சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

விஜய் பட இயக்குனரின் அறிமுக நாயகி தீப்ஷிகாவை போனில் பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து
Updated on : 07 March 2022

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.. 



 



ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி சட்டென ஒரு புகழ் வெளிச்சத்திற்குள் வந்து விடுவார்கள்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அறிமுக நடிகையாக களம் இறங்கியுள்ள அக்மார்க் தமிழ்பொண்ணு தீப்ஷிகா. 



 



ஆம். தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் திரையுலகில் நுழைவதே அரிது, அப்படியே நுழைந்தாலும் அவர்களுக்கு இங்கே பெரிய வரவேற்பில்லை என்கிற வாதத்தை எல்லாம் உடைத்து நொறுக்கி, கடந்த ஒரு வருடத்திற்குள் தமிழில் மூன்று, தெலுங்கில் மூன்று என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை தீப்ஷிகா. கவிப்பேரரசு வைரமுத்துவே போனில் அழைத்து பாரட்டும் அளவுக்கு ஒரு பரபரப்பு வட்டத்திற்குள்ளும் வந்துள்ளார்.



 



சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்த தீப்ஷிகா, தானாக விரும்பி சினிமாவில் நுழைவதற்கு முன்னதாக சினிமாவே அவரை தேடி வந்துவிட்டது என்றுகூட சொல்லலாம்.. ரேணிகுண்டா, கருப்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் தான் இயக்கும் படத்திற்கான நடிகைகள் தேடலில் வைத்த ஆடிஷனில் கலந்துகொண்ட தீப்ஷிகா, இப்போது அந்தப்படத்தில் நடித்து முடித்தும் விட்டார். இந்தப்படத்தில் ஒரு பட்டாம்பூச்சி போல அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.



 



இந்தப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாயா, மாநகரம் உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கிறார் தீப்ஷிகா.. இந்தப்படத்தில் இவரது கதாபாத்திரம் சர்ப்ரைஸ் மற்றும் ட்விஸ்ட் கலந்த ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது...  



 



தமிழில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே தெலுங்கில் பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீப்ஷிகா, அந்தப்படத்திற்கான வெளிநாட்டு படிப்பிடிப்பில் நடித்துவிட்டு, தற்போது ஹைதராபாத்தில் நடக்கும் ஷெட்யூலில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இது காதல் கலந்த உணர்வுப்பூர்வமான படமாக உருவாகிறது. இதுதவிர தெலுங்கு ஹீரோ நவீன் சந்திராவுடன் ஒரு படத்தில் நடித்து முடித்தும் விட்டார். கைவசம் இன்னொரு தெலுங்கு படமும் வைத்துள்ளார்.



 



படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் வந்தது தான் கவிப்பேரரசுவின் கனவு காவியமான ‘நாட்படு தேறல்’ என்கிற ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பு. இலக்கியத்தில் ஒரு புதிய முயற்சியாக நூறு பாடல்களை கொண்டு அவர் உருவாக்கி வரும் நாட்படு தேறல் என்கிற ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றையும் முன்னணி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். 



 



அந்தவகையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறும் கேசாதிபாதம் என்கிற பாடலில் நடன ஆசிரியையாக நடித்துள்ளார் தீப்ஷிகா. ஒரு பெண்ணின் தலைமுதல் பாதம் வரை அவளது அவயங்களை ஒவ்வொன்றாக இயற்கையுடன் ஒப்பிட்டு வர்ணித்து இந்த பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. இந்தப்பாடலை விஜய் நடித்த பைரவா படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் தான் இயக்கியுள்ளார்.



 



இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, கிட்டத்தட்ட அதை மறந்தே போயிருந்த சூழலில், திடீரென ஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது முதலில் தீப்ஷிகாவால் அதை நம்பத்தான் முடியவில்லை..



 



“மாநாடு படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த சமயத்தில் புதிய நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.. நான் வைரமுத்து பேசுகிறேன் என அவர் பேசியபோது, கூட்டத்தில் இருந்த நான் குழப்பம் ஒருபக்கம், பிரமிப்பு ஒருபக்கம் என ஸ்தம்பித்து போனேன்.. ஒருவேளை யாராவது கலாட்டா செய்கிறார்களோ என்று கூட தோன்றியது..



 



ஆனால் அதன்பின் பேசுவது கவிப்பேரரசர் தான் என உணர்ந்ததும் எனக்கு பேச்சே வரவில்லை.. கேசாதிபாதம் பாடலில் நடித்துள்ள நான் அந்தப்பாடலுக்கே உயிர்கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டிய வைரமுத்து சார், தமிழ்சினிமாவில் உனக்கு நல்லதொரு இடம் காத்திருக்கிறது என வாழ்த்தினார்.. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான், அவராகவே அழைத்து வாழ்த்தும் அளவுக்கு எனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறேன் என்கிற மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டது” என சிலாகித்து பேசுகிறார் தீப்ஷிகா.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா