சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

சினிமாவில் நடக்கும் கதைத் திருட்டை மையமாக கொண்டு தயாரித்துள்ள படம் 'படைப்பாளன்'
Updated on : 10 March 2022

சினிமாவில் நடக்கும் கதைத் திருட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில இயக்குனர் தியான் பிரபு , காக்கா முட்டை ரமேஷ் விக்கி மற்றும் பாடகர் வேல்முருகன், அஸ்மிதா, மனோபாலா, சதுரங்க வேட்டை வளவன், நிலோபர், அருவி பாலா ஆகியோர் முக்கிய கதாாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நட்புக்காக ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் இயக்குனர் தருண்கோபி, திருச்சி வேலுசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.



 



ஒளிப்பதிவு - வேல்முருகன், இசை - பாலமுரளி, பாடல்கள் - சினேகன், கு.கார்த்திக்,

எடிட்டிங் - எஸ்.பி.அகமது, மக்கள் தொடர்பு - மணவை புவன், தயாரிப்பு - நட்சத்திரம் செபஸ்தியான், கதை, திரைக்கதை, வசனம் ,இயக்கம் -  தியான் பிரபு.



 



படம் பற்றி இயக்குனர் தியான் பிரபு கூறியதாவது...



 



இது முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை. முன்பெல்லாம் பட தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்திலிருந்து வந்தவர்களாக இருந்தார் கள். ஆனால் இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். 



 



அவர்கள் பெரும்பாலும் கதை கேட்பது கிடையாது. முழு ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்துவிட்டு சொல்கிறோம் என்று கதையை வாங்கி கிடப்பில் போட்டு பின்பு அவர்களை அழைக்கிறார்கள்.  சில நாட்களுக்குப் பிறகு பிரபல இயக்குனரை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள். அந்த உதவி இயக்குனரின் உழைப்பு வலிகளுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை. அப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போன ஒரு உதவி இயக்குனரின் சொந்த கதை தான் இந்தப் படம். சினிமாவை பொருத்தவரை ஒரு உதவி இயக்குனர் வளர்வதற்கு மிகுந்த சிரமங்களை அவர்கள் சந்திக்கிறார்கள் அவர்களுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை அனைத்திலும் பெரும் சங்கடங்களை அனுபவிக்கிறார்கள் சினிமா இயக்குனர் என்றால் தவறான கருத்து மக்களிடையே பரவி இருக்கிறது ஆனால் தன் படைப்பின் மூலம் நல்ல நல்ல கருத்துக்களையும் காமெடிகளையும் சொல்லி மக்களை மகிழ வைப்பவன் ஒரு  படைப்பாளன் தான்.



 



அப்படியான வலிமிகுந்த உதவி இயக்குனரின் வலிகளையும், வழிகளையும்  இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும் இந்த கதை பல உண்மை சம்பவங்களை உங்களுக்கு நினைவூட்டும். இன்று வரை சினிமாவில் வெவ்வேறு விதமான கதை திருட்டுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன இவை அனைத்தும் மாற வேண்டும் என்பதே எங்களது ஆசை என்றார் இயக்குனர் தியான் பிரபு.



 



படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவுற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா