சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

சிலம்பரசன் TR வெளியிட்ட நடிகர் சதிஷ் நடிக்கும் 'சட்டம் என் கையில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
Updated on : 09 April 2022

க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இப்படத்தை ‘சிக்சர்’ படப்புகழ் இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார்.



 



படம் குறித்து இயக்குநர் சாச்சி கூறியதாவது… 



 



பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என் முதல் படம் முழுக்க காமெடியை சுற்றியதாக இருக்கும், ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இரவில் நடக்கும் கதை, நாயகன் டிரங்க் & டிரைவ் கேஸில் போலீசிடம் மாட்டுகிறார், அந்த இரவில் அவருக்கு நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம். மென்மையாக ஆரம்பிக்கும் படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் பரபர திரில்லர் அனுபவமாக மாறிவிடும். நடிகர் பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனைத்து மக்களையும் எளிதில் கவரும் படியாக, கமர்ஷியல் திரில்லராக இப்படம் இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஒரு பிரபலம் வெளியிட்டால் நன்றாக இருக்குமென நடிகர் சிலம்பரசன் TR அவர்களை அணுகினோம். உடனே ஒப்புக் கொண்டு, படத்தை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் எங்களது படக்குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா