சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன் நடித்துள்ள கொட்டேஷன் கேங் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
Updated on : 30 March 2022

நடிகர் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள,  ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



 



இயக்குநர் விவேக் குமார் கண்ணன் கூறுகையில், “எங்கள் கனவுத் திரைப்படமான ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில், ஒரு குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த வாரம் தான் திட்டமிட்டபடி  படப்பிடிப்பை முடித்தோம்,  இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெரும் சவாலாக இருந்தது. காஷ்மீரில் உள்ள ரோரிங் லயன்ஸ் நிறுவனம் மற்றும் மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மற்ற யூனிட்கள் இந்த முக்கியமான தொற்றுநோய்க் கட்டத்திற்கு மத்தியில், இந்தத் திரைப்படத்தை முடிப்பதில் தூண்களாக இருந்ததற்காக படக்குழு மற்றும் தயாரிப்பு பிரிவுக்கு நன்றி. ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோருடன்  மற்ற காஷ்மீர் மற்றும் மும்பை நடிகர்களின் நடிப்பு படத்திற்கு மிகபெரும் பலத்தை தந்துள்ளது. தற்போது, போஸ்ட் புரடக்சன் வேலைகள் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.



 



மேலும் அவர் கூறுகையில்.., காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட பல மொழி க்ரைம்-த்ரில்லர், திரைப்படம் கொட்டேஷன் கேங் என்றார்.  இப்படம் நடிகர்களின் சிறப்பான நடிப்பையும், தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறந்த திறமையையும் கொண்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து, டிரெய்லர், ஆடியோ மற்றும் தியேட்டர் ரிலீஸ் தேதி குறித்த மற்ற அறிவிப்புகளை வெளியிட கோட்டேஷன் கேங் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.



 



புகழ்பெற்ற முதன்மை நடிகர்களுடன், ரெட் ரெயின் புகழ் விஷ்னோ வாரியர், ஜீ புகழ் அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கரண்டே, சதீந்தர் & ஷெரின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.



 



‘கொட்டேஷன் கேங்’ படத்தை  எழுதி, இயக்குவதோடு, விவேக் குமார் கண்ணன்  Filminati Entertainment நிறுவனத்தின் காயத்திரி சுரேஷ் ஆகியோருடன் Sri Guru Jothi Films சார்பில் G. விவேகானந்தன் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா