சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘கௌன் பிரவின் தாம்பே?’ Disney Hotstar தளத்தில் ஏப்ரல் 1 முதல்
Updated on : 10 March 2022

ஷ்ரேயாஸ் தல்பேட் நடிக்கும்  ‘கௌன் பிரவின் தம்பே?’ ( KAUN PRAVIN TAMBE? ) வாழ்க்கை வரலாற்று திரைப்படம்  டிஸ்னி+ ஹாட் ஸ்டார், FOX STAR STUDIOS,FRIDAY FILMWORKS மற்றும் BOOTROOM SPORTS PRODUCTION நிறுவனங்களின் தயாரிப்பில், ஜெயப்பிரத் தேசாய் இயக்கத்தில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார்  தளத்தில் ஏப்ரல் 1, 2022, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.



 



இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘கௌன் பிரவின் தாம்பே?’  படத்தில் மூத்த முன்ணனி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். கண்களில் கனவுகளுடன் விளையாட்டின் மீதான தனது காதலை நிரூபிக்க அவரது அயராத விடாமுயற்சியின் பயணம்.  41 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய லெக் ஸ்பின்னரின் வாழ்க்கை மற்றும் அவரது வியத்தகு வரலாற்று சாதனை பற்றிய ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை தரும், இதயத்தை கவரும் திரைப்படம்,  கிரிக்கெட்டைப் போலவே வேடிக்கையானது, சவாலானது மற்றும் சிலிர்ப்பை தரக்கூடியது. பிரமாண்ட படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் அஞ்சலி பாட்டீல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



 



பிரவின் தாம்பே கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது…

இக்பால் படத்தில் நாயகனாக நடித்து 17 வருடங்கள் கழித்து, திரையில் பிரவினாக நடித்ததை மிகவும் பெருமையாக உணர்கிறேன். இந்தப் பாத்திரமும் கதையும் எனக்கு வாழ்நாளில் மிகச்சிறப்பானதொரு வாய்ப்பை வழங்கியது, படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் ரசித்தேன், பிரவீன் கதாப்பாத்திரத்தை சரியாக செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் பெரும் முயற்சி தேவைப்பட்டது. இக்கதாப்பத்திரத்திற்காக அவருடன் இணைந்து பழகியது என்றென்றும் என் வாழ்வின் மிக அழகான தருணங்களாக இருக்கும், எங்கள் அனைவரின் உழைப்பில்  இப்படம் அழகாக வந்துள்ளது என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா