சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

'ஓ மை டாக்' வெளியீட்டினை அறிவித்தது பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னர்
Updated on : 06 April 2022

இந்தப் படம், பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே, 240 நாடுகளிலும் மற்றுமுள்ள பிரதேசங்களிலும் ஏப்ரல் 21ம் தேதி வெளிவர இருக்கிறது.



 



மும்பை ஏப்ரல் 6, 2022 :  இன்று பிரைம் வீடியோ உலகப் புகழ்பெற்ற, வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த படமான " ஓ மை டாக்"(oh my dog) 21 ஏப்ரல் 2022 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது.  இந்த படம் " 2D  என்டர்டெய்ன்மென்ட்" பேனரில் தயாரிக்கப்பட்டு,  சரோவ் ஷண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது.  இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த(தாத்தா, அப்பா, மகன் மூவரின்)  கதாபாத்திரங்களின் புகழ்பெற்ற உண்மையான குடும்பக் கதையாகும்.  அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் பிரத்யேகமாக தமிழ், தெலுங்கு மொழிகளில்  மட்டும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் கண்டு மகிழலாம்.



 



இப்படம் ஒவ்வொரு குழந்தையும், செல்லப்பிராணியை  விரும்புபவர்களும் கண்டிப்பாகப்  பார்க்க வேண்டிய ஒன்று.  " ஓ மை டாக்" அர்ஜூன் (அர்னவ்) மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய உள்ளத்தை தொடும் கதையாகும்.  ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் பார்த்து மகிழவேண்டிய  படம்.  எல்லா குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாபாசங்கள், முதல் முக்கியத்துவம், கவனிப்பு,  தைரியம், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற காதல் மற்றும் விஸ்வாசம் போன்ற எல்லா உணர்வுகளின் கலவையாக உள்ளது இப்படம்.

இந்த படத்தை தயாரித்தவர்கள் ஜோதிகா-சூர்யா, மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் RB டாக்கீஸின் எஸ் ஆர். ரமேஷ் பாபு.  இசையமைப்பு நிவாஸ் பிரசன்னா மற்றும் ஒளிப்பதிவு கோபிநாத் ஆகியோர் செய்துள்ளனர்.  இப்படம் பிரைம் வீடியோ மற்றும் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய இருவருக்குமிடையே 4-பிலிம் வியாபாரத்தின் ஒரு பகுதியாகும். 



 



பிரைம் வீடியோவின் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் 21 ஏப்ரல் 2022 அன்று, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, வரும் கோடை விடுமுறையை வேடிக்கையாகவும், குடும்பங்களை மகிழ்விக்கும் நோக்கத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா