சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

அஜீத் நாயக் - பிரஜன் நடிக்கும் அரசியல் கலந்த திரில்லர் படம்
Updated on : 10 March 2022

ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் A.V.சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் சங்கர் - கென்னடி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகர்களாக  ஆஜீத் நாயக், பிரஜன் இருவரும்   நடிக்கிறார்கள். அஜித் நாயக் மாடல் துறையில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



ரஷ்மி, பிரகயா நயன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, ஷோபராஜ் மற்றும் இன்னும் எராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.



 



ஒளிப்பதிவு - வினோத் குமார், இசை - விஜய் யாட்லீ ( இவர் இசையமைப்பாளர் A.R.ரகுமானின் இசைப் பள்ளி மாணவர். கன்னடத்தில் 7 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம்  தமிழில் இசையமைப்பாளராக களமிறங்குகிறார்.



 



பாடல்கள் - கென்னடி, மக்கள் தொடர்பு - மணவை புவன், இணை தயாரிப்பு - சித்தார்தா 

தயாரிப்பு - A.V.சூரியகாந்த், கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார்கள் -  ஷங்கர்   மற்றும்  கென்னடி. 



 



படம் பற்றி  இயக்குனர்கள் ஷங்கர் மற்றும்  கென்னடி கூறியதாவது..



 



அரசியல் கலந்த கிரைம் திரில்லர் கதை இது,  தவறான அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தால்  சாமானிய மக்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்ற முக்கியமான விஷயத்தை இதில் சொல்ல இருக்கிறோம்.



 



இணை பிரியா இரண்டு நண்பர்கள் ஒரு அரசியல்  வாதியின் சூழ்ச்சியில் சிக்குகிறார்கள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் இறுதியில் அவர்களது நட்பு என்னவானது எப்பது படத்தின் திரைக்கதை.



 



நட்பின் ஆழத்தை இதுவரை யாரும் சொல்லிறாத ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்கிறோம். நிச்சயம் இந்த படம் வெளியான பிறகு படம் பார்கும் ஒவ்வொருவருக்கும் நமக்கு இப்படியொரு நட்பு கிடைக்கவில்லையே என்று  நிச்சயம் ஏங்குவார்கள் என்கிறார்கள் இயக்குனர்கள் ஷங்கர் மற்றும்  கென்னடி.



 



படப்பிடிப்பு தர்மபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா