சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி நடிப்பில் “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் டப்பிங் இன்று இனிதே துவங்கியது !
Updated on : 14 March 2022

விஜய் மில்டன் - தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமை, 37 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு,  மற்றும் 8 திரைப்படங்களை இயக்கி, மிக சிறந்த திரைக்கலைஞராக வலம் வருபவர். மிக வித்தியாசமான கதைக்கரு, ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைக்கதை, கண்களை கவரும் உருவாக்கம் ஆகியவற்றில் வித்தகராக  நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் உள்ள அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளவர். தற்போது அவர் அடுத்ததாக இயக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகிறார். கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B பங்கஜ் போரா மற்றும் Infiniti Film Ventures சார்பில் S.விக்ரம் ஆகியோர் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார், கேப்டன் விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பு வேடத்தில் இப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்.



 



இப்படத்தின் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற தலைப்பு, படம்  எப்படியானதாக இருக்கும் என்ற பெரும் ஆர்வத்தை பார்வையாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இத்தலைப்பு குறித்து இயக்குநர்.., பல்வேறு தொழில்களின் அடிப்படையில் மக்கள் மழையை ஒரு வரம் அல்லது சாபமாக உணர்கிறார்கள் ஆனால், இங்கே கதாநாயகன் ஒரு விதிவிலக்கானவன், மழையை  விரும்பாததற்கு அவனுக்கு தகுந்த  காரணமும் உள்ளது. ஆனால் அதற்கு பின்னணி கதை எதுவும் இல்லை, மழையுடன் தொடர்புடைய நினைவுகள் சில அவனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் இறுதியில் இவையெல்லாவற்றிலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இந்தப் படத்தில் மேகா ஆகாஷின் கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இருக்காது, ஆனால் யதார்த்தமான பெண்ணின் சாயல்களை கொண்டிருக்கும். சரத்குமார் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதியை தியூ - தாமன் பகுதியில் படக்குழுவினர் எடுத்துள்ளனர், அந்த கவர்ச்சியான இடங்களில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். கன்னட திரையுலகில் மிகவும் கொண்டாடப்படும் தனஞ்செயா மற்றும் பிருத்வி அம்பர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். மற்ற நட்சத்திர நடிகர்கள் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி, இயக்குனர் ரமணா மற்றும் இன்னும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். 



 





 



படத்தின் சிறு சிறு பகுதிகள்  தவிர படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, மேலும் 2022 கோடையில் இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது, மற்றும் பிற போஸ்ட் புரடக்சன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா