சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

பா.இரஞ்சித்தின் பாராட்டு பெற்ற நடிகர் லிங்கேஷ்
Updated on : 21 March 2022

பா.இரஞ்சித்தின் கபாலி, கஜினிகாந்த், குண்டு, வி1 பரியேறும்பெருமாள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ். தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.



 



 



மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல், சமூக பிரச்சினைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்போடு காலேஜ்ரோடு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.



 





 

M P Entertainment  தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார். 

ஆப்ரோ இசையமைப்பில் கதைநாயகனாக லிங்கேஷ் நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.விரைவில் திரைக்கு வரும் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கிறார் இந்தபடத்தை சமீபத்தில் பார்த்த பா.இரஞ்சித் லிங்கேஷை  பாராட்டியிருக்கிறார். மாணவர்களின் கல்விக்கடன் குறித்த அரசியல் பேசினாலும் கமர்சியலாக இருக்கிறது, மாணவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கூறி குழுவினருக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்

மகிழ்ச்சியான காலேஜ்ரோடு குழுவினர் வெளியீட்டுக்கு தயாராகின்றனர்.



 



 





சமூகத்தின் அழுத்தத்தால் மனிதனின் இயல்பான காதலும், அதன் பொருட்டு நடக்கும் சிக்கல்களையும் உணர்வுப்பூர்வமாக பேசும் 'காயல்' என்கிறபடத்திலும் நாயகனாக நடித்துவருகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் காயத்ரி, பாடகர் ஸ்வாகதா க்ரிஷ்ணன், அணுமோல் நடித்துள்ளார்கள். இயக்குனர் தயமந்தி இயக்கத்தில் 'காயல்' படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று இறுதிக்கட்ட பணிகள்  நடைபெருகிறது.



 



 



கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் இனி கதா நாயகனாக மட்டுமே நடிப்பீர்களா என்கிற கேள்விக்கு.



 



 



நான் நடிகன் நடிக்க வந்திருக்கிறேன் .இதில் எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பதுதான் நடிகனின் கடமை. இரண்டு படங்களில் கதா நாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது நடித்தேன். வில்லன் வேடம் வந்தாலும் நடிப்பேன். கதைதான் கதாபாத்திரங்களை தீர்மானிக்கிறது, அந்த கதாபாத்திரங்களில் நமக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதைதான் இயக்குனர்கள் நமக்கு கொடுக்கப்போகிறார்கள், நமக்கு பொருத்தமானதாக இருக்கும்பட்சத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன்.

மொத்ததில் நல்ல நடிகனாக இருக்கவேண்டும் அவ்வளவுதான் 'இயக்குனர்களின் நடிகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் லிங்கேஷ்.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா