சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும்  'பேப்பர் ராக்கெட்'
Updated on : 09 April 2022

ஜீ5 நிறுவனம் தமிழ் மொழியில், தனது வெற்றியை கொண்டாடும் வகையில், ‘ஜீ5 தளத்தில் இந்த  அடுத்தடுத்து வெளிவரவுள்ள பிரமாண்ட படைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் நிகழ்வாக “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வின் போது பிரபல இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  'பேப்பர்  ராக்கெட்' எனும் வெப் சீரிஸ் பிரபலங்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் முதல் வெப் சீரிஸ் இதுவென்பது குறிப்பிடதக்கது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரிக்கிறார்.



 



காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இந்த தொடரில் K.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், தீரஜ், நாகிநீடு, V. சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோருடன் G.M.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி மற்றும் பல பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்து  நடிக்கின்றனர்.



 



இந்தத் தொடரின் தலைப்பை வெளியிட்ட நிகழ்வோடு  முத்தாய்ப்பாக   முதல் சிங்கிள் ட்ராக் ‘காலை மாலை’ பாடல் வெளியிடப்பட்டது. விவேக் வரிகளில் சித் ஸ்ரீராமின் குரலில், தரனின் மெல்லிசையில் மனதை வருடும்  இப்பாடல் உருவாகியுள்ளது. கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் பாடலின் காட்சிகள் இந்தப் பாடலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.



 



இந்தத் தொடரில் தரன் குமார், சைமன் K கிங் மற்றும் வேத்சங்கர் என மூன்று இசையமைப்பளர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இது இந்த வெப் சீரிஸில் அதிகமான பாடல்கள் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. நடிகை ரம்யா நம்பீசன், அலெக்ஸாண்ட்ரா ஜாய், கேசவ் ராம், சோனி டாஃபோடில், சனா மொய்டுட்டி, ஷில்வா ஷரோன், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ஹரிசரண் சேஷாத்ரி மற்றும் ஸ்ரீஷா மோகன்தாஸ் ஆகியோர் பின்னணிப் பாடுகிறார்கள். விவேக் தவிர கு.கார்த்திக் மற்றும் மணி அமுதவன் இத்தொடரில் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.



 



தொழில் நுட்ப குழுவில்



 



ரிச்சர்ட் M நாதன் (ஒளிப்பதிவு), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டிங்), சக்தி வெங்கட்ராஜ் M (கலை), சைமன் K கிங் (பின்னணி இசை), சுதேஷ் குமார் (ஸ்டண்ட்ஸ்), சந்துரு KR(சிஇஓ), செந்தில் குமரன் S (நிர்வாகத் தயாரிப்பாளர்), ரமீஸ் ராஜா . I (லைன் புரடியூசர்), தபஸ் நாயக் (சவுண்ட் எஃபெக்ட்ஸ் & மிக்சிங்), ஷேக் பாஷா (மேக்கப்), கவிதா J (காஸ்ட்யூம் டிசைனர்), வீரபாபு G (காஸ்ட்யூமர்), தீப்தி புஷ்பாலா (டப்பிங் இன்ஜினியர்), லீலாவதி (நடன அமைப்பு), சதீஷ் - AIM ( மக்கள் தொடர்பு), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைனர்),



 



கிருத்திகா உதயநிதி, அசோக். R (வசனம்), R.ஹரிஹர சுதன் / லார்வன் ஸ்டுடியோஸ் (VFX), ராஜ் குமார் R (கலரிஸ்ட்), மற்றும் வொயிட் லோட்டஸ் டிஜிட்டல் ஸ்டுடியோ (DI) ஆகியோர் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றுகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா