாகவும் இப்படம் இருக்கும்.



 



ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் நேத்ரா எனும்  இளம் அறிவியல் விஞ்ஞானி  பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ECR-ல்   ஒரு பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை  பெரும் பொருட்செலவில் அமைக்கிறார்கள். இப்படத்திற்காக, தலை சிறந்த அனிமேஷன் கம்பெனியுடன் இணைகிறார் ஆர்.கண்ணன்.



 



இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் செய்கிறார். வசனத்தை சித்தார்த் சுபாவெங்கட் எழுதுகிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மக்கள் தொடர்பு: ஜான்சன்.



 



படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



 



இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கிறார் இயக்குநர் R.கண்ணன்.



 



இப்படத்தின் படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

பைனான்சியர் மகேந்திரா நிஹார் காமெராவை ஆன் செய்ய படபிடிப்பும் இனிதே துவங்கியது.



 



2022 ஆகஸ்ட் 15 வெளியீடு.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா